படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்
Monday, December 24, 2007
இனி வரும் நாட்களும் இனிதாகட்டும்
-இந்த ஆண்டில் எனக்குப் பிடித்த சில பாடல்கள்-
(உனக்கு)
Alicia Keys, ஒரு நேர்காணலில், தான் எப்போதும் தனது கவலைகள் இன்னபிறவற்றை தனக்குள்ளே பூட்டிவைத்தபடி நண்பர்களோடு/உறவுகளோடு பகிர்ந்துகொள்ளாத அழுத்தத்திற்குட்பட்ட ஒரு பெண்ணாய் ஒரு பொழுதில் இருந்திருக்கின்றேன் என்று கூறியிருந்தார். Alicia Keys மட்டுமில்லை Mary J. Blige கூட, இன்றைய காலகட்டத்தில் சந்தோசமாய் இருக்கும்போது, ஏன் உங்களின் (சென்ற வாரம் வெளிவந்த) இறுவட்டுக்கு Growing Pains என்று பெயர் வைத்திருக்கின்றீர்கள் என்று BETயில் கேட்கப்பட்டபோது, பழைய துயரங்களிலிருந்து வெளிவருவது அவ்வளவு இலகுவானது அல்ல, அத்தோடு இன்னொரு நிலைக்கு நகரும்போதும் அங்கும் வேறுவிதமான துயரங்கள் இருக்கின்றதெனக்கூறியிருந்தார்.
Alicia Keysயின் எனக்குப் பிடித்த இன்னொரு பாடலை இங்கே அழுத்திப் பார்க்கலாம்
.
(எனக்கு)
ஆடுவதைத் தவிர வேறொன்றும் வேண்டாம் என்றால் Soulja Boysன் இந்தப்பாட்டுக்குள் நுழைந்துவிடலாம். இந்த ஆண்டில் hip-hop உலகில் இந்தப்பாடலின் நடன அசைவுகள்தான் அதிகம் கவனம் பெற்றது.
இந்த நடனத்தை எவ்வாறு ஆடலாம் என்று ஆடியவர்கள் விளக்கந்தருவதை இங்கே பார்க்கலாம்.
. Soulja gal ஜத் தேடுபவர்களுக்கும் ஒரு பாடலைப் பாடியிருக்கின்றார்கள். விரும்பியவர்கள் அதில் நுழைந்து தெளியலாம் அல்லது மூழ்கலாம்.
(நமக்கு)
புது வருடத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருப்போம் அல்லவா? இந்தாருங்கள் Kanye West ன் Good Life. 50CENT ன் இறுவட்டும், Kanye Westன் இறுவட்டும் ஒரே நேரத்தில் வந்து Kanye Westன் இறுவட்டுகள் அதிகம் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. Outspoken ஆகவும், சிலவேளைகளில் கோமாளித்தனங்களை Kanye West காட்டிக்கொண்டிருந்தாலும், பாடல்களில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை ஒப்புக்கொள்ளத்தான்வேண்டும்.
Kanye West ஆல் Lupe Fiasco வெளியுலகிற்கு விரைவில் தெரியவந்தாலும், எதிர்காலத்தில் நல்லதொரு ராப்பராக வரக்கூடியவர். சற்று Kanye Westன் பாதிப்பு இவரது பாடும் முறையில் இருந்தாலும், இரசிக்க முடிகின்றது.
அரசியல் பேசுகின்ற இந்தப்பாடலையும் நேரமிருப்பின் கேட்டுப்பாருங்கள்
. நெற்றியில் அறைகின்ற மாதிரி இருக்கும்.
இந்தப்பாடலை இரசிதேன் என்பதைத் தவிர இதில்ல் சொல்வதற்கு வேறொன்றுமில்லை. டீஜேயொருவர் தயாரிப்பும் (DJ Khalid), ராப் பெருந்தலைகள் பலர் இப்பாடலில் தலைகாட்டுவதாலும் பிடித்திருக்ககூடும்.
-நண்பர்கள அனைவருக்கும் இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்-
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)