Monday, August 09, 2010

M.I.A, 'Born Free', YouTube: ஓர் எதிர்வினை

இந்த‌ எதிர்வினைக்கான‌ கார‌ண‌ங்க‌ளை அறிந்துகொள்ள‌ இங்கே முத‌லில் சென்று வாசிக்க‌வும்.

சுரேஷ், உங்க‌ளோடு ப‌ல‌புள்ளிக‌ளில் உட‌ன்ப‌டுகிறேன். முக்கிய‌மான‌ யூரீயூப்பிற்கான‌ வ‌ரைமுறைக‌ளிலிருந்து, அவை எப்ப‌டிச் ச‌ட்டத்திற்கு ப‌தில்சொல்ல‌வேண்டியிருக்கிற‌து என்ப‌துவ‌ரை. மேலும் நாம் வெளியே ஆடைக‌ள் போட்டுக்கொண்டு செல்வதுபோல‌ 'எல்லோருக்கும்' பொதுவாக‌ப் புழ‌ங்க‌க்கூடிய‌ ஒரு த‌ள‌மாக‌ அதை ஆக்குவ‌து என்ப‌தும் ஏற்றுக்கொள்ள‌க்கூடிய‌து.

யூரியூப்போடு முர‌ண்ப‌டும் அல்ல‌து உங்க‌ளோடு முர‌ண்ப‌டும் சில‌ புள்ளிக‌ளை முன்வைக்கிறேன்

(1) Videos that are considered to contain potentially offensive content are available only to registered users 18 and older. (From wikipedia)
அதாவ‌து நாம் விடீயோக்க‌ளை யூரீயூப்பில் சேர்க்கும்போது நாம் 18 வ‌ய‌திற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ என்று கேட்டு எம்மை யூரீயூப் அங்க‌த்துவ‌ராக‌ ஏற்றுக்கொள்கிற‌து. அவ்வாறான‌ 18 வ‌ய‌துக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விரும்பினால் இவ்வாறான‌ ச‌ர்ச்சைக‌ளுள்ள‌ விடீயோக்க‌ளை பார்க்க‌ யூரீயூப் அனும‌திக்கிற‌து. ஆனால் மாயாவின் பாட‌லுக்கு (at the initial place) அந்த‌ அனும‌தி த‌ர‌ப்ப‌ட‌வில்லை. அதை நீங்க‌ளும் ஒப்புக்கொண்டிருக்கின்றீர்க‌ள் என‌ நினைக்கிறேன்.

(2) எப்போதும் பெருநிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ற்றி நாம் ச‌ந்தேக‌த்தோடு அணுக‌வேண்டியிருக்கிற‌து என்ப‌தை நான் உங்க‌ளுக்குச் சொல்ல‌த்தேவையில்லை. 2006ல் யூரீயுப் விற்க‌ப்ப‌ட்ட‌போதே 1.26 பில்லிய‌ன் டொலர்ஸ். இப்போது கூகிள் எனும் பெருநிறுவ‌ன‌த்தால் நிர்வ‌கிக்க‌ப்ப‌டுகிற‌து. இப்பெருநிறுவ‌ன‌ங்க‌ள் தங்க‌ளுக்கு விள‌ம்ப‌ர‌மும் இலாப‌மும் கிடைக்கும் என்றால் ச‌ட்ட‌த்தை எளிதாக‌ மீறும். நீதிம‌ன்ற‌த்திற்குப் போவ‌தெல்லாம் இவைக்கு 'ஜூஜூப்பி'. என‌வே நீங்க‌ள் யூரீயூப் எப்போதும் ச‌ட்ட‌த்தோடு ஒத்துப்போகும், ச‌ட்ட‌த்திற்குப் ப‌ய‌ப்பிடும் என்று நீங்க‌ள் தொட‌ர்ந்து வ‌லியுறுத்துவ‌து சிறுப்பிள்ளைத்த‌ன‌மாக‌ இருக்கும்.

நேற்று சிபிசி தொலைக்காட்சியில் அலாஸ்காவில்(Prince William Sound)  Exxon சிந்திய‌ எண்ணெய் ப‌ற்றிய‌ விப‌ர‌ண‌ப்ப‌ட‌ம் பார்த்தேன். நீர் மாச‌டைந்து மீன்பிடிச்ச‌மூக‌த்தின் வாழ்க்கை பாதிக்க‌ப‌ப்ட்டதைத் தொட‌ர்ந்து 3 வ‌ருட‌த்தின்பின் 5 பில்லிய‌ன் டொல‌ர்ஸ் ந‌ஷ்ட ஈடாக‌க்கொடுக்க‌ச் சொல்லி நீதிம‌ன்ற‌ம் உத்த‌ர‌விட்ட‌போதும் எக்ஸோன் கிட்ட‌த்த‌ட்ட‌ 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ வ‌ழ‌க்கை அந்த‌ நீதிம‌ன்ற‌ம் இந்த‌ நீதிம‌ன்ற‌ம் என்று இழுத்த‌டித்திருக்கிற‌து. வ‌ழ‌க்கிற்காய‌ Exxon செல‌வ‌ழித்த‌தே பில்லிய‌ன்க‌ளைத் தாண்டும். ஆனால் அந்த‌ மீன்பிடிச்ச‌மூக‌ம் நிறைய‌ இழ‌ந்திருக்கிறது. வாழ்வாதார‌ங்க‌ள் இழ‌ந்திருக்கின்றார்க‌ள். 15பேருக்கு மேல் த‌ற்கொலை செய்திருக்கின்றார்க‌ள், அவ‌ர்க‌ளின் முன்னாள் மேய‌ர் உட்ப‌ட‌. மேலும் 20 வ‌ருட‌த்திற்குப் பிற‌கு கொடுக்கும் 5 பில்லிய‌ன் டொல‌ரால் என்ன‌ கிடைக்க‌ப்போகிற‌து. இப்போது எண்ணெய் க‌ரைக‌ள் எங்கும் ப‌டிந்துவிட்ட‌பின்னும் மீன்க‌ளை அழித்த‌பின்னும்?  ச‌ட்ட‌த்திற்குப் ப‌ய‌ந்தால்/ ச‌ட்ட‌த்திற்கு கீழ்ப்ப‌டிவ‌தாக‌ இருந்தால் எக்சோன் எப்போதோ ந‌ஷ்டஈட்டை வ‌ழ‌ங்கி அச்சூழ‌லையும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளையும் பாதுகாத்திருக்க‌ வேண்டும். ஆக‌வே பெருநிறுவ‌ங்க‌ள் த‌ங்க‌ளைக் காத்துக்கொள்ள‌ எதையும் செய்யும். என‌வே ஏதோ ச‌ட்ட‌த்திற்குப் ப‌ய‌ந்துதான் இவை எல்லாவ‌ற்றையும் செய்கின்ற‌ன‌,ச‌ட்டத்தை மீறி எதையும் செய்யாது என்ப‌தை என்னால் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள‌ முடியாது.

(3) மாயா ஏன் யூனிவேர்ச‌ல் ஊடாக‌ விடீயோக்க‌ளைப் போடுகிறார் என்று கேள்வி கேட்கின்றீர்க‌ள்.  அவ‌ர‌து துணைவ‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌தாக‌ அது இருக்க‌லாம். ஆனால் அதேச‌ம‌ய‌ம் கோக் பெப்சி என்ப‌வை த‌ங்க‌ள் விள‌ம்ப‌ர‌ப்ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்க‌க்கேட்ட‌போது 'என‌து இசையை காசிற்கு விற்க‌ விருப்ப‌மில்லை' என‌த் தெளிவாக‌க் கூறியிருக்கின்றார் என்ப‌தையும் க‌வ‌ன‌த்திற் கொள்ளாவேண்டும். ஒரு வீடீயோவை த‌டைசெய்கின்ற‌ யூரியூப் த‌ன‌னைப் ப‌ற்றி மிக‌க்கேவ‌ல‌மாக‌வும், தீவிர‌வாதியென‌வும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பின்னூட்ட‌ங்க‌ளும்/விடீயோக்க‌ளும் யுரீயூப் த‌ள‌ங்க‌ளில் ப‌ர‌விக்கிட‌க்கின்ற‌ன‌ என்றும் தான் அதை ப்ரிண்ட் செய்து ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ப‌க்க‌ங்க‌ளில் வைத்திருக்கின்றேன் என்று மாயா ஒரு நேர்காண‌லில் சொல்லியிருக்கின்றார். ஒருவ‌ரை Character assassination செய்வ‌து மிகுந்த‌ 'ஆபாச‌மான‌' விட‌ய‌ம‌ல்ல‌வா? ஆக‌ இந்த‌ 'ஆபாச‌ம்' ச‌ட்ட‌விதிக‌ளுக்குள் அட‌ங்காது அல்ல‌வா? இந்த‌ப் புள்ளி குறித்தும் த‌வ‌ற‌விடாது நாம் பேச‌வேண்டும்..

(4) நிர்வாண‌ம், ஆபாச‌ம் குறித்து உங்க‌ளுக்கு என்னைப் போன்ற‌ க‌ருத்தே இருக்கும் என‌ நினைக்கிறேன். முக்கிய‌மாக‌ பொதுப்புத்தி சார்ந்த‌ புரித‌ல்க‌ளை எப்போதும் நாம் ஏற்றுக்கொள்ள‌ முடியாது. நீங்க‌ள் குறிப்பிடும் 'நிப்பிளை'  ஸ்ரிக்க‌ரால் ம‌றைத்து மார்ப‌க‌த்தை காட்டும்  விடீயோக்க‌ள் யுரீயூப்பில் இருக்கின்ற‌ன‌ என்ப‌து ஒரு உதார‌ண‌ம். அத‌னால்தான் சொல்கிறேன் எதை நாம் நிர்வாண‌ம் என்கிறோம் என்று எப்ப‌டி வ‌ரைய‌றுக்கிறோம் என்ப‌து.

ந‌ல்ல‌ உதாரண‌ம் எமினெமின் Love the way you Lie  விடீயோ. என‌க்கு மாயாவைப்போல‌வே எமினெமைப் பிடிக்கும். மாயாவை விட‌ எமினெமைப் ப‌ற்றித்தான் நிறைய‌ எழுதியிருக்கின்றேன். அவ‌ரின் பாட‌ல்க‌ளில் ஓரின‌ப்பாலின‌ர், பெண்க‌ள் மீது இருக்கும் துவேச‌த்தையும் நாம் ஒருபோதும் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. மாயாவின் Born Free விடீயோவை எமினெமின் இந்த‌ விடீயோவுட‌ன் ஒப்பிட்டுப்பாருங்க‌ள்

எப்ப‌டி குடும்ப‌ வ‌ன்முறையும் ஆணாதிக்க்க‌மும் காட்ட‌ப்ப‌டுகிற‌து. நீங்க‌ள் குறிப்பிடுகின்ற‌ எப்ப‌டி வ‌ன்முறையாய்க் காட்ட‌ப்ப‌டுகிற‌து. நேர‌டியாக‌ ஆண்குறி காட்டிய‌ மாயாவின் பாட‌லைவிட‌ இதுதான் 18 வ‌ய‌துகுட்ட்ப‌ட்ட‌ பிள்ளைக‌ளை நிறைய‌ப்பாதிக்கும். த‌ம‌து பெண் துணைக‌ளை அடிக்க‌வும்,செக்ஸை இப்ப‌டி வ‌ன்முறையாக‌வும் வெளிப்ப‌டுத்துகின்ற‌ இவ்வீடியோ முத‌லாவ‌தாக‌ VEVO ல் இருக்கிற‌து. 16 மில்லிய‌ன் பேர் பார்த்திருக்கின்றார்க‌ள்.எமினெமின் Love the way you Lieல் அதீத‌ வ‌ன்முறையுட‌ன் காட்ட‌ப்ப‌டுகின்ற‌ sexual intercourse விட‌ மாயாவின் Born Freeல் காட்ட‌ப்ப‌டும் sexual intercourse கொடூர‌மான‌தா என்ன‌ ?


Eminem Feat Rihanna, Love the way you Lie


M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.

இந்த‌ப் புள்ளி ப‌ற்றிதான் நான் க‌தைக்கிறேன். ஆக‌ மாயாவின் பாட‌லைத் த‌டுத்த‌ற்கு பின்ன‌ணியில் வேறு கார‌ண‌ம் இருக்கிற‌து. முக்கிய‌மாய் மாயா முன்வைக்கும் உக்கிர‌ அர‌சிய‌ல் ஒரு கார‌ண‌ம் என்று மீண்டும் நான் உறுதியாக‌க் கூறுகிறேன்/ந‌ம்புகிறேன். யுரியூப் Born Freeஐத் த‌டைசெய்ய‌ அந்த‌ ஆண்குறியும் நெற்றியில் துவ‌க்கால் சுட‌ப்ப்ப‌டுகின்ற‌ சிறுவ‌னும் காரண‌மாய்ப் போய்விட்ட‌து. அவ்வ‌ள‌வுதான். இந்த‌ இர‌ண்டு வீடியோக்க‌ளின் வித்தியாச‌ங்க‌ளையும் -ஏன் ஒன்று த‌டைசெய்ய‌ப்ப‌ட‌ ம‌ற்ற‌து சுத‌ந்திர‌மாக‌ உலாவுகின்ற‌து என்ப‌தை நீங்க‌ள் உண‌ர்ந்துகொள்வீர்க‌ளென‌ நினைக்கிறேன். இதுவே நான் உரையாடும் புள்ளி.

'யுரீயூப் ந‌ம் ந‌ட்புச‌க்தி, குற்ற‌ஞ்சாட்டும்போது ஆதார‌ம் வேண்டுமென்று' கேட்காம‌ல் இந்த‌ப் புள்ளியிலிருந்து நீங்க‌ள் யோசித்துப் பார்க்க‌வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இத‌ற்கு அப்பால் மாயாவின் பாட‌லை யூரீயுப் த‌டைசெய‌த‌து ப‌ற்றி உரையாட‌ என்னிட‌ம் எதுவுமில்லை.
'மாயா' இசைத்தொகுப்பில் உள்ளாட‌க்க‌ப்ப‌ட்ட‌ 'Born Free' பாட‌ல் காணொளியாக‌(video) வ‌ந்த‌போது மிக‌ப்பெரும் ச‌ர்ச்சைக‌ள் எழும்ப‌த் தொட‌ங்கிய‌து. அந்த‌க் காணொளியில் அமெரிக்க‌ இராணுவ‌ம் சிவ‌ப்புத்த‌லை ம‌னித‌ர்க‌ளை நிர்வாண‌மாக‌ சுற்றி வ‌ளைப்பதாய், சுட்டுக்கொல்வ‌தாய், குழ‌ந்தைக‌ளைப் ப‌லியெடுப்ப‌தாய் காட்ட‌ப்ப‌ட்ட‌தால் YouTube அப்பாட‌லை 'வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க்கு ம‌ட்டும் உரிய‌து' என‌ எளிதாக‌க் கூறித் த‌டைசெய்தது; ஆனால் அதேவேளை மாயா 'தீவிர‌வாதப்புலிக‌ளின் பாட‌கி'யென‌ துவேச‌த்துட‌ன் வெட்டி ஒட்ட‌ப்ப‌ட்ட‌ காணொளிக‌ளை 'சுத‌ந்திர‌மாக‌' YouTube அனும‌தித்த‌து. "

(என்று நான் எழுதிய‌தை சுரேஷ் (EnglishTamil) ல் ம‌றுத்து மாயாவின் பாட‌லைத் த‌டை செய்ய‌ அப்பாட‌ல் பேசும் அர‌சிய‌ல் அல்ல‌, அந்த‌ விடீயோ யுரீயூப்பின் விதிக‌ளுட‌ன் முர‌ண்ப‌ட்ட‌தே என்று Twitterல் உரையாடினோம். நான் இதுகுறித்து எழுதிய‌வை முத‌ற் ப‌குதியாக‌வும், 2ம் ப‌குதி சுரேஷ் எழுதிய‌வையும் வ‌ருகின்ற‌து ~டிசே)
------------------------

PART 1: (DJ's Tweets & Tiny Paste)

@englishtamil youtube கூறிய‌ கார‌ண‌ம் என்ன‌ என்ப‌து தெரியும். ஆனால் அதும‌ட்டுமே கார‌ண‌மாக‌ இருக்கும் என்ப‌தை ந‌ம்ப‌மாட்டேன்.

this one seems to go a step farther than most both with its political message and its extremely violent imagery www.tinypaste.com/f3712

எத்த‌னையோ நிர்வாண‌ விடீயோக்க‌ள் Youtubeல் உலாவுகின்ற‌ன‌. சில‌வ‌ற்றிற்கு 18 வய‌தென‌ உறுதிப்ப‌டுத்திப் பார்க்க‌ச் சொல்கின்ற‌ன‌ 1/2

ஆனால் மாயாவின் பாட‌லில் ஒரு ஆண்குறி காட்ட‌ப்ப‌ட்ட‌த‌ற்கா த‌டை? 18வ‌ய‌துக்கு மேல் பார்க்க‌லாம் என‌று கூட‌ விட‌வில்லையே? ஏன்?

@englishtamil நீங்க‌ள் கூறும் nudity & violene கார‌ண‌த்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் வாத‌ம் த‌டை செய்ய‌ப்ப‌ட‌ 1/2

@englishtamil ம‌றைமுக‌மான‌ வேறு கார‌ண‌ங்க‌ளும் இருக்கிற‌து என்ப‌து. அது குறித்து கேள்வி எழுப்ப‌ப்ப‌ட‌லும் அவ‌சிய‌மே

@englishtamil நேர‌டியாக‌ மாயா அனுப்பிய‌ பாட‌ல் இப்போது youTube ல் இல்லை என‌ ந‌ம்புகிறேன். புதிய‌வ‌ர்க‌ள் போடுவ‌து தேடினால் கிடைக்க‌லாம்.

@englishtamil MIAVEVOல் Born Freeற்கு த‌டை இன்னுமிருக்கிற‌து
http://tinypaste.com/b97f59 இது அவ‌ச‌ர‌மாக‌ எழுதிய‌து @englishtamil

சுரேஷ்,
இந்த‌ உரையாட‌ல் நீண்ட‌ உரையாட‌லுக்கு உரிய‌வை. என‌வே சில‌வ‌ற்றையாவ‌து இங்கே குறிப்பிட‌விளைகிறேன். 'ஆபாச‌ம்' 'வ‌ன்முறை' என்ப‌வை ஒவ்வொருவ‌ரைப் பொறுத்து மாறுப‌ட‌க்கூடிய‌வை. சில‌வேளைக‌ளில் விடீயோ கேம்ஸ்க‌ளில் உக்கிர‌மான‌ வ‌ன்முறையைக் காட்டிய‌ப‌டி ய‌தார்த்தில் நிக‌ழும் வ‌ன்முறைக‌ளைத் த‌ட்டிக் க‌ழிப்போம். உதார‌ண‌த்திற்கு ஈழ‌த்தில் மிக‌க்கோர‌மான‌ ப‌டுகொலைக‌ளை ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ள்/விடீயோக்க‌ளை யூரீயுப் த‌டைசெய்திருக்கிற‌து. ஆனால் இர‌த்த‌க்க‌ள‌ரி கிராபிக்ஸான‌ டிரெயில‌ர்கள் சாதார‌ண‌மாக‌ காண‌லாம். நாம் இங்கு ஒழுங்க‌ம‌கைப்ப‌ட்ட‌ ந‌ம‌க்குப் பிடித்த‌மான‌ 'வ‌ன்முறை'களை ம‌ட்டும் அனும‌திக்கிறோம். அதுபோல‌ நீங்க‌ள் ஏன் நிர்வாண‌ப்ப‌ட‌ங்க‌ள் வ‌ந்த‌போது யூரியூப்பிற்கு முறையிட‌வில்லையா என‌ என்னிட‌ம் கேட்டிருந்தீர்க‌ள். என‌க்கு அது ஒரு பிர‌ச்சினையாக‌ இல்லாத‌போது நான் ஏன் முறையிட‌வேண்டும். அவ்வாறு முறையிட‌ நானொரு க‌லாசார‌வாதியும‌ல்ல‌. யூரீயுப்பை நீங்க‌ள் 'ந‌ட்பு' ச‌க்தியாக‌ப் பார்ப்ப‌தில் பிர‌ச்சினையில்லை. ஆனால் அவ‌சிய‌மான‌ பொழுதுக‌ளில் அது யாருக்காக‌ இருக்கிற‌தென்ப‌தை நிரூபிக்க‌வேண்டும். அல்லாதுவிடின் விம‌ர்ச‌ன‌ம் வைத்தாக‌ வேண்டியிருக்கிற‌து.

இன்று பெண்க‌ளின் எல்லா அங்க‌ங்க‌ளும் அதிர‌ ஒப்புக்குவேண்டுமானால் மெல்லிய‌ ஆடைக‌ளால் ம‌றைக்க‌ப்ப‌ட்டு ப‌ல ஆயிர‌க்க‌ண‌க்கான‌ விடீயோக்க‌ள் இருக்கின்ற‌ன‌. அதை ஆபாச‌மென‌ த‌டைசெய்யாத‌வ‌ர்க‌ள், ஒரு உக்கிர‌மான‌ அர‌சிய‌லை (இது எங்க‌ள் நாடுக‌ளில் சாதார‌ண‌ம்; அதாவ‌து இர‌வுக‌ளில் சுற்றிவ‌ளைப்புக்க‌ள் நிக‌ழ்வ‌தும், போட்டுக்கொண்டிருக்கும் உடைக‌ளோடு முகாங்க‌ளுக்குக் கூட்டிச் செல்ல‌ப்ப‌டுவ‌தும்). அண்மையில்கூட‌ த‌மிழிய‌ல் மாநாட்டில் சுல்பிகா இப்ப‌டியாக‌ க‌ண்டியில் ந‌டைபெற்ற‌தைக் குறிப்பிட்டார். அவ‌ர‌து தோழி (அவ‌ரும் ஒரு விரிவுரையாள‌ர்)யாழ்ப்பாண‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் என்ப‌தால் நைட்டியோடு ஜீப்பில் ஏற்றிச்செல்ல‌ப்ப‌ட்டிருக்க்கிறார். இது ஒரு சிங்க‌ள‌ப் பிர‌தேச‌த்தில் இராணுவ‌ முற்றுகையில்லாத‌ இட‌த்தில் நிக‌ழ்ந்த‌து அப்ப‌டியெனில் இராணுவ‌ முற்றுகையுள்ள‌ வ‌ட‌கிழ‌க்கில் நிலைமை எப்ப‌டியிருக்குமென‌ சொல்ல‌தான் வேண்டுமா? ஆக‌வே இப்ப‌டியாக‌த்தான் ப‌ல‌ நாடுக‌ளில் நிலைமை இருக்கிற‌து. ஈராக்கில்/ஆப்கானிஸ்தானில் நிக‌ழாத‌தா என்ன‌? என‌வே இந்த‌ விட‌ய‌த்தில் யுரீப் ஒடுக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு 'ந‌ட்பு' ச‌க்தியாக‌ இருப்பின் த‌ன் பாவ‌னையாள‌ர்க‌ளைக் கார‌ணங்காட்டி த‌டைசெய்திருக்க்கூடாது. த‌ன‌க்கு வ‌ச‌திப்ப‌ட்ட‌/எல்லாவ‌ற்றையும் அல‌ங்கார‌ம் செய்துதான் யூரீயூப் பாவ‌னையாள‌ர்க‌ளுக்கு வ‌ழங்க‌ப்போகின்ற‌தென்றால் நாம் கேள்வி கேட்டாக‌த்தான் வேண்டும். எனெனில் நிஜ‌ம் என்ப‌து மிக‌க்கொடூரமாக‌ இருக்கிற‌து.

சிறுவ‌ர்க‌ள் பெண்க‌ள் என்ப‌வ‌ர்க‌ள் நேர‌டியாக‌ நெற்றியில் குறிபார்க்க‌ப‌ட்டு கொல்ல‌ப்ப‌ட‌வேயில்லையா? பால‌ஸ்தீனத்தில் ஒரு சிறுவ‌ன் த‌ந்தை அர‌வ‌ணைத்து வைத்திருக்க‌ மிக‌க்கோர‌மாக‌ சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்ட‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் வெளியே வ‌ந்து உல‌கை உலுக்கிய‌து அல்ல‌வா? அய்யோ இது மிக‌க்கோர‌மாக‌ இருக்கிற‌தே என்று யூரீயூப் போன்ற‌வை இவ‌ற்றை த‌டைசெய்தால் அவ‌ர்க‌ள் யாருக்காக யாருடைய‌ அரசியலைப் பேசுகிறார்க‌ள் என்று கேள்விகேட்க‌த்தான் வேண்டும். இந்த‌ அடிப்ப‌டையிலேயே நான் கேள்விக‌ளை எழுப்புகிறேன். இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளுக்கு 'ஆதார‌ங்க‌ள்' தேவையில்லை; இந்த‌ அடிப்ப‌டையான‌ கேள்விக‌ளை யூரியூப் த‌ன்ன‌ள‌விலேயே எதிர்கொண்டாலே போதுமான‌து.

.................

PART 2: (EnglsihTamil Tweets & TinyPaste)

@elanko 'Born Free' was removed from youtube primarily because of nudity (during intercourse)

@elanko அம்மாதிரி படங்களை ரிப்போர்ட் செய்தால் நீக்குவது youtube வழக்கமாக செய்வதுதான். இதில் MIA'விற்கு எதிராக எந்த சதியும் இல்லை.
நாம் youtube 'இன் விதிமுறைகளை ஏற்கிரோமே இல்லையோ, அவர்கள் அளவில் முடிந்த அளவு அதை பாரபட்சமின்றியே nadamuraip படுத்துகிறார்கள், I think.

நான் பார்த்த இரண்டு நிர்வாண (sexually explicit, not just nude) வீடியோகல் ரிப்போர்ட் செய்து மூன்று மணி நேரத்தில் நீக்கப் பட்டன.

Youtube's censorship relies heavily on the viewers. Unless viewers report nothing gets removed on its own. That's how most 'illegal'..

..'illegal' videos continue to remain. Because people are just happy to watch them. They don't to be the one to spoil the party.

நீங்கள் பார்த்த நிர்வாண படங்களை நீங்கள் ரிப்போர்ட் செய்தும் நீக்கவில்லையா? @elanko

அதே போல மார்பகப் புற்றுநோய், breast feeding, testicular cancer சம்மந்தப்பட்ட நிர்வாணத்தை நாம் இதோடு குழப்பவில்லை என்று நம்புகிறேன்.

We both know that a penis is not just a penis, just like how nudity is not just nudity. They blocked born free for the same reason..

..they block porn. 'Gratuitous violence' is an additional factor in the video, but not very exclusive. Sexual intercourse is

நன் முன்னரே சொன்னதுபோல் அவர்களின் adult viewing என்பதும் அவர்களுடைய சட்டகத்திற்குள் உட்பட்டதுதான்.

சில சமயங்களில் முரண்கள் இருக்கலாம்: ஒரு முறை காசி அகோரி சாமியார் ஒருவர் நரமாமிசம் உண்ணும் படத்தை 'flag' செய்தேன் (for 18 yrs warning)...

அவ்வளவு ஏன். இன்னும் மாயாவின் Born Free பாடல் youtube'இல் இருக்கத்தான் செய்கிறது, நீங்களே தேடித் பாருங்களேன். @elanko

ஆனால் அவர்கள் படத்தையே நீக்கிவிட்டார்கள். அனால் அதே படம் வேறோர் இடத்தில 18+ yrs எச்சரிக்கையுடன் இன்னும் உள்ளது.

பொதுவாகவே எதிர்பரசியல் பேசும் கலைஞர்களை முடக்குவதும், அவர்கள் கூறியவற்றை திரிப்பதும் (மாயாவிற்கு சமீபத்தில் நடந்ததுபோல்) உண்டுதான், ஆனால்

@ elanko ஆம், அவர் official video'விர்கான தடை இன்னும் உள்ளது. ஆனால் அது போன்ற தடை Prodigy'கும் உள்ளது (ex: smack my bicth up)

And prodigy doesn't talk about any kind of politics. Politics of gender, perhaps.

@elanko மறைமுகமான கரணங்கள் இருப்பின் அதை ஆதாரத்தோடு கேள்வி எழுப்புதலே சரியாக இருக்கும்; அதுவும் ஒரு 'நட்பு' இயக்கத்துக்கு எதிராக...

@elanko http://englishtamil.blogspot.com/2010/07/vetti-post-14-youtube-nudity-etc.html முடிந்த அளவு தெளிவான விளக்கங்களை தர முயற்சித்துள்..

அதேபோல் MIA'வின் அரசியல் பற்றியும் நிறைய பிரச்சனைகள் உள்ளன, அதைப் பற்றியும் பேசவேண்டும் என்றிருந்தேன்; ஆனால் கொஞ்சம் திசை மாறியுள்ளது.



I hate tinypaste, so I'll rather dump my 'rough notes' in this blog. This is a twitter exchange with Elanko that has spilt over here (as it always happens when you try to be slightly sensible). I'll edit the page later on to contextualize it better, but for now, it's just to serve as a reply to Elanko's tinypaste.

{{அதுபோல‌ நீங்க‌ள் ஏன் நிர்வாண‌ப்ப‌ட‌ங்க‌ள் வ‌ந்த‌போது யூரியூப்பிற்கு முறையிட‌வில்லையா என‌ என்னிட‌ம் கேட்டிருந்தீர்க‌ள். என‌க்கு அது ஒரு பிர‌ச்சினையாக‌ இல்லாத‌போது நான் ஏன் முறையிட‌வேண்டும். அவ்வாறு முறையிட‌ நானொரு க‌லாசார‌வாதியும‌ல்ல‌.}} --

இளங்கோ, எனது நிலைப்பாட்டை நான் தெளிவாக ஏற்கனவே தெரிவித்துவிட்டேன், ஆனால் உங்களுக்கு அது தவறான புரிதலையே (மீண்டும்) உண்டாக்கி இருக்கிறது. மேலே நீங்கள் கூறியுள்ளது ஒரு உதாரணம். நான் கேட்ட கேள்வியின் அர்த்தம், உங்களுடைய ரசனை/ஒழுக்கம் பற்றியது அல்ல, youtube'இன் நடவடிக்கை முறை பற்றியது.

Youtube சட்டத்திற்கு உட்பட்டுத்தான் எதையும் செய்ய முடியும். அந்த வகையில் நீங்கள் விரும்பாத -- youtube விதிமுறைகளுக்கு உட்பட்டு -- ஒரு படத்தை நீக்கக் கோரினால் அவர்கள் நீக்கியே ஆக வேண்டும். இல்லையென்றால் "எங்களுக்கு அப்படி ஒரு படம்/படத்தில் இன்ன சமாச்சாரம் இருந்ததே தெரியாது" என்று நீதிமன்றத்திடம் சொல்ல முடியாது ("copyrights சம்மந்தப்பட்ட பல வழக்குளில் அவர்கள் குறிபிட்டுள்ள காரணம் அதுவே). Born free 'யை நீக்கக் கோரி பலர் கேட்டிருக்கூடிய பட்சத்தில் அது நீக்கப்படவேண்டிய படமே (as per youtube's rules).

எது நிர்வாணம், எது அரை-நிர்வாணம் என்பதற்கும் சட்டரீதியான அளவுகோல்களையே அவர்கள் கொண்டுள்ளார்கள் என நான் நினைக்கிறேன். மெல்லிய ஆடை அணிந்தாலும் 'tehnically not naked' என்று நீதிமன்றத்தில் வாதாட வாய்பிருக்கிறது. (அமெரிக்க சட்டப்படி ஆண்கள் மார்பகத்தை காட்டுவதும் பெண்கள் மார்புகளைக் காட்டுதலும் ஒன்று இல்லைதான். மேலாடையே அணியாமல் nipples மீது மட்டு ரெண்டு sticker ஒட்டிக்கொண்டால் அது nudity இல்லைதான்.) சட்டங்களும் நீதிமன்றகளும் அப்படி இருக்கையில் youtube'ஐ மட்டும் குறை சொல்லி என்ன பயன்? (எது graphic violence என்பதும் அது போன்றதே.)

உண்மையில் நடக்கும் வன்முறையை "gratuitous violence" என்று வகைப்படுத்த முடியாது. அதே போல born free படத்தில் வருபவை உண்மை நிகழ்சிகளை அடிப்படையாகக் கொண்டவையா என்பது அவர்களை பொறுத்தவரை -- சட்டப்படி -- தேவை/சம்மந்தம் இல்லாதது. (உங்களின் கூற்று எனக்கு புரியாமல் இல்லை, ஆனால் விவாதத்தின் பொருட்டு..). அமெரிக்கர்களுக்கு கழிவிரக்கம் உண்டாகும் வகையிலான எண்ணற்ற வன்முறை படங்களை மட்டும் அனுமதித்து விட்டார்களா என்ன? (அமெரிக்க பிணைக்கைதி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் படம் ஒரு உதாரணம்)

ஆக நீங்கள் அவர்கள் நிலையின் முரணாகக் கருதும் எல்லா வீடியோ'களையும் அப்படித்தான் பார்க்க முடியும். அதாவது, அவர்களுக்கு தெரிந்தே அது இருக்கின்றதா/அவர்களின் விதி முறைகளுக்குள் இருக்கின்றதா என்று?

அடுத்து நீங்கள் கூறும் "அவசியமான பொழுது". இது என்னவென்று அனுமானித்து நான் முன்னரே இதற்கு தர்க்க ரீதியான பதில் சொல்லிவிட்டேன். ஆனால் மீண்டும் பேசுவதில் பிரச்சனை இல்லை.

நீங்கள் சொல்லும் "அவசியமான பொழுது" காட்சி வடிவத்திலான தீவிரமான அமெரிக்க/ஏகாதிபத்திய எதிர்ப்பு எனில், அவ்வாறன எந்த படத்தையும் youtube'இல் பார்க்க முடியாது -- நீங்கள் சொல்வது இதுதான் என்று வைக்கலாமா?

இப்போது இந்தக் கூற்றை மருதளிக்கும்ம் எத்துனை ஆதாரங்களை கொண்டு வரட்டும்? Wikileaks தளத்தின் அணைத்து (கிட்டத்தட்ட) படங்களும் youtube'இல் உள்ளது. சமீபத்தில் வெளியான 'ஈராக் செய்தியாளர்கள் படுகொலை' உட்பட. இது போல பல உதாரணங்களை அடுக்க முடியும்.

இனையம் என்ற ஊடகத்தில் இம்மாதிரியான சந்தேகங்கள் எவ்வளவு சரியானவை என்பது அடுத்த கேள்வி. Youtbe is owned by Google. The same company that takes to you to MIA's video page (in VIMEO and Dailymotion) when searched for Born Free. The results are not even sidlined, it's right on top.

ஆனால் இப்படி இருக்கவும் வாய்ப்புள்ளது: மாயா பாடல்களை வெளியிட்டுள்ள Universal Group முன்னைய காலங்களில் youtube 'இற்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. அதற்கு பழி தீர்க்க மாயா ஒரு சாக்காக பயன் பட்டிருக்கலாம். ச்ச, MIA ஏன் Universal Group'ஓடு வேலை செய்கிறார்?

மற்றோர் விடயம் (for arguement's sake): புணர்ச்சி, nudity, போன்றவற்றை பார்க்க பல நூறு free porn sites வந்துவிட்ட நிலையிலும் youtube'இல் அவை இருக்க வேண்டிய அவசியமென்ன? நாமெல்லாம் இன்னமும் ஆடைகள் அணிந்துகொண்டுதானே வெளியே செல்கிறோம்? அதாவது, நாம் இன்னும் இடம் பொருள் ஏவல் சார்ந்த ஒழுக்க/அற முறைகளைப் பற்றிக் கொண்டுதானே இருக்கிறோம்? (அது சரியா தவறா என்பது வேறு விடயம்) அது போல இணையத்தைப் பொறுத்தவரை youtube 'ஐ அனைவரும் 'ஆடை அணிந்த' இடமாக வைத்திருப்பதில் என்ன முரண்? சிறுவர்களுக்கு 'I am 18 years old' என்று அந்த button'இல் கிளிக் செய்ய எவ்வளவு நேரம் பிடிக்கும்? நாம் இன்னமும் சிறார்க்கு ஒரு ஒழுக்கம், பெரியோருக்கு ஒரு ஒழுக்கம் என்ற நிலையில்தான் இருக்கிறோம். அதைக் கடக்காதவரை (கடந்தே ஆகவேண்டும் என்றில்லை) இதுபோன்ற நிலை நீடிக்கத்தான் செய்யும்.

Addendum : நீங்கள் குறிபிட்டுள்ளதுபோல் Youtube மீதான விமர்சங்களை வைப்பது அவசியமே. Youtube ஒன்றும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் நம் விமர்சனங்கள் சீராக இல்லாது போனால் அது நம் நம்பகத்தன்மயைதன் குறைக்கும்.

Disclosure: இதில் நீங்கள் MIA'வின் வெளிபடையான ரசிகன், நான் அவரின் விமர்சகன் என்ற அளவில் இந்த விவாதம் disclosure செய்துகொள்வது நலமென்று எண்ணுகிறேன்.

http://www.englishtamil.blogspot.com/
---------------------------------------------