Sunday, October 07, 2007

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

இசைக்குயில் 2007 (ரொரண்டோ)


(கிருஷ்ணமூர்த்தி, கெளசிக்..., சின்மயி, விஜய லக்ஷ்மி n others)

விஜய் தொலைக்காட்சியில் நடந்தேறிய Super Singer(?) என்ற சிறுவர்களின் நிகழ்ச்சியில் பங்குபற்றிய/வென்ற சிறுவர்களோடு கனடிய சிறுவர்களும் பாடும் இசைக்குயில்-2007யிலிருந்து சில (அரைகுறைப்)பதிவுகள்.


இங்கே என்னிடம் தமிழ் தொலைக்காட்சி/வானொலி எதுவும் இல்லையென்பதால், super singer என்ற நிகழ்ச்சி பற்றிய மேலதிக எந்தச்செய்தியும் எனக்குத் தெரியாது. வீட்டிலிருப்பவர்கள் இறுவட்டு மூலம் விஜய் ரீவியில் நடந்த நிகழ்ச்சியைப் பார்த்திருந்தார்கள். எங்கள் குடும்பத்திலிருக்கும் சிறுவர்களை அழைத்துச்செல்ல நிகழ்வுக்கு நானும் ஒரு உதிரியாகச் சென்றிந்தேன். குழந்தைகளோடு குழந்தைகளாக இருப்பதைப்போல வேறு எது அதிக சுகந்தரப்போகின்றது?

பாடிய சிறுவர்கள் பழைய பாடல்களோடு மட்டும் நின்றது ஒரு பலவீனந்தான். போட்டி இன்னபிறவற்றிற்கு தேர்ச்சியான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப்பாடலாம்; தவறில்லை. ஆனால் ஒரு மேடை நிகழ்வுக்கு, அதுவும் குழந்தைகள் நிறைய வரும் நிகழ்வுக்கு குழந்தைகளுக்குப் பரிட்சயமான அதிகதியிலுள்ள பாடல்களைப்பாடியிருக்கலாம்.

சிவாஜி பாடலின் பல்லேலக்காவைத் தவிர, மனதை அதிரச்செய்த எந்தப்பாடலையும் காணவில்லை. இது போதாது என்று அவ்வபோது பாடிய சின்மயியும் தனது கர்நாடக சங்கீத சாமர்த்தியத்தைக் காண்பிக்க என்று அந்தக்காலத்து தில்லானா மோகனாம்பாள் பாடல்களோடு மட்டும் நின்றது இன்னொரு சோகம். சிவாஜி படத்தின், 'சஹானா தூறல் வீசும்' பாடலுக்கு கிருஸ்ணமூர்த்தியோடு (super singersல் முதற்பரிசு வென்றவர்) கூட சின்மயியால் இசைந்து பாடமுடியவில்லை. குரல்களின் இடைவெளியில் மடுவுக்கும் மலைக்குமான இடைவெளி தெரிந்திருந்தது. சின்மயிக்கு அல்ல, அநேக பெண்பாடகர்களுக்கு ஆண்களோடு பாடும்போது, ஆண்களின் குரல் பெண்களின் குரலை விழுங்கிவிடுவது நடந்துகொண்டுதானிருக்கின்றது. அப்படி ஆண்கள் உச்சஸ்தாயியில் பாடும்போது அதற்குச் சவால் விட்டுப்பாடக்கூடிய ஒருவர் என்றால் ஜானகியைத்தான் முன்னுதாரணமாய்க் கொள்ளவேண்டியிருக்கின்றது. உதாரணத்திற்கு முதல்வன் படத்தில் வரும் முதல்வனே பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

எனினும் வந்திருந்த சிறுவர்கள் நன்றாகவே பாடினார்கள், அவ்வாறே இங்கு கனடாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாடிய ஆறு சிறுவர்களும்.

சில ஒளித்துண்டுகள் (முழுமையாக அல்ல)


பெயரிலி, சிறிரங்கன் போன்ற அந்தக்காலத்தைய நண்பர்களுக்கு (இந்தப்பாடல் பி.யு.சின்னப்பா காலந்தானே :-))


எனக்கும் அசினுக்கும்


இது இப்பதிவு பார்க வந்த உங்கள் அனைவருக்கும்; பாடலிற்கு முன்பான தீம் உரையாடலைத் தயவுசெய்து புறக்கணிக்குக..

19 comments:

-/பெயரிலி. said...

தலைப்பைப் பார்த்து ஒரு செக்கன் கதிகலங்கிப்போனன் ;-)

டிசே தமிழன்/ DJ said...

பெயரிலி, உங்களுக்காய் போடப்பட்ட பாடலைப்பற்றி எதுவும் கருத்துக் கூறாததால், புதுப் பட்டம் ஒன்று விரைவில் தரப்படுமென எச்சரிக்கப்படுகின்றது.

-/பெயரிலி. said...

சும்மா சொல்லக்கூடாது எமக்கு அர்ப்பணிச்ச பாட்டை நல்லாத்தான் திருவிளைடியிருக்கிறான் பொடியன். குரல் கனதி

அது சரி உமக்கும் அசினுக்கும் அர்ப்பணிச்ச வீடியோபடத்துக்கு ஆக்கள் ஆடோணுமொழிய, கமெரா இல்லை, சரியோ ;-)

Sri Rangan said...

மஞ்சள் காற்சட்டை போட்டிருக்கும் பையன்(பொண்ணு?)நன்றாகக் கம்மிங்கில பிரகாசிக்கிறான்.ஆனால்,பல்லவி-சரணங்களில் கோட்டை விட்டுவிடுகிறான்(ள்).எதுவெப்படியிருப்பினும,; நம்மைப்போன்ற சிறுசுகளுக்குக் கிடைக்காத அரிய வாய்ப்புகளெல்லாம் இச் சிறார்களுக்குக் கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியே!

எனக்கெல்லாம் இப்போதைக்கு சிவாஜி படப்பாடலான"ஆம்பல்,மௌவல்,கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி..."என்ற பாடலும்,அப்பாடலுக்கு ஒரு பொண்ணு(சிறையா-சிரோயா?)இடுப்பு வளைத்து,நெஞ்சு நிமிர்த்தி(...)ஆடும் பாடலும்,ஆடலும் விருப்புடையதாக இருக்கிறது.அந்தப் பெண்ணை,இடுப்பை,நெஞ்சை... இந்தச் சின்ன மனசு மறக்குதே இல்லை:-)அவ்வளவு பாசம் வந்து தொலைக்கிறது,டி.ஜே!இதுள் உங்கட அசின் எந்த மூலைக்கு?...சிவாஜீ நாயகி,நாயகிதாம்!

வி. ஜெ. சந்திரன் said...

டிசே
நானும் ரொறன்ரோ வந்திருந்த போது நின்ற உறவினர்களின் வீட்டில் விஜய் ரிவி யின் சிடிகளை பார்த்திருக்கிறேன். உண்மையில் அதில் பங்குபற்றிய சிறுவர்கள் மிக நன்றாக பாடினார்கள்.

ஆருயிர்??

என்ன கமரா ஒரு நிலையில் நிக்காமல் அங்கும் இங்கும் அலைகிறது

-/பெயரிலி. said...

/என்ன கமரா ஒரு நிலையில் நிக்காமல் அங்கும் இங்கும் அலைகிறது/

ஆருயிரைத்(யோ) தேடி அலைகிறதாக்கு(க)ம்.
கிக் கிக் கீ!!

நமக்குப் பிடிச்ச பாட்டெண்டு பார்த்தா, சரியாக கடைசியாக் கிட்க்கிற டி.ஆர்.மகாலிங்கத்தின்ரை பாட்டைத்தான் சொல்லோணும். ஆனா, பாடின பொடி கோட்டைவிட்டுட்டுது.

வசந்தன்(Vasanthan) said...

தலைப்பைப் பார்த்ததும் நானும் வேற மாதிரி நினைச்சுப்போட்டன், ஏதோ பிசகு விட்டிட்டு இப்ப வழியிறீர் எண்டு.

'சங்கீத ஜாதிமுல்லை' பாடலைப் பாடிய சிறுவன் போட்டியிலும் அதேபாடலைப் பாடிய நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன். மிகமிக அருமையாக இருக்கும். பாடிமுடித்தபோது எல்லோரும் உறைந்துபோயிருந்தனர். நடுவர்களும் விழுந்துவிழுந்து பாராட்டினார்கள்.

செந்தமிழ் தேனிமொழியாள் பாடலும் நன்றாக இருக்கிறது.

இவர்களுக்கு எத்தனை வயதென்று தெரியவில்லை. ஆனால் மிகச் சிறிய வயதில் குரல் கனத்துவிட்டதோ என்று தோன்றுகிறது. நாங்கள்தான் பதினாலு வயசுவரைக்கும் கீச்சிட்டுத் திரிஞ்சனாங்கள். (சிலர் இப்பவும் திரியினம் எண்டது வேறகதை;-))

இன்னொரு விசயம். நீங்கள் தந்த பாட்டுக்களை முழுக்க ரசிக்க முடியேல. அதற்கு, படப்பிடிப்புக் குறையில்லை. படம் பிடிச்சவன் தானும் பாடுறன் எண்டு இடையில தன்ர குரலையும் சேத்துப் பதிஞ்சதுதான் விசரைக் கிளப்புது.

சிறிரங்கத்தார், (இப்பிடிக் கூப்பிடுற எல்லாரையும் நான்தான் எண்டு நினைச்சுப்போடாதைங்கோண்ணை!!!)
திரும்பவும் ஒருக்கா வீட்டில மனுசி வயரைப்பிடுங்கி வைக்கப்போறா; மகன் கடவுச்சொல் போட்டு வைக்கப்போறான் கணிணிக்கு ;-)
உண்மையில ஷ்ரேயாவை ரசிக்கிறியளோ இல்லாட்டி டி.சேக்கு கொதி கிளப்பிறியளோ?

கானா பிரபா said...

//பெயரிலி, சிறிரங்கன் போன்ற அந்தக்காலத்தைய நண்பர்களுக்கு (இந்தப்பாடல் பி.யு.சின்னப்பா காலந்தானே :-))//

அப்பாடா இந்த முறை நான் தப்பிச்சன்

சின்னனுகள் பாடுறது நல்லாத்தான் இருக்கும், கிட்டத்தட்ட 8 வருசத்துக்கு முன் ஏ.வி.ரமணன் சன் ரீவியில் கொடுத்த சப்தஸ்வரங்களில் வந்த சிறுவர் குழாம் இன்னும் நினைவில் இருக்கினம்.

கொடுமை என்னவென்றால் இப்படியான போட்டிகளில் பங்கு பற்றி ஒரு அங்கீகாரம் கிடைச்சவுடன் சுப்பர் ஸ்ரார் ரேஞ்சுக்குப் போய்ப் பேட்டி கொடுப்பது சகிக்கமுடியவில்லை.

வி. ஜெ. சந்திரன் said...

//அப்பாடா இந்த முறை நான் தப்பிச்சன்//


இஞ்சை பாரன் ஒராளின்ரை புழுகத்தை...

என்ன செய்ய உப்பிடியாவது சந்தோச பட்டுகொள்ள வெண்டியது தான் ;)

கொண்டோடி said...

கானாபிரபா என்ன சொல்ல வாறியள்?
"சூப்பர் ஸ்டார்" சின்னப்பிள்ளையள் போல பேட்டி குடுக்கிறார் எண்டா?
அல்லது சின்னப்பிள்ளையள் அவரைப்போல பேட்டி குடுக்கினம் எண்டா?
அல்லது சின்னப்பிள்ளையளே குடுக்கக்கூடியளவுக்குத்தான் சூப்பர் ஸ்டாரின்ர பேட்டிகள் இருக்கு எண்டா?
(முதலாவதுக்கும் மூண்டாவதுக்கும் சின்னதா ஒரு வித்தியாசம் இருக்கு)

கொண்டோடி said...

சிறிரங்கன், மாட்டினியளோ இல்லையோ?

மஞ்சட் காட்சட்டை போட்டிருக்கிற பொடியனை, (பொண்ணு) எண்டு அடைப்புக்குறிக்குள்ள போட்டு உங்கட வக்கிர புத்தியைக் காட்டி ப்போட்டியள் எண்டு சாத்திரியார் பதிவு எழுதிறார் எண்டு கேள்வி.

நாராயணா... நாராயணா... நாராயணா....

எதுக்கும் ஒரு நகைப்பான் போட்டு வைக்கிறன் ;-) ;-) ;-)

அய்யனார் said...

போகும்போது விலகுகிறென் பதிவும் வரும்போது வருகிறேன் பதிவும் நீங்கள் இடாதது வன்மையய் கண்டிக்கத் தக்கது..:)

என்னிடம் மட்டும் சொல்லுங்கோ ஒரு மாசமா ஆள காணலியே ?

ஸ்ருசல் said...

அரிய வீடியோக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஆருயிரே உண்மையிலேயே நன்று.

சினேகிதி said...

கிருஸ்ணமூர்த்தி முந்தியும் ஏதோ ஒரு நிகழ்ச்சியில செந்தமிழ்த் தேன் மொழியாள் பாடியிருக்கிறான். 2 வருசத்துக்கு முதல் சப்தஸ்வரங்கள் என்றுதான் நினைக்கிறேன்.

கானா பிரபா said...

//கொண்டோடி said...
கானாபிரபா என்ன சொல்ல வாறியள்?
"சூப்பர் ஸ்டார்" சின்னப்பிள்ளையள் போல பேட்டி குடுக்கிறார் எண்டா?
அல்லது சின்னப்பிள்ளையள் அவரைப்போல பேட்டி குடுக்கினம் எண்டா?//

கொண்டோடி அண்ணை

சுப்பர் ஸ்ரார் எண்டவோண்ணை அதிருதில்லை அண்ணையை மட்டும் சொல்லவில்லை. பொதுவா எல்லா மொழி சுப்பர் ஸ்ரார்காரர் பேட்டி குடுக்கிற ரேஞ்சியிலை உந்தக் குஞ்சு குருமான்கள் குடுத்த பேட்டியை வாசிச்சனான் அதைத் தான் சொன்னனான்.

(ஆளை ஆள் தின்னத் திரியிறாங்களப்பா;))

Anonymous said...

மன்னித்தேன் நாதா!

;-)

டிசே தமிழன்/ DJ said...

நண்பர்களுக்கு நன்றி.
....
கமரா அந்தமாதிரி ஆடுவது ஆருயிரைத் தேடியல்ல... முக்கிய காரணம் அரங்கில் வீடியோ எடுப்பது தடுக்கப்பட்டிருந்தது (ஒருமுறை எச்சரிக்கையும் தரப்பட்டிருந்தது). எனவே கொஞ்சம் ஒளித்துத்தான் எடுக்கவேண்டியிருந்தது. மற்றது முன்னேயிருந்த ஒரு தாயும் பிள்ளையும் அடிக்கடி அசைந்துகொண்டிருந்தார்கள். இதைவிட இன்னொரு முக்கிய காரணம் எனது மனம் தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்தது :-).
....
சிறிரங்கன்; நீங்கள் இப்படிச்சொன்னதன்பிறகு இன்னொருமுறை ஆம்பல் மெளவல் பாடலைப்பார்தாப்பிறகு கூட, அஸினை ஷ்ரேயாவின் இஞ்சி இடுப்பால் கூட என் மனதிலிருந்து அடித்து விரட்டித் துரத்திவிடமுடியாது என்பதை இன்னொருமுறை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன். அதுசரி, மெளவல் என்றால் என்ன?
....
/இன்னொரு விசயம். நீங்கள் தந்த பாட்டுக்களை முழுக்க ரசிக்க முடியேல. அதற்கு, படப்பிடிப்புக் குறையில்லை. படம் பிடிச்சவன் தானும் பாடுறன் எண்டு இடையில தன்ர குரலையும் சேத்துப் பதிஞ்சதுதான் விசரைக் கிளப்புது./
வசந்தன், ஒரு நல்ல சங்கீதக் கலைஞனை நோக்கி விமர்சனங்கள் வருவது புதிதல்லவே.
.....
கொண்டோடி: நானென்றால் மூன்று பதில்களுக்கும் சேர்த்தே புள்ளடியிடுவேன் :-).
....
/என்னிடம் மட்டும் சொல்லுங்கோ ஒரு மாசமா ஆள காணலியே ?/
அய்யனார், எல்லாம் என் சாரீரத்தை செம்மை செய்யும் நோக்கத்தில்தான் காணாமற்போயிருந்தேன் :-).
......
'மன்னித்தேன் நாதா' என்று அநாமதேயமாய் பின்னூட்டமிட்டது அசின் தானா :-)?

Sri Rangan said...

//சிறிரங்கன்; நீங்கள் இப்படிச்சொன்னதன்பிறகு இன்னொருமுறை ஆம்பல் மெளவல் பாடலைப்பார்தாப்பிறகு கூட, அஸினை ஷ்ரேயாவின் இஞ்சி இடுப்பால் கூட என் மனதிலிருந்து அடித்து விரட்டித் துரத்திவிடமுடியாது என்பதை இன்னொருமுறை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன். அதுசரி, மெளவல் என்றால் என்ன?//


மெளவல் என்றால்...

"........................." மலர்களைக் குறிக்கும்.குவிந்து பூக்கும் முல்லை,தாமரை,மல்லழகை போன்றவற்றைக் குறிக்கும் நலஇல தமிழ்ப் பெயரது.எனினும் ஒரு இளம் பெண்ணின் அங்கங்களில்-உடலில் பூத்திருப்பவற்றைச் சொல்லும் கவிஞன் கள்வன்!! மாரப்பில் மடைதிறந்த ஆசையுடையவன்(என்னைப் போல்).டி:ஜே,என்னதாம் சொல்லுங்கோ அது உங்கட இளவயதுக் கோளாறு.நாங்கள் பழுத்த பழங்கள்...எங்களுகஇகுத்தாம் தெரியும் எந்தப் பெண் அழகுகென.ஊரில் பெண் பார்க்குமஇ படலத்துள் பெரியவர்களை அழைப்பது இதனாற்றான்.பருவப் பையனகளுக்கு;-பொண்ணுகளுக்குப் பார்க்கின்றவர்கள் எல்லோரும் அழகே!

டிசே தமிழன் said...

சிறிரங்கன், மெளவல் குறித்த விளக்கத்துக்கு நன்றி. உங்களைப்போலத்தான், அண்மையில் ஒரு 'கவிஞர்' (வைரமுத்துவாய் இருக்கக்கூடும்) மெளவல் என்பதற்கு காட்டுமல்லிகை என்ற விளக்கத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கொடுத்ததாய் ஒரு தோழி கூறினார்.
....
/எங்களுககுத்தாம் தெரியும் எந்தப் பெண் அழகுகென.ஊரில் பெண் பார்க்கும படலத்துள் பெரியவர்களை அழைப்பது இதனாற்றான்.பருவப் பையனகளுக்கு;-பொண்ணுகளுக்குப் பார்க்கின்றவர்கள் எல்லோரும் அழகே! /
ம்....பெண் பார்க்கும் படலத்தில் இப்படி 'நுட்பமான' விசயங்கள் எல்லாம் இருக்கா :-)?