Sunday, March 04, 2007

மியா (M.I.A)

'they wanna check my papers
see what I carry around
credentials are boring
I burnt them at the burial ground
don’t order me about
I’m an outlaw from the badland...'

-M.I.A on bird-flu

மியாவை (M.I.A) ஆரம்பத்தில் அறிந்தபோதும், பிறகு அவரது இறுவட்டைக் கேட்டபோதும் மியா தமிழ் இசைக்கலாசாரத்தை இன்னொரு தளத்துக்கு நகர்த்துவார் என்று நினைத்திருந்தேன். அவரது 'அருளர்' இறுவட்டில் தமிழில் intro வருவதும், வீணை போன்ற இசைக்கருவிகள் பாவிக்கப்பட்டதும் குறிப்பிட்டத்தக்கது.

இதோ மியாவின் bird-flu பாடல் கானா இசையோடு வந்திருக்கின்றது. இசை மட்டுமல்ல, படமாக்கப்பட்டதும் அந்த கானாவைப் பாடிக்கொண்டிருக்கின்ற மக்களை உள்ளடக்கித்தான் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாயா தனது பாடல்களை காட்சிப்படுத்தும்போது 'அழகு/அழகியல்' என்று இதுவரை மேற்கத்தைய பாடல்களில் கட்டியமைக்கப்பட்டதை மறுதலித்தபடியே இருக்கின்றார். இந்தப்பாடலில் வரும் மக்களைப்பார்க்கும்போது அது இன்னும் தெளிவாகும்.

உடுக்கை/பறை அடிகள் அதிர அதிர நாம் நமது மண்ணுக்குப்போன மாதிரியான உணர்வு. பாட்டின் இடையில் வரும் வரிகளிலும், படமாக்கப்பட்டதில் இறுதியில் தெரிவதும் 'எவர்கள்' என்பதில் மியா மீண்டும தனது அரசியலை/ சார்பு நிலையை வெளிப்படையாகக் கூறுகின்றார்.

'most of us stay strong
s*** don’t really bound us
then I go on my own
making bombs with rubber bands'





-----------------
மியாவின் தமிழ்க்குரலோடு சிறுமிகளின் விளையாட்டு.


------------------
இந்த ஞாயிறு ஆடல் பாடலுடன் கழியவேண்டும் என்று விரும்பின் மியாவின் இந்த galang remixஐ ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.


நன்றி:http://www.myspace.com/mia

2 comments:

சோமி said...

நன்றி டிசே.....எனக்கு நிறைய நிறையப் பிடிச்சிருந்தது என்பதைவிட ஈர்த்துவிட்டது என்று கூறலாம். அந்தப் பொண்ணை உண்மையிலேயே பாரட்ட வேணும். புலம்பெயரலின் பின் நம் அடுத்தலமுறையினருக்கும் எமது சமுகத்துகுமான ஊடாட்டம் பற்றிய கேள்விகளுக்கு இதுபோன்ற இளம் தலமுறையினரின் வரவு நம்பிக்கைதருகிறது.

நடுவே வந்த காட்சிகளையும் இறுதியில் வந்த காட்சியையும் நானும் பார்த்தேன்.

இளங்கோ-டிசே said...

நன்றி சோமி.
.....
இந்தப்பாட்டோடு இன்னும் சில ஒளிப்படத்துண்டுகளைச் சேர்த்துள்ளேன்.