இருத்தல் சார்ந்த வழமையான கேள்விகளும், புறச்சூழல் குறித்த நெருக்கடிகளும் தின்றுகொண்டிருக்க எனக்கான நாட்கள் திணறிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன. வாசிப்பதும், எழுதுவதும், உலாத்துவதும் தான் எனக்குப் பிடித்தமான வெளிகளென வெளிப்படையாக எவரிடமும் கூறப் பயமாயிருக்கிறது. இவ்வாறாக உலகின் 'அதிமுக்கிய பிரச்சினைகளால்' குழம்பிப்போய் எங்களுடைய அடுக்குமாடிக் குடியிருப்பிற்கான எலிவேற்றரில் ஏறியபோது, அங்கேயிருந்த வாசகங்கள் கண்ணில்பட்டன. 'ஒருவருடைய வாழ்க்கையில் அதிகம் சக்தியை விழுங்கும் விடயம் என்னவென்றால் 'கவலைப்படுவதுதான்' என்றும், எதைப் பற்றியும் அதிகம் தீவிரமாய் யோசிக்காமல் வாழ்வதுதான் வாழ்க்கை என்றும் எழுதிவைத்திருந்தார்கள். எனக்காகத்தான் எழுதிவைத்திருந்தார்கள் போலும்.
எப்பவோ வாங்கி தேங்கிக்கிடந்த சில புத்தகங்கள் இந்த வாரவிறுதியில்தான் கையில் கிடைத்திருந்தன. புத்தகங்கள் வாசிப்பதைப் போல சுவாரசியமாய் ஏன் வாழ்க்கையிருப்பதில்லையென வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ள மீண்டும் தொலைந்தவனானேன் - நான்.
தனிமையின் வழி - சுகுமாரன்
வெயில் உலர்த்திய வீடு - எஸ். செந்தில்குமார்
ஒரு தலித்திடமிருந்து - வசந்த் மூன்
ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் - ஆனந்த டெல்டும்ப்டே (தமிழாக்கம் எஸ்.வி.ராஜதுரை)
வரலாற்றை நேர் செய்வோம் - தலித் முரசு பேட்டிகள் - 1
வரலாற்றை நேர் செய்வோம் - தலித் முரசு பேட்டிகள் - 2
நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை
மார்க்சியம் பெண்ணியம்: உறவும் முரணும் - தமிழில் வெ.கோவிந்தசாமி, வெ.நடராஜ்
தலித்தியல் - இராம். குருநாதன், பத்மாவதி விவேகானந்தன்
ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது - முகுந்த் நாகராஜன்
சீதமண்டலம் - கண்டராதித்தன்
நிழலன்றி ஏதுமற்றவன் - ஜெ. பிரான்சிஸ் கிருபா
மரம் பூக்கும் ஒளி - கோகுலக்கண்ணன்
கள்ளிகாடும் செம்பொடையனும் - மஜீத்
கங்கணம் - பெருமாள் முருகன்
புனைவின் நிழல் - மனோஜ்
நிலாச் சமுத்திரம் - தேவகாந்தன்
உறுபசி - எஸ்.ராமகிருஸ்ணன்
நிழல்வெளிக் கதைகள் - ஜெயமோகன்
கூடவே புதிதாய் வந்து சேர்ந்தவை:
ஒற்றைச் சிலம்பு - மாதுமை
விடுதலை முகம் - சு.வில்வரத்தினம் (மறைவின் பின்)
அபகரித்த சில:
கட்டுரையும் கட்டுக்கதையும் - ரமேஷ்- பிரேம்
விளிம்பு நிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும் - தொகுப்பு அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி
நமக்கிடையிலான தொலைவு - ம.மதிவண்ணன்
No comments:
Post a Comment