நான் கேட்ட/அறிந்த சில ராப் பாடகர்களின் பாடல்களில் -அரசியல் பேசும்- சில பாடல்கள் குறித்து ஒரு பதிவு எழுத விரும்புமுள்ளமுள்ளதென நண்பரொருவரிடம் கூறிக்கொண்டிருந்தேன். அவருக்கு ராப் பாடல்கள் அவ்வளவு உவப்பானதில்லை. நோரா ஜோன்ஸையும், பிரையன் அடம்ஸையும் பிடிப்பவருக்கு அதிரவைக்கும் ராப் ஏன் பிடிக்காது என்பதை அறிந்துகொள்வது அவ்வளவு கடினமில்லை. 'சரி நீ இப்படி எழுதுவதை வாசித்தாவது நான் என் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுகின்றேனா பார்ப்பம், எழுது' என்றார்.
அந்தப்பதிவுக்காய், ஏற்கனவே கேட்ட சில ராப்பாடல்களை youtubeயில் தேடிக்கொண்டிருந்தபோது, தற்செயலாய் கிடைதத நல்லதொரு -தமிழ்- ராப் பாடல் இது. இந்தப்பாடலை ஒலிவடிவில் மின்னஞ்சலில் சுஜித் அனுப்ப கேட்டிருந்தாய் நினைவு (நண்பா, இரண்டாவது இறுவட்டு வெளியாகிவிட்டதா?). இப்போது ஒலியுடன் இருந்த அப்பாடல் ஒளிசேர்த்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதலையும், கார்களையும், பெண்களையும் மட்டும் பாடுவதற்கான ஊடகம் மட்டுமல்ல ராப் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம். காதற்பாடல்களை மட்டுமே பாடலாக்காது/பதிவாக்காது இவ்வாறான புலத்திலிருக்கும் பிரச்சினைகளை நோக்கியும் நமது இளைஞர்கள் நகர்வது மகிழ்வு தரக்கூடியதே.
இந்தப்பாடலுக்கு நிகராய் அண்மையில் கறுப்பின பாடகர்கள் இருவரால் பாடபட்ட -என்னை மிகவும் பாதித்த- பாடலொன்று நினைவுக்கு வருகின்றது (எழுத விரும்பும் பதிவில் அதை விரிவாகக் குறிப்பிட விழைகின்றேன்). அது மட்டுமில்லாது இங்கே தமிழ் இளைஞர்கள் சென்ற வருடம் வெளியிட்ட பாடலைப்போல, அண்மையில் வந்த Jay-zயின் பாடல் ஒன்றிருந்தது கூட ஆச்சரியமாயிருந்தது. தமிழ் பாட்டு ட்சுனாமியை செய்திகளினூடாக கொண்டு சென்றதைப்போல Jay-z, Hurricane Katrinaவை செய்திகளால் Neoவோடு சேர்ந்து அதில் பாடியிருப்பார். தேவையான விளம்பரங்களும்(நிதியும்), பரவலான அறிமுகமும் கிடைக்கும்போது எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்களின் Rap/R&B பாடல்கள் தனகென ஒரிடத்தை புலத்தில் பெறவும் கூடும்.
5 comments:
இந்த பாடலைப் பற்றி சிநேகிதி எழுதி நியைற பின்னூட்டங்களும் வாங்கிட்டா.. too late bro..
இப்பதான் பாக்கிறேன்.. ரெம்ப நல்லாயிருந்துச்சு.
நன்றி
இந்தப்பாடல் குறித்து சினேகிதி ஏற்கனவே எழுதியுள்ள பதிவைப்பார்க்க...
http://snegethyj.blogspot.com/2007/02/blog-post_18.html
மலேசிய தமிழ் ஹிப் ஹாப் ஒன்று கேட்டேன்...மிகவும் அருமை..."வல்லவன்" என்று நியாபகம்...பட்டாசாக வெடித்திருந்தனர்..
தேடி போடுகிறேன்...
செந்தழல் ரவி
வருகைக்கு நன்றி நண்பர்களே.
Post a Comment