Wednesday, January 24, 2007

சேலை பார்க்கும் படலம்

நான் ஒரு தமிழன்.
என்னுடைய கலாச்சாரம் தமிழ்க்கலாசாரம்.
தமிழனாய் பிறந்து தமிழனாய் வாழ்ந்து தமிழனாய் சாகவும் விரும்புகின்றேன்.
ஆகவே.....
எனக்கு தமிழ்க்கலாசாரமான சேலை கட்டிய பெண்ணை மட்டுந்தான் பிடிக்கும்.

பஞ்சாபி அணிந்த பெண்கள் என்றால் அவர்கள் பஞ்சாபிகளாய்த்தான் இருக்கவேண்டும். எனவே எனக்கு அவர்களைப் பிடிக்காது. அவர்கள் தமிழில் பேசினாலும், பஞ்சாபியோ, சல்வார் கமிஸோ, சுடிதாரோ (எல்லாம் ஒன்றா?) அணிந்தால் அவர்களை 'தமிழ்ப்பெண்' என்று ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் நன்கு sight அடிப்பேன்.

பெண்களுக்கு: நீங்கள் அனுப்பும் படத்தில் சேலையைத்தவிர வேறு எதுவும் அணிந்திருப்பீர்கள் என்றால் 'எங்கள் தமிழ் கலாசாரத்தை கெடுக்கவந்த மூதேவியே' என்றொரு வசையுடன் சேலை ஒன்று இலவசமாய் வைத்து உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் (எதற்கு என்கிறீர்களா? இனியாவது சேலையை அணிந்து ஒரு தமிழ்ப்பெண்ணாய் திருந்தி வாழ்த்தான் ).

பெண் பார்க்கும்போது 'தமிழ்கலாசாரத்தில்' பெண்களைப் பாடச்சொல்வார்களாம். ஆகவே mp3 formattல் 'செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை கட்டத் தயங்குகிறியே?' என்ற பாடலையோ அல்லது 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு?' என்ற பாடலையோ உருக்கமாய் பாடி அனுப்பிவிடவும்.

கனடாவில் வசிக்கும் ஆருரனின் பதிவில் விதண்டாவாதம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை தந்திருப்பதால் - நான் இங்கே எழுதியது விதண்டா(வா)வதம் இல்லையென்றாலும்- அவருக்கு ஆதரவு கூறி இதைப்பதிவு செய்துகொள்கின்றேன்.

இப்படி இன்னும் பல சங்கிலிப்பதிவுகளைப் போட்டு நமது தமிழ்க்கலாசாரத்தை காப்பாற்றும்படி நண்பர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

பிரிய அஸினுக்கும் எச்சரிக்கை:


asin

நாளை நீங்கள் சேலை கட்டாமல் causual ஆடையில் வந்து 'நீயில்லாமல் என்னால் உயிர் வாழமுடியாது' என்று அழுது அடம்பிடித்தாலும் என்னால் உங்களை எந்தப்பொழுதிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று 'தமிழ்க்கலாசார சேலை அணிவோரை ஆதரிப்போர் சங்கத்தினூடாக சபதம் எடுத்துக்கொள்கின்றேன்
.

தொடர்பதிவாய் தமிழ்கலாச்சாரத்தின் முக்கிய கூறுகளான (திணிக்கப்பட்டு பொதுப்புத்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட) சீதனம், தாலி கட்டுதல், சாதி பார்த்தல் என்பவை பற்றியும் சேலை கட்டிய தமிழ்ப்பெண்களுக்கு பாடங்கள் எடுக்கப்படும்.

பெண்களே எமது கண்கள்; தமிழ்க்கலாசாரமே எங்களின் உயிர்மூச்சு!

29 comments:

-/பெயரிலி. said...

டோட்டியைப் பற்றிப் பேஸாமல் தமிழ் சாரத்தைப் பற்றிப் பேஸும் உங்களை மென்மையாகக் கண்டுக்கிறேன் ;-)

சினேகிதி said...

என்ன ஆச்சு டிஜே?

மாதுளன் மற்றும் மாதிலன் said...

பெடியன் பெட்டையளின்ரை இடுப்பைக் காண முடியாமல் அவதிப் படுறான். உதெல்லாம் வயசுக் கோளாறு. அவங்கடை உணர்வுகளைப் புரிஞ்சு கொள்ளுங்கோ..

Anonymous said...

:)))

Anonymous said...

டிசே,

இதையெல்லம் சீரியாசா எடுத்து அதுக்கொரு பதிவு தேவையா? கொச்சம் சீரியசா தமிழர் எண்டா யார், அவர்களுக்கு எண்டு தனியா ஒரு கலாச்சாரம் தேவையா , அல்லது அப்படி ஒண்டு இருக்கா எண்டு எழுதலாமே?தமிழ் பேசுபவர்கள் தமிழரா? தமிழ் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் தமிழரா? உமது மூதாதையர் ஏன் சிங்களவரா இருந்திருக்க ஏலாது? தமிழ் நாட்டில இருக்கிற தமிழரிண்ட மூதாதையர் ஏன் தெலுங்கரா, கன்னடரா இருந்திருக்க ஏலாது?
தமிழர் என்றால் யார் அவர்கள்?

டிசே தமிழன் said...

தமிழ்கலாச்சாரத்தை தளைத்தோங்க வைக்க இப்பதிவை எழுதியதால் bloggerரும் என்னோடு மல்லுக்கட்டுகின்றது. (நாசமாய்ப்போவாங்கள்,அவங்களுக்கு எங்கை எங்கடை கலாசாரத்தின் அருமை விளங்கப்போகுது...). இதற்கெல்லாம் சோர்ந்துபோகாமல் காலையிலிருந்து முயற்சித்து ஒருமாதிரி பதிவு செய்துவிட்டேன். இதற்கிடையில் நண்பர் சோமி சேலை பற்றிய பதிவொன்றை எழுதியிருப்பதை இப்போதுதான் வாசித்தேன் (http://somee.blogspot.com/2007/01/blog-post_24.html).

சோமி இந்தப்பதிவை வாசித்தாவது இனி திருந்துவாரென நினைக்கின்றேன். இல்லையெனில் திருத்தியெடுக்கப்படுவார் :-).

திவ்யாவின்ர தங்கச்சி said...

உணர்வுகள் தமிழ்ப் பெண்களான எங்களின் நன்மைக்காகத் தானே சொல்லியிருக்கிறார். நாங்கள் ஒழுங்கா அடக்க ஒடுக்க அம்சங்களோடை அச்சம் மடம் நாணம் பசிர்ப்பு கொண்ட தமிழ்ப் பெண்களா வாழ வேண்டும் எண்ட ஒரு நல்ல நோக்கத்துக்காகத்தானே அவர் எழுதியிருக்கிறார். இதில ஏன் பிழை பிடிக்கிறியள்.

வெற்றி said...

DJ,
நல்ல பதிவு. தமிழ்க்கலாச்சார காவலர்கள் என்று பிதற்றித் திரியும் அறிவிலிகளுக்கு நல்ல பதில். இதுகளைப் பார்க்கும் போது பாரதியின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை!- கிளியே!
பாமர ரேதறி வார்!


இப்பிடி கலாச்சாரம் அது இதெல்லாம் பெண்களுக்கு மட்டும்தான் என்று நினைக்கிற மனநோயாளிகளைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?!

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்

Anonymous said...

போர்த்துகேசர் வந்த மூட்டம் பெண்டுகள் ஒருதரம் அரைக்கு மேலை ஒண்டு போட்டிருக்கில்லே என்று சொல்லியிருக்கான். உந்த கலாச்சார செக்சியான சீலை 500வருசத்துக்குள்ளை வந்திருக்கோணும்.

எங்கையோ இணையத்திலை அந்த ஓவியம் பார்த்தனனான் கிடைச்சால் போடுறன்..

வசந்தன்(Vasanthan) said...

டி.சே,
ஆரூரானை எல்லாரும் எதிர்க்கிறாங்கள் எண்டு பார்த்தா (மிதுலனாகவும் மிதுளனாகவும் திவ்யாவாகவும் அவ்வப்போது வந்து (உளறிச்)செல்பவரைத் தவிர) நீர் ஆதரவு குடுத்திருக்கிறீர்.
நானும் ஏதாவது குடுக்க வேணும்.

'வேட்டி கட்டாத பெடியங்களை எச்சரித்து' ஒருத்தி பதிவு போடுவதும் அவசியம்.
கொழுவியின்ர மோள் கோமதி செய்யலாம்.

மலைநாடான் said...

//கொழுவியின்ர மோள் கோமதி செய்யலாம்//

:)))

வசந்தன்(Vasanthan) said...

அது கோமதியா கோமளாவா எண்டு சரியாத் தெரியேல. செல்லியின்ர பதிவிலதான் பாத்தன்.

டிசே தமிழன் said...

-அவசரமாய் ஒரு இணைப்பு-

சேலையை மட்டும் இலவசமாய் தந்தால் போதுமா அதை எப்படி அணிந்துகொள்வது என்றும் படிமுறை விளக்கம்(step by step) தரும்படி பலர் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்காய் சில வாரங்களுக்கு முன் ஒரு நடிகையை உரித்தகோழியாக்கி சேலை கட்டுவது எப்படியென்ற தமிழ்கலாசாரத்தை 'ஆழமும் விரிவுமாய்' சொல்லித்தந்த குமுதத்தை (or குங்குமத்தை) வாங்கிப் படித்து பயன்பெறுமாறு வேண்டப்படுகின்றீர்.
......
சங்கத்தில் முதல் உறுப்பினராய்ச் சேர்ந்த வசந்தனுக்கு இன்றிரவு நண்டுக்கறி வழங்கப்படும் :-).
.....
மற்றவர்களுக்கு விருந்து முடிந்தபின்-முடிந்தால்-பதிலளிக்கின்றேன்/பதிலளிக்கின்றோம்.

வசந்தன்(Vasanthan) said...

இப்ப புதுசா ஈழத்தமிழ் நண்டுகளின் கதை வந்திருக்கு.
சேலையுடுத்து ஈழத்தமிழ்ச்சமுதாயம் முன்னேற (கூடையிலிருந்து தப்ப என்றும் வாசிக்கலாம்) முயலும்வேளையில் கீழிருந்து காலையிழுத்து விழுத்தும் துரோகி நண்டுகளை என்ன செய்யலாம்?
(சீலையுடுத்தா ஏறுறது கஸ்டம், அதாலதான் நண்டுகள் தடுக்கி விழுகின்றன எண்டு ஆரங்க குசுகுசுக்கிறது?)
நண்டுக்கதை வேறேதேன் பதிவின் தாக்கமா என்று தெரியவில்லை.
அவரின் பதிவில நானெழுதின பின்னூட்டங்கள் இன்னும் வெளியாகவில்லை.
வெளியிடப்படுமா என்று பார்ப்போம்.

ஈழநாதன்(Eelanathan) said...

நான் ஏற்கனவே என் பதிவில் சொல்லியிருக்கிறேன் என்ரை அப்பப்பாவின்ரை அப்பா கோவணம் மட்டும்தான் கட்டியிருந்தவர் அதுதான் தமிழ்க்கலாச்சார ஆண் உடை அதை அணிந்து முதலில் தமிழ்க்கலாச்சாரத்திற்கு மாறுமாறு டி.சேயையும் வசந்தனையும் வேண்டிக்கொள்கிறேன்.

தமிழ் நண்டிலை எப்படி குழம்பு வைக்கிறது எண்டு சமையற் குறிப்பு ஆருக்காவது தெரியுமே.

tamilnathy said...

டி.சே.
முன்பு தோள்சீலை போராட்டம் என்று ஒன்று நடந்ததாக அறிந்திருக்கிறேன். கீழ்ச்சாதிப் பெண்கள்(கீழ்ச்சாதி மேல்சாதி பெண்சாதி எல்லாம் அவர்கள் அருளியதுதான்)மார்பை மறைத்து துணி போடக்கூடாது, மேல்சாதியார் ரசிப்பதற்கென (பயாஸ்கோப்)அப்படியே விட்டுவிடவேண்டும் என்று இருந்ததாம். பிறகு ஒழுங்காக சேலை கட்டிய தமிழ் மாதராக்கி எங்களை மேன்மைப்படுத்தினார்கள். இப்போது நீ இது போடு அது போடு என்று உடுப்பு விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறார்கள். நான் கற்பனை செய்து பார்த்தேன். அந்தக் குளிருக்குள் சேலை கட்டி இழுத்துப் போர்த்தி 'பவ்யமாக' நடந்து போவதை. காலக்கொடுமையடா சாமி என்று பெருமூச்சு விடுவதைத்தவிர பாவம்(கவனிக்கவும்)பெண்களாகிய நாம் வேறென்னதான் செய்ய முடியும். 'நச்'சென்றிருக்கிறது பதிவு. நீங்கள் நல்ல பிள்ளையாக ஆகிக்கொண்டு வருகிறீர்கள்.

டிசே தமிழன் said...

பெயரிலி, வசந்தன் டோட்டியைப் பற்றிப் பேஸுவார். நான் பிறகு கோட்டியைப் பற்றி விளக்கிறன்.
.....
கலாசாரம் சீரழிந்துபோகின்றதே என்று நாமெல்லோரும் கவலைப்படுகையில் என்ன ஆச்சு என்று எதுவும் தெரியாமல் அப்பாவியாய் கேட்கும் சிநேகிதியை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.
....
மாதுளன் மற்றும் மாதிலன்: இடுப்பென்றால், சும்மா தும்பி பறக்கும்போதே ஒடிந்துவிடக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற நளவெண்பாப்பாடலில் தமயந்தியை வர்ணித்ததைப் படித்தது நினைவு. தமிழ் இடுப்பு அப்படித்தானே இருக்கவேண்டும் :-)?
...........
செல்வநாயகி :-).
.....
அற்புதன்: தமிழன் யார் என்று ஆதியில் போய் மரபணுக்கள் எல்லாந்தேடும் எண்ணம் எனக்கிப்போதில்லை. எவராயிருந்தால் எவருக்கென்ன? கொஞ்சம் சீரியஸாய் பேசுகின்றதென்றால் பெரியார் கூறியவற்றை முன்வைத்துத்தான் பேசவேண்டியிருக்கும். பிறகொருமுறை பெரியாரை எழுதும் சந்தர்ப்பம் வாய்த்தால் விரிவாக எழுத முயற்சிக்கின்றேன்.
....
திவ்யாவின்ர தங்கச்சி: நீங்கள் அக்காவிற்கு எதிர்மாறாய் இருக்கிறியள் :-).
....
வெற்றி: நன்றி.
....
/எங்கையோ இணையத்திலை அந்த ஓவியம் பார்த்தனனான் கிடைச்சால் போடுறன்.. /
சின்னக்குட்டி, எடுத்துப்போடுங்கோ...இப்படியாவது நாங்களும் எங்கள் கலாசாரத்தை அறிந்துகொள்ளுவோம்...ஆனால் பாருங்கோ...சேலை கட்டவேணும் என்று சொன்னதிற்கே அஸின் செருப்பைக் காட்டுகிறா....(சும்மா செருப்புமில்லை; ஹை ஹீல்ஸ்). எனவே இந்தப்படத்தைப் போட்டு உங்களுக்கு வரும் பின்விளைவுகளுக்கு எங்கள் சங்கம் பொறுப்பேற்கமாட்டாது :-).
....
வசந்தன் & ஈழநாதன்: சங்கத்தில் சங்கமித்தமைக்கு நன்றி.

Anonymous said...

அட பாவிகளா .... வெளிநாட்டிலா புங்குடுதீவு தொடங்கி கொட்டாடி பிள்ளையார் கொவில் வரைக்கும் சங்கம் வச்சிருகிறது காணாதெண்டு நீங்களுமா?

ம்....சங்கம் வச்சு தமிழ் வளர்த்த தமிழரெண்டதால கலாச்சாரக்கவலர் சங்கம் எண்டுகூட ஒண்டு வைக்கலாம்.

டி.சே. மடிசார் கட்டின அசின் எத்தனை அழகு.சிவகாசியில விஜய் அசினுக்கு சேலை கட்ட சொல்லி குடுத்த அட்வைஸ் மறந்திடீங்களோ?

Anonymous said...

//சங்கத்தில் முதல் உறுப்பினராய்ச் சேர்ந்த வசந்தனுக்கு இன்றிரவு நண்டுக்கறி வழங்கப்படும் :-).
//

என்னையும் சங்கத்தில் சேர்த்துக்கோங்கோ... எனக்கும் நண்டுக்கறி பிடிக்கும்!

:-)))

Anonymous said...

தலைப்பைப் பார்த்து, அதிசயமா உங்களுக்கு அசினின் சேலை கட்டிய படம் ஏதாச்சும் அகப்பட்டுடுச்சாக்கும்னு பார்க்க வந்தேன்.. இப்படி பயமுறுத்திட்டீங்களே! :))

சினேகிதி said...

\\கொட்டாடி பிள்ளையார் கொவில் வரைக்கும் சங்கம் வச்சிருகிறது காணாதெண்டு நீங்களுமா?\\

கொட்டடிப்பிள்ளையார் கேள்விப்பட்டது மாதிரியிருக்கே...எங்க இருக்கு அது?


\\கலாசாரம் சீரழிந்துபோகின்றதே என்று நாமெல்லோரும் கவலைப்படுகையில் என்ன ஆச்சு என்று எதுவும் தெரியாமல் அப்பாவியாய் கேட்கும் சிநேகிதியை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.
\\

உம்மட வலைப்பதவில சேலை பார்க்கும் படலம் என்று இருந்த உடனே நான் டிசே பொண்ணு பார்க்கப் போனதைப் பற்றி ஏதோ எழுதியிருக்கிறாராக்கும் என்று வந்து பார்த்தன் இரண்டு தரம் வாசிச்சுப் பார்த்தன் விளங்கினமாதிரியும் விளங்காத மாதிரியும் இருந்திச்சு அதான் என்ன ஆச்சு என்று கேட்டன்.ஆனால் இப்ப மூன்று சேலைப்பதிவு வாசிச்ச பிறகு உங்கள் எல்லாருக்கும் எங்களில எவ்வளவு அக்கறை என்று விளங்கிட்டுது.

Anonymous said...

பதிவுக்கு நன்றி.

யாதும் ஊரான் said...

வேணாம் ... வலிக்குது.. அழுதிடுவன்..

மிதக்கும் வெளி said...

யாரங்கே செருப்பு துடைப்பத்தோடு தமிழ்க்கலாச்சாரப் படை தயாராகட்டும்! புறப்படுங்கள் டிசேதமிழன் இடம் நோக்கி, தாரைதப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமா?

சிம்ரன் said...

"சேலையில வீடு கட்டவா?" பாடி அனுப்பலாமா?

Anonymous said...

//அற்புதன்: தமிழன் யார் என்று ஆதியில் போய் மரபணுக்கள் எல்லாந்தேடும் எண்ணம் எனக்கிப்போதில்லை. எவராயிருந்தால் எவருக்கென்ன? கொஞ்சம் சீரியஸாய் பேசுகின்றதென்றால் பெரியார் கூறியவற்றை முன்வைத்துத்தான் பேசவேண்டியிருக்கும். பிறகொருமுறை பெரியாரை எழுதும் சந்தர்ப்பம் வாய்த்தால் விரிவாக எழுத முயற்சிக்கின்றேன்.//

டிசே,
உமக்கும் இந்தப் பின்னூட்டத் தொற்று நோய் வந்திட்டுப் போல.உமது நேரத்தை இவ்வாறான சின்னப்புள்ளத்தனமான விடயங்களில செலவழிப்பதை விட, பெரியார் பற்றிய சீரியசான விடயங்களில் செலவழிப்பது உமக்கும், எனக்கும் ,தமிழ் கூறும் நல்லுலகிற்கும் பயன் உடையதாக இருக்கும் என்பதே எனது தாழ்மையான கருத்து.அசின்,பெண்களின் உடை,இடுப்பு என்று நீரும் இன்னும் பதினம வயசுக் கோளாறுகளோட தான் இருக்கிறீர் எண்டு சொல்லாதையும்.

டிசே தமிழன் said...

நதி: பெருமூச்சு எல்லாம் எதற்கு? நேற்றிரவு பெரியாரைப் பற்றிய புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தபோது பெரியார் எவ்வளவு தீர்க்கதரிசனமாய்(?) சிலவிடயங்களைக் கூறியிருக்கின்றார் என்ற வியப்புத்தான் வந்தது...அதில் ஒன்று...பெண் விடுதலை என்றைக்கும் எந்த ஆணாலும் முன்னெடுக்கப்படமுடியாது ....என்பது.
.......
பாலபாரதி: சங்கத்தில் சேர்ந்து நண்டுக்கறியை மட்டும் சுவைக்காமல்,கலாசாரம் பற்றியும் காரசாரமாய் அலசவும் :-).
.....
பொன்ஸ், சினேகிதி, லட்சுமி, யாதும் ஊரன்: வருகைக்கு நன்றி :-)
....
சுகுணா திவாகர்: வருகின்ற கலாசாரப்படை எங்களை வாழ்ததத்தானே வருகின்றார்கள்....அப்படியென்றால் வரட்டும்.....வரட்டும்.
....
சிம்ரன்: நல்ல பாடல் :-). ஆகவே நீங்களும் சங்கத்தில் இணைக்கப்படுகின்றீர்கள்.
....
அற்புதன்: உங்கள் அபிப்பிராயத்தை கவனமாய் கேட்டுக்கொள்கின்றேன். என்ன செய்ய, பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும் என்பதுபோல, இயல்பில் எப்படியிருக்கின்றேனோ அப்படித்தானே வலைப்பதிவிலும் இருக்க முடிகின்றது :-(?

பொன்ஸ் said...

பழைய படம் காட்டும் வார்ப்புரு ரொம்ப நல்லா இருந்ததே டிசே :((

நளாயினி said...

நான் என்ரை ஆளை வேட்டி கட்டித்தான் ( விசேடங்கள் கோவில்கள்.) எங்கையும் அழைத்துச்செல்வேன். அப்படி போகிறபோது எவ்வளவு அழகாக இரக்கும். ஒரு தனிமதிப்பே வந்திடும். இதெல்லாம் மற்ற ஆண்களுக்கு எங்கை தெரியப்போகுது. ஆஆஆ.