-இதயம் இன்னும் வெறுமையாக இருப்பவர்கள் -இத்திருநாளில்- இப்பாடலகளில் உங்கள் கனவுகளை நிரப்பிக்கொள்ளவும்-
(பாடல்களும், பாடல்வரிகளும் சற்று அதிகமாய் flavour ஆனவை. 'Spicy' பிரச்சினை இருப்பவர்கள் தயவுசெய்து பார்ப்பதைத் தவிர்க்கவும்.)
.....
Nelly Furtado ft. Timbaland -
Nelly Furtado நமது நாட்டுக்காரி. போர்த்துக்கீசிய பின்புலம் உடையவர். Averil Lavigne போல Nelly Furtadoவின் பாடல்களும் எனக்குப் பிடித்தமானவை.
............
NeYo: R&Bயில் அண்மைக்காலமாய் பிரகாசித்துக்கொண்டிருப்பவர்.
............
Rihanna: Beyonce, Ciara வரிசையில் வருபவர். இவரை நேரில் பார்த்தபோது, 'எல்லாம் கமரா செய்யும் அற்புதம்' என மனதைத் தேற்றிக்கொண்டேன்.
..........
மின்னல்கள் கூத்தாடும்.... (பொல்லாதவன்)
'குத்து' ரம்யா எனப்பட்ட திவ்யா.
............
பேரூந்தில் நீ எனக்கு... (பொறி)
பூஜா: அஸின், பாவனாவிற்கு அடுத்ததாய் ஈர்க்கும் நடிகை. சிங்களப்பெண்களின் சாயலிருப்பதால் அவர் மீது அதிகம் சாய்வு இருக்கிறதோ தெரியவில்லை. சில படங்களில் பூஜாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறதென்பது தமிழ்ச்சினிமாச் சூழலில் வியப்புத்தான்.
13 comments:
//எங்களுக்கும் பெண்களைப் பிடிக்கும்!//
தோழரே,
நல்லதுதான்; பெண்கள் பிடிக்கும்வரைக்கும் இப்பிடித்தான் தலைப்பைப் போட்டுக்கொண்டிருப்பீர்கள்.
சிக்கெனப் பிடித்தபின்னரேதான், விட்டு விடுதலையாகிச் சிட்டுக்குருவிபோல விண்ணெட்டப் பறத்தல் பற்றியெல்லாம் மட்டுமே தலைப்பு வரும் ;-)
//விட்டு விடுதலையாகிச் சிட்டுக்குருவிபோல விண்ணெட்டப் பறத்தல் பற்றியெல்லாம் மட்டுமே தலைப்பு வரும் ;-)//
விட்டு விடுதலையாகிக்கு இப்படி ஒரு அர்த்தம் உண்டா? நான் வேறு அர்த்தத்தில் படிமமாமப் பயன்படுத்தி வந்தேன் அதை!
விட்டு விடுதலையாகி வெளியேறுதலைப் பத்தி இரண்டு மூணு தடவை எழுதியிருக்கேன்.
டிசெ, வயசானவங்கள் சொல்றதை எல்லாம் கண்டுக்காதீங்க.
நாம ஸ்பானிஷ் பிகர் தேடுவோம் :)
I goofed in typing:-(
the correct lines are:
மோகன தாசரே,
"பெண்கள் பிடிக்கும்வரைக்கும்" என்றது பெண்கள் உம்மைப் பிடிக்கும் வரைக்கும் என்ற அர்த்தத்தில், நீர் பெண்களைப் பிடிக்கும்வரைக்கும் என்ற அர்த்தத்திலே அல்ல :-(
நீவீர் தேடுக தேடுக.. தெவிட்டாத தேனைத் தேடுக....
எங்கே தேடுவேன்? நான் எங்கே தேடுவேன்?
//எங்களுக்கும் பெண்களைப் பிடிக்கும்!//
//தோழரே,
நல்லதுதான்; பெண்கள் பிடிக்கும்வரைக்கும் இப்பிடித்தான் தலைப்பைப் போட்டுக்கொண்டிருப்பீர்கள்.
சிக்கெனப் பிடித்தபின்னரேதான், விட்டு விடுதலையாகிச் சிட்டுக்குருவிபோல விண்ணெட்டப் பறத்தல் பற்றியெல்லாம் மட்டுமே தலைப்பு வரும் ;-) //
பெயரிலியின் அநுபவம் அவருக்கு மட்டுமானதல்ல,உலகத்தில் வாழும் அனைத்து ஆண்களுக்கு-பெண்களுக்குமானது!அதுள் நானும் அடங்குகிறேன்!எப்போதுதாம் இந்த விடுதலையென நான் தவம் இருக்கிறேன்.மரணம்கூட விடுதலையாக இருக்குமோ என்றும் சில சமயங்களில் யோசிப்பதுண்டு.அவ்வண்ணமே அதை நாடிப் போனபின் மீளவும் மழலைகள் மொழிக் கேட்க பின் நகர்வாய் மீள்வதும் உண்டு!
டி.ஜே.க்கும் இந்த அநுபவம் கைகூடும்,பொறுத்திருங்கள்.அதற்காக வாழ்த்தி,மனதார விரும்பிப் பெண்ணம்மாளை வேண்டுகிறேன்.
உலகத்தில் வாழும் அனைத்து ஆண்களுக்கு-பெண்களுக்குமானது!//
அதெப்படி..
இப்படி பொத்தாம் பொதுவாக திணிப்பது வன்முறை. திணிப்பு.. இத்யாதி ..
தலைப்பிலே தட்டச்சுத் தவறா? எங்களுக்கு பெண்களை மடுமெ பிடிக்கும் என்றுதானே இருக்கவேண்டும்?
--fd
//..//உலகத்தில் வாழும் அனைத்து ஆண்களுக்கு-பெண்களுக்குமானது!//
அதெப்படி..
இப்படி பொத்தாம் பொதுவாக திணிப்பது வன்முறை. திணிப்பு.. இத்யாதி ..//
கொழுவி பாயாசமோ பாசிசமோ அதை விட்டுட்டீங்களே..
//எப்போதுதாம் இந்த விடுதலையென நான் தவம் இருக்கிறேன்.மரணம்கூட விடுதலையாக இருக்குமோ என்றும் சில சமயங்களில் யோசிப்பதுண்டு.அவ்வண்ணமே அதை நாடிப் போனபின் மீளவும் மழலைகள் மொழிக் கேட்க பின் நகர்வாய் மீள்வதும் உண்டு!//
சிறி அண்ணர்,
சொல்லவே இல்லை..
நான் நினைச்சன் பாட்டாளிகள் தான் உங்களை இழுத்துப் புடிச்சு கொண்டு நிக்கினம் எண்டு.
இப்பிடி எல்லாம் எதுவும் நினைக்கப்படாது. அப்புறம் ரயாகரன் அண்ணை தனிச்சு போடுவார். இந்த உலகப் பாட்டாளிகளை யாரையா காப்பாத்துறது?
தமிழ்மக்களை புலிப் பாசிசத்திடம் இருந்து யாரு கப்பாத்துவா?
இனி இப்பிடி சொல்லக்கூடாது சரிங்களாண்ணா..!
பெயரிலி: கொஞ்சக் காலமாவது எதிர்காலத்தை நினைத்து கவலைப்படாமல் இருப்பம் என்டால் விடமாட்டன் என்கிறியள் :-).
...
மோகன்: Victoria Secret LA Partyயில் எவரேனும் ஸ்பானிய மொடல்கள் இருந்திருந்தால், படங்களை அனுப்பி வைக்கவும். நான் உங்களுக்காய்த் தேடிப்பார்க்கிறேன் :-).
....
சிறிரங்கன்: எப்பவும் கிடைக்காத ஒன்றிற்காய் ஏங்குவது மனித மனத்தின் இயல்புதானே :-). வாழ்த்துக்களைப் பத்திரப்படுத்திக்கொள்கின்றேன்.
...
/எங்களுக்கு பெண்களை மட்டுமே பிடிக்கும் என்றுதானே இருக்கவேண்டும்?/
FD: இன்னும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள் என்றால், நீர் கொடுத்து வைத்தவர் தானய்யா.
....
கொழுவி & ஏழைப்பாட்டாளி நன்றி.
ஏழைப்பங்காளி: சிறிரங்கனினதோ அல்லது இராயகரனினதோ கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றோமோ இல்லையோ, ஆனால் அவர்களவில் அவர்களின் கருத்துக்களுக்கு அவர்கள் நேர்மையானவர்கள். வேறு சிலரைப் போல முன்னுக்கு ஒன்றைச் சொல்லிக்கொண்டு பின்னுக்கு மறைமுக வேலைகள் செய்து தாம் சொன்ன கருத்துக்களை விற்றுக்கொண்டிருப்பவர்களல்ல இவர்கள் என்றளவில் மதிக்கப்படவேண்டியவர்களே.
டிசே வரவர ரொம்ப மோசம்.
என்ர பேரை எல்லாம் மாத்திப் போடுறார்..
ஏழைப்பாட்டாளியை ஏன் ஏழைப்பங்காளி என்று மாத்தினீர்?
/வேறு சிலரைப் போல முன்னுக்கு ஒன்றைச் சொல்லிக்கொண்டு பின்னுக்கு மறைமுக வேலைகள் செய்து தாம் சொன்ன கருத்துக்களை விற்றுக்கொண்டிருப்பவர்களல்ல இவர்கள் என்றளவில் மதிக்கப்படவேண்டியவர்களே./
புரியல. சற்று விளக்கமாக சொன்னால் என்னவாம்.
பூஜா சிங்களத்தியே தான்.
தமிழீழ வான்படை இரண்டாம் முறையாகக் (உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியின்போது) கொழும்பிலே குண்டு போட்டபோது பூஜாவின்ர வீட்டைப் பாத்துத்தான் போட்டாங்களோ என்னவோ தெரியேல, அவவின்ர வீட்டுக்குக் கிட்டவாத்தான் விழுந்தது.
தமிழகப் பத்திரிகையொன்று 'நடிகை பூஜாவின் வீட்டருகே குண்டுவீச்சு' என்றுதான் செய்தித் தலைப்பையே எழுதியிருந்தது.
'பூஜாவின் வீட்டுக்குக் குண்டுபோட நினைத்த பாசிசப் புலிகளை ஒழிப்போம்' எண்டு அவவின்ர இரசிகர்களாகிய நாங்கள் ஏன் போராட்டம் நடத்தேல?
இப்பவும் காலம் கடக்கேல எண்டு நினைக்கிறன். இப்ப செய்தாத்தான் உண்டு. பிறகு அண்ணர் சொன்ன மாதிரி பெண்கள் பிடித்ததும் இதெல்லாம் செய்ய முடியாது.
'பேருந்தில் நீயெனக்கு' பாடல் தபுசங்கர் எழுதியதாமே? அண்ணாருக்கும் கலியாணமாம்.
பாரும் ஐசே கொடுமையை!
"காதலைப் பாடவே எனக்கு இந்தப் பிறப்பு" என்று அறிக்கை விட்டவருக்கே காதல் திருமணமில்லை; பெற்றோர் பேசிச் செய்தவையாம்.
நீரெல்லாம் எம்மாத்திரம்?????
ஆ...ஏழைப்பாட்டாளி பெயரை மாற்றியதற்கு மன்னிக்கவும் (வயசு போச்சல்ல...).
....
/புரியல. சற்று விளக்கமாக சொன்னால் என்னவாம்./
எங்கடை ஆக்களின் forumsஐ எட்டிப்பார்த்தால் இப்படியான ஆக்களின் தண்டவாளம், வண்டவாளம் தெரியவரும். அதுகூட வேண்டாம், இவ்வாறான 'ஆசாமிகளை' கொஞ்ச நேரமிருத்தி ஒரு நேர்காணலைக் கண்டுவிட்டால் உள்ளே இருப்பதெல்லாம் தானாக வெளியே வந்துவிடும். சார்த்தாரும், ஃபூகோவும் நேர்காணலுக்கென்றே பெரும் நேரங்களைச் செலவழித்தவர்கள். தமது கருத்துக்களைப் பரவலாக கொண்டு செல்லக்கூடிய ஊடகம் என்று கருதியவர்கள். ஆனால் எங்கடை ஆக்களின் நேர்காணலைக் கண்டால், இதற்கு முன் அவர்கள் எழுதியது/விவாதித்தது எவ்வளவு அபத்தமானது என்பது தெரியவரும்.
...
வசந்தன், பூஜாவின் பெற்றோரில் ஒருவர் சிங்களவர் என்பதும் தெரியும். இப்ப பூஜா சிங்களச் சினிமாவில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றாராம். அவர் அண்மையில் நடித்த, aasai mama piyaambanna (i love to fly) தான் அந்தமாதிரி வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கின்றதாம். . தமிழைக்கூட பிள்ளை இங்கே திக்கித்திணறிக் கதைப்பது கூட அழகுதான்.
Post a Comment