இந்த எதிர்வினைக்கான காரணங்களை அறிந்துகொள்ள இங்கே முதலில் சென்று வாசிக்கவும்.
சுரேஷ், உங்களோடு பலபுள்ளிகளில் உடன்படுகிறேன். முக்கியமான யூரீயூப்பிற்கான வரைமுறைகளிலிருந்து, அவை எப்படிச் சட்டத்திற்கு பதில்சொல்லவேண்டியிருக்கிறது என்பதுவரை. மேலும் நாம் வெளியே ஆடைகள் போட்டுக்கொண்டு செல்வதுபோல 'எல்லோருக்கும்' பொதுவாகப் புழங்கக்கூடிய ஒரு தளமாக அதை ஆக்குவது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.
யூரியூப்போடு முரண்படும் அல்லது உங்களோடு முரண்படும் சில புள்ளிகளை முன்வைக்கிறேன்
(1) Videos that are considered to contain potentially offensive content are available only to registered users 18 and older. (From wikipedia)
அதாவது நாம் விடீயோக்களை யூரீயூப்பில் சேர்க்கும்போது நாம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக என்று கேட்டு எம்மை யூரீயூப் அங்கத்துவராக ஏற்றுக்கொள்கிறது. அவ்வாறான 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பினால் இவ்வாறான சர்ச்சைகளுள்ள விடீயோக்களை பார்க்க யூரீயூப் அனுமதிக்கிறது. ஆனால் மாயாவின் பாடலுக்கு (at the initial place) அந்த அனுமதி தரப்படவில்லை. அதை நீங்களும் ஒப்புக்கொண்டிருக்கின்றீர்கள் என நினைக்கிறேன்.
(2) எப்போதும் பெருநிறுவனங்கள் பற்றி நாம் சந்தேகத்தோடு அணுகவேண்டியிருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத்தேவையில்லை. 2006ல் யூரீயுப் விற்கப்பட்டபோதே 1.26 பில்லியன் டொலர்ஸ். இப்போது கூகிள் எனும் பெருநிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இப்பெருநிறுவனங்கள் தங்களுக்கு விளம்பரமும் இலாபமும் கிடைக்கும் என்றால் சட்டத்தை எளிதாக மீறும். நீதிமன்றத்திற்குப் போவதெல்லாம் இவைக்கு 'ஜூஜூப்பி'. எனவே நீங்கள் யூரீயூப் எப்போதும் சட்டத்தோடு ஒத்துப்போகும், சட்டத்திற்குப் பயப்பிடும் என்று நீங்கள் தொடர்ந்து வலியுறுத்துவது சிறுப்பிள்ளைத்தனமாக இருக்கும்.
நேற்று சிபிசி தொலைக்காட்சியில் அலாஸ்காவில்(Prince William Sound) Exxon சிந்திய எண்ணெய் பற்றிய விபரணப்படம் பார்த்தேன். நீர் மாசடைந்து மீன்பிடிச்சமூகத்தின் வாழ்க்கை பாதிக்கபப்ட்டதைத் தொடர்ந்து 3 வருடத்தின்பின் 5 பில்லியன் டொலர்ஸ் நஷ்ட ஈடாகக்கொடுக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் எக்ஸோன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக வழக்கை அந்த நீதிமன்றம் இந்த நீதிமன்றம் என்று இழுத்தடித்திருக்கிறது. வழக்கிற்காய Exxon செலவழித்ததே பில்லியன்களைத் தாண்டும். ஆனால் அந்த மீன்பிடிச்சமூகம் நிறைய இழந்திருக்கிறது. வாழ்வாதாரங்கள் இழந்திருக்கின்றார்கள். 15பேருக்கு மேல் தற்கொலை செய்திருக்கின்றார்கள், அவர்களின் முன்னாள் மேயர் உட்பட. மேலும் 20 வருடத்திற்குப் பிறகு கொடுக்கும் 5 பில்லியன் டொலரால் என்ன கிடைக்கப்போகிறது. இப்போது எண்ணெய் கரைகள் எங்கும் படிந்துவிட்டபின்னும் மீன்களை அழித்தபின்னும்? சட்டத்திற்குப் பயந்தால்/ சட்டத்திற்கு கீழ்ப்படிவதாக இருந்தால் எக்சோன் எப்போதோ நஷ்டஈட்டை வழங்கி அச்சூழலையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாத்திருக்க வேண்டும். ஆகவே பெருநிறுவங்கள் தங்களைக் காத்துக்கொள்ள எதையும் செய்யும். எனவே ஏதோ சட்டத்திற்குப் பயந்துதான் இவை எல்லாவற்றையும் செய்கின்றன,சட்டத்தை மீறி எதையும் செய்யாது என்பதை என்னால் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
(3) மாயா ஏன் யூனிவேர்சல் ஊடாக விடீயோக்களைப் போடுகிறார் என்று கேள்வி கேட்கின்றீர்கள். அவரது துணைவர் சம்பந்தப்பட்டதாக அது இருக்கலாம். ஆனால் அதேசமயம் கோக் பெப்சி என்பவை தங்கள் விளம்பரப்படங்களில் நடிக்கக்கேட்டபோது 'எனது இசையை காசிற்கு விற்க விருப்பமில்லை' எனத் தெளிவாகக் கூறியிருக்கின்றார் என்பதையும் கவனத்திற் கொள்ளாவேண்டும். ஒரு வீடீயோவை தடைசெய்கின்ற யூரியூப் தனனைப் பற்றி மிகக்கேவலமாகவும், தீவிரவாதியெனவும் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களும்/விடீயோக்களும் யுரீயூப் தளங்களில் பரவிக்கிடக்கின்றன என்றும் தான் அதை ப்ரிண்ட் செய்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் வைத்திருக்கின்றேன் என்று மாயா ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கின்றார். ஒருவரை Character assassination செய்வது மிகுந்த 'ஆபாசமான' விடயமல்லவா? ஆக இந்த 'ஆபாசம்' சட்டவிதிகளுக்குள் அடங்காது அல்லவா? இந்தப் புள்ளி குறித்தும் தவறவிடாது நாம் பேசவேண்டும்..
(4) நிர்வாணம், ஆபாசம் குறித்து உங்களுக்கு என்னைப் போன்ற கருத்தே இருக்கும் என நினைக்கிறேன். முக்கியமாக பொதுப்புத்தி சார்ந்த புரிதல்களை எப்போதும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் குறிப்பிடும் 'நிப்பிளை' ஸ்ரிக்கரால் மறைத்து மார்பகத்தை காட்டும் விடீயோக்கள் யுரீயூப்பில் இருக்கின்றன என்பது ஒரு உதாரணம். அதனால்தான் சொல்கிறேன் எதை நாம் நிர்வாணம் என்கிறோம் என்று எப்படி வரையறுக்கிறோம் என்பது.
நல்ல உதாரணம் எமினெமின் Love the way you Lie விடீயோ. எனக்கு மாயாவைப்போலவே எமினெமைப் பிடிக்கும். மாயாவை விட எமினெமைப் பற்றித்தான் நிறைய எழுதியிருக்கின்றேன். அவரின் பாடல்களில் ஓரினப்பாலினர், பெண்கள் மீது இருக்கும் துவேசத்தையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. மாயாவின் Born Free விடீயோவை எமினெமின் இந்த விடீயோவுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்
எப்படி குடும்ப வன்முறையும் ஆணாதிக்க்கமும் காட்டப்படுகிறது. நீங்கள் குறிப்பிடுகின்ற எப்படி வன்முறையாய்க் காட்டப்படுகிறது. நேரடியாக ஆண்குறி காட்டிய மாயாவின் பாடலைவிட இதுதான் 18 வயதுகுட்ட்பட்ட பிள்ளைகளை நிறையப்பாதிக்கும். தமது பெண் துணைகளை அடிக்கவும்,செக்ஸை இப்படி வன்முறையாகவும் வெளிப்படுத்துகின்ற இவ்வீடியோ முதலாவதாக VEVO ல் இருக்கிறது. 16 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றார்கள்.எமினெமின் Love the way you Lieல் அதீத வன்முறையுடன் காட்டப்படுகின்ற sexual intercourse விட மாயாவின் Born Freeல் காட்டப்படும் sexual intercourse கொடூரமானதா என்ன ?
Eminem Feat Rihanna, Love the way you Lie
M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.
இந்தப் புள்ளி பற்றிதான் நான் கதைக்கிறேன். ஆக மாயாவின் பாடலைத் தடுத்தற்கு பின்னணியில் வேறு காரணம் இருக்கிறது. முக்கியமாய் மாயா முன்வைக்கும் உக்கிர அரசியல் ஒரு காரணம் என்று மீண்டும் நான் உறுதியாகக் கூறுகிறேன்/நம்புகிறேன். யுரியூப் Born Freeஐத் தடைசெய்ய அந்த ஆண்குறியும் நெற்றியில் துவக்கால் சுடப்ப்படுகின்ற சிறுவனும் காரணமாய்ப் போய்விட்டது. அவ்வளவுதான். இந்த இரண்டு வீடியோக்களின் வித்தியாசங்களையும் -ஏன் ஒன்று தடைசெய்யப்பட மற்றது சுதந்திரமாக உலாவுகின்றது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்களென நினைக்கிறேன். இதுவே நான் உரையாடும் புள்ளி.
'யுரீயூப் நம் நட்புசக்தி, குற்றஞ்சாட்டும்போது ஆதாரம் வேண்டுமென்று' கேட்காமல் இந்தப் புள்ளியிலிருந்து நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்கு அப்பால் மாயாவின் பாடலை யூரீயுப் தடைசெயதது பற்றி உரையாட என்னிடம் எதுவுமில்லை.
1 comment:
இளங்கோ,
இன்னமும் உங்கள் விவாத்தபுள்ளியும், எனதும் சற்றே வெவ்வேறு இடங்களில்தான் இருக்கின்றன -- இந்தக் குறிப்பிட்ட தொடரை பொறுத்தவரை. நான் முதலிலிருந்தே கூறிவருவது ஒன்றுதான்: MIA 'வின் பாடல் அவர்கள் (youtube ) விதிமுறைகளை அவர்கள் எப்படி அர்த்தம் கொள்கிறார்களோ அதன் அடிப்படையில்தான் நீக்கப்பட்டுள்ளது. இதில் சில சமயங்களில் முரண்பாடுகள் இருந்துள்ளன. அனால், அது வேண்டுமென்றே உள் ஆதாயத்தொடுதான் MIA 'வின் விஷயத்தில் நடந்தேன்று நான் நினைக்கவில்லை. (நீங்கள் இதை மறுப்பதற்கு உதாரணமாக அளித்த அணைத்து படங்களும் -- சிங்கள இராணுவர் தமிழ் கைதிகளை நிர்வாணப்படுத்தி சுட்டு தள்ளுவது உட்பட -- youtube 'இல் இருக்கின்றன)
"ஆகவே பெருநிறுவங்கள் தங்களைக் காத்துக்கொள்ள எதையும் செய்யும்." -- பெருநிறுவனங்களுக்கும் தங்களை யாரிடமிருந்தோ "காத்துக்கொள்ள" வேண்டிய அவசியம் உருவாகின்றதை நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்கள். அந்த யாரோ சிலரில் சட்டமும் ஒன்று.
பெரிய கம்பனிகள் சட்டத்திற்கு பயந்துதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. ஒரு பெரிய corporation'ஐ பொறுத்தவரை எல்லாமே வரவு செலவுதான். அவர்கள் சட்டத்தை ஏய்க்க முயற்சி செய்தாலும் சரி, தண்டனை (தொகையை) அனுபவித்தாலும் சரி, வரவு செலவு என்ற கணக்கில்தான் பார்பார்கள். வழக்கை இழுத்தடிக்க ஆண செலவு, இறுதியாக வழங்கப்பட்ட தொகை என்று இறுதியில் நட்டமே -- அதாவது இலாபத்தில் குறைவு (இதில் ஆரம்பம் முதலே சட்டத்தை தெரிந்தே ஏய்த்து, பின்னாளில் மாட்டிக்கொள்ளும் scenario அடங்காது). அந்த வகையில் சட்டச் சிக்கலில் உழல்வது அவர்களுக்கு உவப்பானதல்ல. இதுதான் நான் கூற வந்த விடயம்.
Youtube 'இன் இலாப நோக்கை நான் எப்போதும் மறுக்கப்போவதில்லை. உண்மையைச் சொன்னால், MIA 'வின் பாடல் ஒரு குறிப்பிட்ட நுகர்வு வட்டத்தைக் கவரக் கூடியதே (consumers of 'counter-culture'). அது மட்டுமில்லாமல், அந்தப் பாடல் ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக வழக்கத்தை விட அதிக hits கிடைத்திருக்கலாம் (அதாவது அதிக விளம்பர வருமானம்). அப்படி இருந்தும் அவர்கள் MIA 'வின் பாடலை தடை செய்ய அவரின் அரசியல் தான் காரணம் என்றால், நாம் அதற்கு மேலதிக ஆதாரத்தை வைத்தலே சரியாக இருக்கும்.
The question is simple: was Born Free's removal consistent with other videos that have been removed based on the same 'rules'. Whether those rules are good/bad is a different issue (even though I've made some points about it).
Post a Comment