Thursday, May 22, 2008

இயல் விருது - 2008

-ரொரண்டோ, மே 19, 2008

















--------


காணொளியில்...

பாமாவின் உரை


வாசுதேவனின் ஏற்புரை


'மதுரைத் திட்டம்' கல்யாணசுந்தரத்தின் ஏற்புரை

Monday, May 12, 2008

புழக்கடை மனிதர்கள்
-ரவிக்குமார்


.....நமது வீடுகளில் வேலைசெய்யும் பணிப்பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம்? தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற வீடு வீடாகப் பாத்திரம் கழுவியும் துணிதுவைத்தும் பெருக்கியும் துடைத்தும் அல்லல்படுகிற வீட்டுப் பணியாளர்களைக் குறித்துச் சிந்திப்பதற்கும்கூட நமக்கு நேரம் இருப்பதில்லை.

வீட்டுப் பணியாளர்களைப் பற்றி நமது சினிமாக்களும் பத்திரிகைகளும் புனைந்துவைத்துள்ள கட்டுக்கதைகள் தாம் நமது அபிப்ராயங்களை வடிவமைக்கின்றன. குடும்பத் தலைவர்களை மயக்கும் 'கவர்ச்சிக் கன்னி'களாகவே வீட்டுப் பணியாளர்களைப் பெரும்பாலான திரைப்படங்கள் சித்திரித்துவருகின்றன. தொலைக்காட்சி நெடுந்தொடர்களோ இன்னும் மேலே போய், அவர்களை 'வில்லி'களாக்கிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் உண்மையல்ல என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் வெளிப்படையாக நாம் அவற்றை மறுப்பதில்லை.

'சம்பளத்துக்காக வேறொரு வீட்டில் வீட்டு வேலைகளைச் செய்பவரே வீட்டுப் பணியாளர்' என சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது. அறைகளைச் சுத்தப்படுத்துதல், சமைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைச் பெருக்கிச் சுத்தமாக வைத்திருத்தல் & இப்படி அவர்கள் செய்யும் வேலைகளையும் கூட அது விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறது.

.......
.......
.......

கண்ணன் & என் சேவகன் என்ற கவிதையை பாரதி எழுதிய காலத்தில் இந்த அளவு நகரமயமாக்கல் நடந்திருக்கவில்லை. எனவே, நகரத்தைக் காட்டிலும் கிராமமே அவரது சிந்தனையில் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருந்தது. கண்ணன் & என் ஆண்டான் என்ற கவிதையில் அவர் ஒரு கிராமத்து அடிமையையே சித்தரிக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய நந்தன் சரித்திரக் கீர்த்தனையின் செல்வாக்கையும் பள்ளுப் பாடல்களின் தாக்கத்தையும் பாரதியின் அந்தக் கவிதையில் நாம் பார்க்க முடிகிறது. 'காடு கழனிகள் காத்திடுவேன் நின்றன் காலிகள் மேய்த்திடுவேன்; பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென் பக்குவஞ் சொல்லாண்டே' என்ற வரிகளில் அதை நாம் தெளிவாகவே பார்க்கலாம். கண்ணன் & என் சேவகன் என்ற கவிதையிலும்கூட மாடு கன்று மேய்ப்பது பற்றி அவர் குறிப்பிடுகிறார். 'மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்; வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்' என்ற வரிகள் அதை எடுத்துக்காட்டும். கண்ணன் என்ற சேவகனின் பெருமைகளை, பாரதி விதந்துரைப்பது ஒருபுறமிருக்க பொதுவில் பணியாட்கள் குறித்து அவர் தீட்டிக்காட்டும் சித்திரம் நம்மைத் திகைப்படையச் செய்கிறது. 'கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெல்லாம் தாமறப்பார்; வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்' என்று அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் பாரதி 'ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார் தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்' என்று வீட்டுப் பணியாளர்களைப் பேராசைக்காரர்களாகவும், பொய் சொல்பவர்களாகவும், துரோகம் செய்பவர்களாகவும் சித்தரித்துக் காட்டுகிறார். இப்போதும் பொதுப்புத்தியில் அவர்களைப் பற்றிப் பதிந்துள்ள கருத்துகள்தான் பாரதியின் கவிதையிலும் கசிந்திருக்கிறது. ஒரு சேவகன் எப்படி இருக்க வேண்டும் என அவர் வர்ணித்திருப்பதைப் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சியே ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக 'காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை' என அந்த சேவகன் கூலியே வேண்டாமென மறுப்பதைப் பார்க்கையில், பாரதி காட்டும் 'உதாரண சேவகனின்' குணாம் சங்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன.

மேலும் வாசிக்க...

(நன்றி: காலச்சுவடு)