Showing posts with label Grammy Night. Show all posts
Showing posts with label Grammy Night. Show all posts

Monday, February 09, 2009

Grammyயில் பாடிய‌ முத‌ல் த‌மிழ்ப்பெண்

மாதங்கி 'மாயா' அருள்பிரகாசம்




மியா (M.I.A) Paper Planes என்ற‌ பாட‌ல் கிராமியில், Record of the Year விருதுக்காய் பரிந்துரைக்க‌ப்ப‌ட்டாலும், அஃதொரு பெரிய‌ வ‌கை விருதாகையாலும், மியாவின் தீவிர‌ அர‌சிய‌ல் நிலைப்பாட்டாலும் அவ‌ருக்கு விருது கிடைப்ப‌த‌ற்கான‌ வாய்ப்பு மிக‌ அரிதே என்று ந‌ம்பியிருந்தேன். விருது கிடைத்த‌ல்/கிடைக்காதிருத்த‌ல் என்ற‌ நிலைப்பாட்டுக்கு அப்பால், கிராமிக்கு ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌ முத‌ல் த‌மிழ‌ர் என்ற‌ பெருமை மியாவுக்குரிய‌து. Rap மிக‌ப்பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ JayZ, Kanye West, T.I, Lil Lil Wayne போன்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ஒரு த‌னிப்பெண்ணாய் சேர்ந்து பாடிய‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

Slumdog Millionaire ப‌ட‌த்தின் இசையை விய‌ந்தெழுதும் த‌மிழ‌க‌ப் ப‌த்திரிகைக‌ள் ஏ.ஆர்.ர‌ஹ்மானைப் பாராட்டிய‌வ‌ளவுக்கு, அப்ப‌ட‌த்தில் ப‌ங்காற்றிய‌ மியா ப‌ற்றிச் சிறு குறிப்புக்கூட‌ எழுத‌வில்லை என்ப‌து ஒரு இருட்ட‌டிப்பு என‌வே எடுத்துக்கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து. Slumdog Millionaire, Sound Trackல் மூன்று பாட‌ல்க‌ளில் மியாவின் ப‌ங்க‌ளிப்பு இருப்ப‌துட‌ன், ப‌ட‌த்தில் முத‌லில் வ‌ரும் 'ஓ சாயா' பாட‌லில் ஏ.ஆர்.ஆரோடு மியா சேர்ந்து பாடியிருக்கின்றார் என்ப‌தும், அப்பாட‌ல் ஒஸ்காருக்கு பாட‌லுக்கான‌ விருதுக்கு ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தும் க‌வ‌ன‌த்திற்குரிய‌து. கோல்ட‌ன் குளோப்ஸ் விருதைப் பெற்ற‌ ஏ.ஆர்.ர‌ஹ்மான் கூட‌, ஏற்புரையில் மியாவுக்கு ந‌ன்றி கூறியிருப்ப‌தை நினைவிற் கொள்ள‌வேண்டும். சாரு போன்ற‌ 'க‌ல‌க‌க்கார‌ர்க‌ள்' கூட‌, த‌ங்க‌ள் க‌ட்டுரையில் மியா ப‌ற்றி எந்த‌க் குறிப்பையும் எழுத‌வில்லை. எமினெமின் பாட‌ல்க‌ளை விட‌ வலிமையான‌ அர‌சிய‌ல் பேசும் மியாவின் பாட‌ல்க‌ளை மிஸ்ர‌ர் பெருமாளுக்கோ அல்ல‌து ஜ‌ன‌நாத‌னுக்கோ எந்த‌ப் ப‌தின்ம‌க்காரியும் அறிமுக‌ப்ப‌டுத்த‌வில்லை என்ப‌து 'த‌மிழ்ச்சூழ‌லில்' க‌வ‌லைக்குரிய‌ விட‌யந்தான்.


Paper Planes by M.I.A

மேற்குல‌கில் ஏ.ஆர்.ஆரை விட‌ மியாவையே நிறைய‌ப்பேர் அறிந்திருக்கின்றார்க‌ள் என்ப‌தும், மேலைத்தேய‌/கீழைத்தேய‌ இசைக்க‌ல‌ப்பில் ஒரு புதுவித‌ இசைப்பாதையில் ப‌ய‌ணிக்க‌, மியாவின் பாட‌ல்க‌ள் ஒரு பாதைய‌மைத்துக்கொடுப்ப‌தை ‍-முக்கிய‌மாய் இருவேறு க‌லாசார‌த்தில் உழ‌ன்றுகொண்டிருக்கும் எம்மைப்போன்ற‌வ‌ர்க‌ளுக்கு‍- மியாவின் பாட‌ல்க‌ள் மிக‌ நெருக்க‌மாக‌ இருப்ப‌தைச் சுட்டிக்காட்ட‌ வேண்டியுள்ள‌து.



M.I.A குறித்து ஏற்க‌ன‌வே ப‌திவிலிட்ட‌வை:

I’M ARMED AND I’M EQUAL

மாயா அருள்பிரகாசம் (M.I.A)