Wednesday, August 15, 2007

மாயா அருள்பிரகாசம் (M.I.A)

எம்.ஐ.ஏ யின் (M.I.A), இரண்டாவது இறுவட்டான 'கலா' வருகின்ற வாரம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் வெளியாகின்றது (ஜப்பானில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது). தனது தந்தையின் இயக்கப்பெயரை முதல் இறுவட்டுக்கு வைத்ததுபோன்று (அருளர்), இப்போது தனது தாயாரின் பெயரை (கலா) இரண்டாவது இறுவட்டிற்கு வைத்துள்ளார்.

ஏற்கனவே முதல் இறுவட்டு வந்தபோது -வெளியிடப்பட்ட நாளன்றே- கடை திறந்த காலையிலேயே வாங்கியது மாதிரி (இவ்விறுவட்டில் வரும் அநேக பாடல்களை ஏற்கனவே கேட்டுவிட்டேன் என்றாலும்) இதையும் வாங்காமல் விடுவேனா என்ன?

Jimmy


Boys: இந்தப்பாடல் ஏற்கனவே வந்த Bird-flu beatஐ நினைவுபடுத்துகின்றது.


'கலா'வில் வரும் மேலேயுள்ள இந்த இரண்டு வீடியோ அல்பங்களோடு 'அருளரில்' வந்த இந்தப்பாடலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மாயாவின் Innocent face போய்விட்டதுபோலத்தோன்றியது. ஒரு கலகக்காரிக்கு அதுவும் நல்லதுதான்.

SunShowers


அரசியல் பாடலென மிகவும் விவாதிக்கப்பட்ட இப்பாடலில், செக் ஷேர்ட்டுக்களோடு, ரிபன்களால் இழுத்துக்கட்டப்பட்ட பின்னல்களுள்ள பெண்கள் எவரைக் குறிப்பிடுகின்றதெனச் சொல்லத்தேவையில்லை. மாயா அமெரிக்கா வருவதற்கான் விஸா பத்து மாதங்களாய்த் தடுக்கப்பட்டதற்கும், இன்னும் அவரது பெயர் சிவப்பு நாடாவில் இருப்பதற்கும் இந்தப்பாடலே முக்கியகாரணம் எனச்சொல்லப்படுகின்றது.

23 comments:

-/பெயரிலி. said...

என்னப்பூ
ஜிம்மி ஹிந்தி குர்பானி பிட்டுவிடம் பிட்டடிச்ச ரீமிக்ஸ் இல்லையே. நிச்சயமே? :-)

-/பெயரிலி. said...

சீரியஸா கேக்கிறன்; Jimmy, என்ன send off to '80's song ஓ?

கானா பிரபா said...

// -/பெயரிலி. said...
என்னப்பூ
ஜிம்மி ஹிந்தி குர்பானி பிட்டுவிடம் பிட்டடிச்ச ரீமிக்ஸ் இல்லையே. நிச்சயமே? :-)//

அப்ஜெக் ஷன் யுவர் ஆனர் ;-)

ஜிம்மி பாட்டு ( என்ன இழவெடுத்த தலைப்பு) ஏற்கனவே வெளிவந்த டிஸ்கோ டான்சர் ஹிந்தியின் தழுவல், இந்தப் படம் பிறகு நாகேசின்ர கடைக்குட்டி ஆனந்த பாபு நடிச்ச பாடும் வானம்பாடி படத்தில வந்த "அன்பே அன்பே" என்று வரும்.


மூலப் பாட்டு இதோடா
http://www.musicindiaonline.com/p/x/cU2mEKo3ud.As1NMvHdW/

மாயா தங்கச்சி

மியாக்குட்டி மாதிரி களவெடுக்ககூடாது சொல்லிப்போட்டன்

கானா பிரபா said...

சொல்ல மறந்திட்டன்

பெயரிலி அண்ணை தமிழ் ஆராய்ச்சிகள் தான் சரியா அகழ்ந்தெடுப்பார் போல, அவர் தந்த இணைப்பு குர்பானியில் வந்த வேற பாட்டு. இந்தாங்கோ மாயா சரியான இணைப்பு

http://www.youtube.com/watch?v=zLPbrSjiJI8

-/பெயரிலி. said...

கான ப்ரபோ! தாங்கள் பகிரும் மிதுன் சக்ரபோர்த்தியின் Saturday Night Fever திரைக்காவியத்தை யாம் கிழங்கனும் அறிவோம். யாம் சுட்டிக்காட்டியது பாடலோடும் கூடிய பட்டத்து மாய இளவரசியாரின் ஆடையணியலங்காரங்கள் பட்டத்து மஹாராணி சீனத்து அம்மணம் போலவே குர்பானி கொடுக்கப்பட்டதையும் குறிக்கவே என்பதறிக
:-)

மாசிலா said...

பாடல்கள் நன்றாக இருக்கின்றன. இவரைப்பற்றிய விசயங்களை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக இருந்து இருக்கும்.

பதிவிற்கு நன்றி டிசே தமிழன்.

Sri Rangan said...

மாயாவுக்குப் பின்னாலுள்ள கம்பனிகள் அவரது ஆளுமையைச் சிதறடித்து அவரைக் காணாதுபோவதற்கான முறைமைகளிற் செயற்படுவது தெரிகிறது.இது, கலகக் காரர்கள் எல்லோருக்குமான விதி.

தமிழ்ச் சினிமாவில் "நான் போகும் பாதை"என்ற படத்தை ஒரு இளைஞன்(எலும்புக்கூட்டுப் பையன்-பெயர் இப்போது ஞாபகமில்லை)மிக எழிச்சியோடு எடுத்தான்.ஆண்,பெண் இருவர்களுக்கிடையிலான உறவு எப்படியிருக்கும்-எப்படி இருக்க வேணுமென்றெல்லாம் சொல்லி,அழகாகச் சொன்னான்.ஒரே படத்தோடு காணாமற் போனான்.இதற்கு ஏ.வி.எம் நிறுவனம்தாம் காரமெனச் சொன்னார்கள்.தமிழ்ச் சினிமாவில் இப்படிக் கலகக்காரர்கள் இருக்கக் கூடாதென்பதில் ஏ.வி.எம்.மிகக் கவனமாக இருக்கென்றால்.இங்கே,சர்வதேச அளவில் மாயாவின் நிலமை புரியத் தக்கது.பாவம், அந்தப் பெண்.நெறிப்படத்த யாருண்டு-பைனாஸ்சுக்கு எவரிடவார் பணம்?-சந்தைப்படுத்தல்?ஆக,எல்லா வகை வசதியுடையவர்களுக்கு எது வேண்டுமோ-அது மாயாவிடம் வரவழைப்பார்கள் அல்லது தூக்கிக் குப்பையில் போடுவார்கள்.இந்தச் சி.டி.யோடு பெரும்பாலும் மாயா முகமிழப்பார்.அவரை ஓரங்கட்டுவதற்கான முயற்சியே இது.

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்,
அவர் பெயர் ஏதோ 'செல்வ.." என்று ஆரம்பிக்கும் என்று ஞாபகம். (சந்தியமா, துள்ளுவதோ இளமைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை :-))
(படத்தின் முடிவு கொஞ்சம் படத்திலே சொல்லிக்கொண்டு வந்த கருத்துக்கு முரணாக மேற்கு நோக்கி விமானம் ஏறுவதுப்போல இருந்தாலுங்கூட.

கானா பிரபா,
எங்கை என்ரை 'விழுந்தாலும் மீசையிலை மண் படயில்லை' சமாளிப்புக்கு ஒரு பதிலையும் காணம்? :-)

டிசே தமிழன்/ DJ said...

பெயரிலி & பிரபா: அப்படித்தான் மாயாவும் கூறுகின்றார்...

M.I.A. explained that "Jimmy Jimmy Aaja" was a track she used to dance to when she was a child. "My mum used to hire me out when I was a kid as a party buffer. It was my track that I used to do my routine to. I had a little tape recorder, and a cloak and a cardboard cut out guitar, and that was my joint." Describing the recording and writing processes, she revealed that she had already recorded the strings and other parts of the song in India, but initially didn't attempt to do "Jimmy" when she was with co-producer Switch, explaining "I had to be drunk enough to be that disco. It all came together that week." Arulpragasam wrote the song about an invitation she received from a journalist while working in Liberia, to meet him whilst covering a genocide tour.

மாயாவின் புகழை அடித்து உதைத்து புதைக்க 'எதிரிகள்' எவ்வளவு முயன்றாலும், இந்த பாடலில் வருவதுபோல ஆயிரம் கரங்கள் கொண்டு தடைகளைத் தகர்ப்போம் என்று அவரின் விசிறிகளில் ஒருவனாய் மீண்டும் விசுக்கிச் சொல்கின்றேன்.

கானா பிரபா said...

அண்ணாச்சி நான் போகும் பாதை என்று 91 ஆம் ஆண்டு ஒரு படம் வந்தது. நடித்தவர் வெற்றிவேந்தன், இசை தேவேந்திரன்.

ஒரே பெயரில் பல படங்கள் வருவதுண்டு. 91 ஆம் ஆண்டு என் காலம். அதற்கு இருபது வருசத்துக்கு முந்திய படம் ஒன்று உண்டு என்று உறுதிப்படுத்தினால் மேலதிக தகவல் தரத் தயார்.

என்னக் கொடுமை சார் இது.

மாயாவுக்கு ஜொள்ளுவிட்டு அந்தப் பொடியன் போட்ட பதிவில் நான் போகும் பாதை பேசிக்கிட்டு?

கானா பிரபா said...

நேரம் அவுசுதிரேலியாவில் அதிகால 2.11. மிச்சம் நாளைக்கு, (வேலைக்கு சிக் ;-)

-/பெயரிலி. said...

கானா பிரபா,
நன்றி நான் போகும் பாதைக்கும் சேர்த்து. அந்தக்காலத்துத்தோழர் ஒருவர்தான் காசைவிட்டு வீடீயோ எடுத்துத்தந்து பாரெண்டு படுத்திப் பார்த்தேன் என்று சொல்லமுடியாதெண்டாலுங்கூட, தனுசு வந்த நேரம் 'ஹீரோவுக்கான தகமைகள்" பேசப்பட்டபோது உந்தப்படமேதான் ஞாபகம் வந்தது.

டிசே,
உதில மாயா பாட்டை அமுக்கின இடத்தைக்கூடச் சொல்லயில்லையெண்டதை நீர் விசிறியாய்க் கண்டு கொள்ளாமலிருப்பதைக் கண்டு நெருப்பு வீசுகிறோம்.

டிசே தமிழன்/ DJ said...

/ இவரைப்பற்றிய விசயங்களை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக இருந்து இருக்கும்./

மாசிலா, மாயாவின் 'அருளர்'பற்றி இங்கொரு பதிவு முன்பு அரையும் குறையுமாய் எழுதியிருக்கின்றேன் :-).

Sri Rangan said...

//ஸ்ரீரங்கன்,
அவர் பெயர் ஏதோ 'செல்வ.." என்று ஆரம்பிக்கும் என்று ஞாபகம். (சந்தியமா, துள்ளுவதோ இளமைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை :-))
(படத்தின் முடிவு கொஞ்சம் படத்திலே சொல்லிக்கொண்டு வந்த கருத்துக்கு முரணாக மேற்கு நோக்கி விமானம் ஏறுவதுப்போல இருந்தாலுங்கூட. //


//அண்ணாச்சி நான் போகும் பாதை என்று 91 ஆம் ஆண்டு ஒரு படம் வந்தது. நடித்தவர் வெற்றிவேந்தன், இசை தேவேந்திரன்.

ஒரே பெயரில் பல படங்கள் வருவதுண்டு. 91 ஆம் ஆண்டு என் காலம். அதற்கு இருபது வருசத்துக்கு முந்திய படம் ஒன்று உண்டு என்று உறுதிப்படுத்தினால் மேலதிக தகவல் தரத் தயார்.//இரமணி நீங்கள் சொல்லும் படம்தாம்.அந்தப் பையன் ஆய்விலீடுபடும் மேற்குலக விஞ்ஞானிக்கு உதவியாகச் செல்வதாகப் படம் முடியும்.இதில், எனக்கும் உடன்பாடில்லாதமாதிரியானவொரு உணர்வுண்டு.ஆனால், பெரும் தாக்கஞ் செய்தான்.எல்லோரும் அந்தப்படத்துக்குக் கவிதைப் படம் என்ற பெயரும் சூட்டினார்கள்.அவனது காட்சியொன்று இன்னும் நெஞ்சில் படிந்தபடி.இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை பற்றிய விசாரிப்பில்,தனது சட்டையை கழற்றி,"இதோ பார் எனது உடலைப் போல" அது இருப்பதாகச் சொன்னான்.சரியான புத்தியுள்ளவன்.ஏனிப்படி ஒதுங்கினான் என்பது பெரிய கேள்வி.அவனிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தேன்.மகேந்திரனுக்குப் பின்பு இவனே தமிழ்ச் சினிமாவில் அதிர்வுகள் செய்வான் எனக் கனவு கண்டேன். எல்லாவற்றையும் பெரு முதலை ஏ.வி.எம்.மடக்கிப் புரட்டிப்போட்டது!


கானாப் பிரபா,நீங்கள் சொல்லும் பையன்தாம்.அவனது படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும்.பொதுவாக இளைஞர்கள் பலர் பார்க்கவேண்டிய படம்.அவனது தமிழ்வாழ்த்துப்பா மிக அருமை.அந்தத் தமிழ் வைரமுத்துவைமீறியது.வனப்பாக எழுதியிருந்தான்.அந்தப்படம் வந்த தரணத்தில்தாம் நான் காதலித்து,91 டிசெம்பரில் மணம் முடித்தேன்.அப்போது அவனது படமும்,அந்தக் காதல் குறித்த அவனது பார்வையும் மிகப் பெரு விருப்பாக இருந்தது.இப்போதும் இனிக்கிறது அந்தப்படம்.ஆனால், அதன் பிரதி இல்லை-எங்கும் கிடைப்பதுமில்லை!

தகவலுக்கு நன்றி பெயரிலி-பிரபா.

டிசே தமிழன்/ DJ said...

சிறிரங்கன், உங்களின் அநேக கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன். இரண்டாவது இறுவட்டிற்கான வீடியோ அல்பங்கள் வெகுசன ஊடகங்களை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பார்த்தபோது எனக்கும் சோர்வே வந்திருந்தது. எனினும் மாயா சில விடயங்களில் இன்னும் மாறாது உறுதியாக இருப்பதால் முற்றுமுழுதாக அவரில் நம்பிக்கையை இன்னும் நான் இழக்கவில்லை. இந்தப்பாடல் கூட, ரூவாண்டா, கொங்கோ, டர்ஃபர் (சூடான்) குறித்துத்தான் பேசுகின்றது. 'கலா' இறுவட்டைக் கேட்டுவிட்டு, -நான் வாசித்தவைகளையும் சேர்த்து-மாயாவின் அரசியல் புள்ளிகள் குறித்து ஒரு பதிவு எழுதும் எண்ணம் உண்டு. பார்ப்போம்.
.........
பெயரிலி: அவரது (M.I.A) இணையத்தளத்திற்குச் (miauk.com) சென்று தோண்டிப்பார்த்தால், இந்த அசல் பிரதி குறித்து எங்கேனும் சொல்லியிருக்கின்றாரா எனப் பார்க்கலாம் என்றால், இப்போது பாண்ட்வித் பிரச்சினையால் அந்தத்தளத்தைப் பார்க்கமுடியாது இருக்கின்றது. பார்ப்போம், அக்கா, இந்தப்பாடல் குறித்து -Kala- இறுவட்டிலாவது credit கொடுக்கின்றாரா, இல்லையா என்று.

அய்யனார் said...

தகவல்களுக்கு நன்றி டிசெ,பெயரிலி,பிரபா,ரங்கன் அடிக்கடி இது போல கதையுங்கோ பின்னால வரும் என் போன்ற பொடிசுகளுக்கு உதவுமில்லையா :)

கானா பிரபா said...

அய்யனாரே

என்ன கிண்டலா?

நான் பெயரிலி, சிறீரங்கன் அண்ணைக்கு அடுத்த காலம். ஏதோ தெரிஞ்ச சிலதை வச்சுக் காலம் தள்ளுறன் ;-))

டிசே தமிழன்/ DJ said...

அய்யனார், பழைய விடயங்களை நண்பர்கள் பேசும்போது ஆவலாக இருந்து வேடிக்கை பார்ப்பேன். அது போலத்தான் இப்போதும். அத்தோடு நல்ல விசயமொன்று நடந்திருக்கின்றது பிரபா இனி பெடியன் மாதிரி பின்னூட்டம் எழுதமுடியாது எனென்றால் அவரது உண்மையான வயதுதானே 'மியாக்குட்டி' மாதிரி வெளிவந்துவிட்டதே :-).
......
சரி எல்லோரும் படத்தைப் பற்றிப்பேசும்போது நானும் எனக்குத் தெரிந்த படமொன்றைப் பற்றிப்பேசுகின்றேன் :-). நேற்று கரண் நடித்த 'தீ நகர்' பார்த்துக்கொண்டிருந்தேன். வழமையான படந்தான். ஆனால் mass heroதனம் குறைவு என்றபடியால் படம் முடியும்வரையாவது பொறுமையாக இருந்து பார்க்கமுடிந்திருந்தது.. பிற்பகுதியில் மாணவர் அமைப்புக்களின் பலத்தால் கொஞ்சம் அரசியலை அசைத்துப்பார்ப்பதாய்ப் போகும். இவ்வாறான காட்சிகள வரும்போது -ஏனோ அறியாமலே- நகைச்சுவை காட்சிபோலத்தான் பார்த்துக்கொண்டிருப்பேன். நேற்றைக்கு, இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஈழத்தில் ஆயுதங்கள் தாராளமாய் புழங்காத காலத்தில் பல மாணவர்கள் இப்படித்தானே மக்களிடையே பெரும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்கள் என்றமாதிரி சிந்தனை விரிந்திருந்தது. ஆனால்,அந்த சம்பவங்கள், உழைத்த மாணவ, மாணவிகள் பற்றியெல்லாம் அதிக குறிப்புக்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதுதான் எவ்வளவு துயரமானது (சில முன்னாள் இயக்க நண்பர்கள் அந்தக்காலங்களை பேச்சினிடையே சொல்லும்போதே, அட இப்படியெல்லாம் இவர்கள் இந்தளவு ஆபத்துக்களிடையே களப்பணி செய்தார்களா என்று வாய் பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்பேன்.).

'தீ நகர்' படத்தில் ஒரு பிழையையும் கண்டுபிடித்தேன். அதில் வரும்காட்சியொன்றில் 'இருட்டென்பதுகுறைந்த வெளிச்சம்' என்றொரு வசனம் வருகின்றது. இருட்டென்பது குறைந்த வெளிச்சம், அப்படி யாரோ சொன்னார்கள் என்று விட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் அப்படி 'பாரதியார் சொன்னார்' என்று சொன்னதுதான் தவறு. 'இருளென்பது குறைந்த ஒளி' பிரமீளின் கவிதையில் வருவதல்லவா?

டிசே தமிழன்/ DJ said...

இன்று வாங்கிய 'கலா' இறுவட்டில், Jimmy பாடலுக்கு credit கொத்திருக்கின்றார்.
Incorporates elements of Jimmy Jimmy Aaya Aaya from the film 'Disco Dancer', written by Bappl Lahiri, published by saregama.

அதேபோன்று Bamboo Banga பாடலைக் கேட்டபோது,இந்த இசைத்துண்டுகள் 'தளபதி' படத்திலிருந்து அல்லவா தூக்கியிருக்கின்றாரென நினைத்து ஆரம்பத்தில் எழுத விரும்பியபோதும் - இறுவட்டைப் பார்த்தபின் எழுதுவோம்- என்று நினைத்த பாடலிற்கும் சரியான முறையில் credit கொடுத்திருக்கின்றார்.
'Kaattukuyillu' from the film "Dalapathi', written and performed by Illayaraja, licenced courtesy of GV Films Ltd .
....
ஆக,இன்னும் மாயா நம்ம பெண்ணுதான் என்று நிரூபித்து இருக்கின்றார் :-).

டிசே தமிழன்/ DJ said...

To listen BAMBOO BANGA:
http://www.youtube.com/watch?v=h8bV2hu3bME

-/பெயரிலி. said...

நன்று நன்றி

வி. ஜெ. சந்திரன் said...

மாயா வை பற்றி அடிக்கடி தகவல்களை பகிர்வதற்கு நன்றி


//தகவல்களுக்கு நன்றி டிசெ,பெயரிலி,பிரபா,ரங்கன் அடிக்கடி இது போல கதையுங்கோ பின்னால வரும் என் போன்ற பொடிசுகளுக்கு உதவுமில்லையா :) //


:) :)


//நான் பெயரிலி, சிறீரங்கன் அண்ணைக்கு அடுத்த காலம். ஏதோ தெரிஞ்ச சிலதை வச்சுக் காலம் தள்ளுறன் ;-)) //

நாங்களாவது மலைநாடான், -> கானா பிரபா எண்டு மலைநாடானை விட உங்கடை வயதை கொஞ்சம் குறைச்சு சொன்னம்.

அய்யனார் உண்மையை போட்டு உடைச்சு போட்டார். இனியும் மறைக்க கூடாது கண்டியளோ :)

டிசே தமிழன்/ DJ said...

சந்திரன், கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வரத்தானே வேணும். பிரபா இதுக்காய் எல்லாம் அழககூடாது சரியோ :-).