Saturday, August 25, 2007

Akonம் அஸினும்Akonனின் அண்மையில் வெளிவந்த பாடலிது. ஒரு பலவீனமுள்ள மனிதனாய், தான் பிறருக்குத் தீங்கிழைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களுக்கும் மன்னிப்புக் கேட்கின்றார். ஆரம்ப காலங்களில் கார்களைத் திருடுபவராய் இருந்ததிலிருந்து(அதில் பிடிபட்டு ஜெயிலில் சில வருடங்களாய் இருந்திருக்கின்றார்) சமீபத்தில் நடந்த அனைத்துச் சம்பவங்கள் வரை எல்லாவற்றிற்கும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கின்றார். முக்கியமாய் அண்மையில் கரீபியன் தீவுகளின் கிளப் ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும்போது பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்ணோடு தகாத வழியில் ஆடியிருந்தார் என்ற சம்பவம் அனைவரும அறிந்ததே. 21 வயதுக்குட்பட்டவர்களை அனுமதிக்காத கிள்ப்பிற்கு எப்படி ஒரு பதினெட்டு வயதுக்குட்டபட்ட பெண் வருவார் என்று தான் எதிர்பார்க்கமுடியும் என்று இப்பாடலில் Akon கூறுகின்றபோதும், அந்தச் சம்பவத்திற்காய் வெளிப்படையாக அவர் மன்னிப்புக்கேட்கின்றார். அத்தோடு அந்தச்சம்பவத்தால் மூடப்பட்ட கிளப்பிற்கும், மேலும் இதனால் வெரிஸன் வயர்லஸின் பெரும் விளம்பரத்திலிருந்து தான் நீக்கப்பட்டதையும் தெரிவிக்கின்றார். இவ்வாறான சம்பவங்களைச் செய்துவிட்டு அதையொரு வீரதீரச்செயலாய் ராப் பாடல்களில் பாடிக்கொண்டிருப்பவர்கள் போலல்லாது தனது குறைகளை குறைகளாகவும் அப்படி நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்கவும் செய்கின்ற Akonனின் ஆளுமை, அவரது பாடல்களைப்போல என்னை வசீகரிக்கின்றன.

...I'm sorry for the hand that she was dealt
And for the embarrassment that she felt
She's just a little young girl trying to have fun
But daddy should of never let her out that young

I'm sorry for Club Zen getting shut down
I hope they manage better next time around
How was I to know she was underage
In a 21 and older club they say

Why doesn't anybody want to take blame
Verizon backed out disgracing my name
I'm just a singer trying to entertain
Because I love my fans I'll take that blame...


அவரது அழகான 'ஆபிரிக்கா தாய்' (Mamma Africa) பற்றிக்கூறும் இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். எத்தனை குறைகள் இருந்தாலும், தாய் நாடு தரும் சுகத்திற்கு இணையேது?


......
நயன்தாரா இரசிகர்களைச் சந்தோசப்படுத்துகின்றேன் என்று வி.ஜெ.சந்திரன் இப்பதிவில் (கடைசிப்பாடலிற்கு முதல்) எங்களின் அஸினை இருட்டிப்புச் செய்து அஸினின் அருமையான நடனத்தை மறைத்து, நயன்தாராவை சிம்புவோடு சேர்க்கஸ் ஆடவைத்ததைக் கண்டித்து அசல் பாடல் இங்கே...

8 comments:

நளாயினி said...

அந்தந்த வயசில் அந்தந்த குறும்பு அந்தந்த குழப்படி செய்தே ஆகவேணும் என எனது தந்தை அடிக்கடி சொல்லுவார். ஆனாலும் ஏதோ ஒரு சந்தற்பத்தில் அவற்றை சொல்லி மகிழ்ந்திருக்கிறோம். அல்லது போனால் பிள்ளைகள் செய்கிறபோது ஓ நானும் உந்த வயசில் இப்படி செய்தேன் என சொல்ல பிள்ளைகள் சந்தற்பத்தை ஏற்படுத்தியே தருவார்கள். ஆனாலும் சில தவறுகளை மனசு சொல்லுவதற்கு இடம் தராது தான். ஆனாலும் காலம் வரும்.

அது சரி இதில் யார் நயந்தரா யார் அசின் யார் சிம்பு யார் இந்திரன். ஓ சந்திரனா. மாறி எழுதிவிட்டேன். யார்.? சினிமா பாமரத்தி நான். நல்லதொரு தேடல் பதிவுக்கை இதை ஏன் போட்டியள். அது தான் சுத்தமா புரியேலை எனக்கு.

சோமி said...

happy Onam thalai.........

வி. ஜெ. சந்திரன் said...

) //எங்களின்அஸினை இருட்டிப்புச் செய்து அஸினின் அருமையான நடனத்தை மறைத்து, நயன்தாராவை சிம்புவோடு சேர்க்கஸ் ஆடவைத்ததைக் கண்டித்து அசல் பாடல் இங்கே//

??????

டிசே தமிழன்/ DJ said...

நளாயினி, அஸினைத் தெரியாதா? என்ன கொடுமை இது :-).
.....
சந்திரன்,
/ எங்களின் .... /
என்பதில் உள்ள -எங்களின்- என்பது எமது அனைத்து அஸின் இரசிகர்களின் மனம் நொந்ததைத் தெரியப்படுத்தத்தான். பாருங்கள், எங்கையோ தலைமறைவாய் இத்தனை காலம் இருந்த சோமி கூட, அஸினைப் பற்றிக் கதைக்கின்றோம் என்று தெரிந்தவுடன், உடனேயே ஓடிவந்து ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கின்றார் அல்லவா :-). அவருக்கென்ன, அவர் பக்கத்திலிருக்கும் கேரளா போய் சேச்சிகளோடு திருவிழா கொண்டாடுவார்; என்னைப் போன்றவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பே இல்லையே :-(.

நளாயினி said...

டிசே தமிழன்/ DJ a dit...
நளாயினி, அஸினைத் தெரியாதா? என்ன கொடுமை இது :-).

"கொடுமை எல்லாம் இல்லை. உண்மை."

வசந்தன்(Vasanthan) said...

நான் இதுக்குப் பின்னூட்டம் போட்டா, சோமிக்குச் சொன்னமாதரி, "இவ்வளவுநாளும் ஒளிச்சிருந்த வசந்தன் அசின் எண்டதும் பாஞ்சோடி வந்து பின்னூட்டம் போட்டார்" எண்டு நீர் சொல்லுவீர் எண்டதால எந்தப் பின்னூட்டத்தையும் போடாமலே போறன்.
பிறகு சந்திப்பம்.

கானா பிரபா said...

மீரா ஜாஸ்மினை இருட்டடிப்புச் செய்ததற்காக வி.ஜே மற்றும் டி ஜே ஐக் கண்டிக்கிறேன்

டிசே தமிழன்/ DJ said...

வசந்தன், சரி சரி...பிரமச்சாரியாய் வாழ்க்கையைக் கழிக்கப்போகின்றவர்கள் எல்லாம் அஸினுக்காய் வரமாட்டீனம் என்று எங்களுக்குத் தெரியாதா என்ன :-)?
.......
பிரபா, மீரா ஜாஸ்மீனுக்கு அவரோடு கலியாணம் இவரோடு கலியாணம் என்ட வதந்திகளால் அந்தப்பிள்ளை அழுதுகொண்டு நிற்கிறதாம். அவாவைப் போய்த் தேற்றாமல் இங்கை வந்து எங்கை அவாவின்ரை படம் என்று தேடிக்கொண்டிருந்தால் உங்களை இரசிகர்மன்றத்திலிருந்து துரத்தப்போறாங்கள் கவனம்.