இவ்வருட புக்கர் பரிசு சினுவா ஆச்(சு)பேயிற்கு கிடைத்திருக்கின்றது. விருது அவரது நாவல்கள் அனைத்துக்கும் பொதுவாய் வழஙக்ப்பட்டிருக்கின்றது. இருவருடங்களுக்கு ஒருமுறை -2005 லிருந்து? - எழுதப்பட்ட அனைத்து நாவல்களையும் கவனத்தில் கொண்டு உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நாவலாசிரியருக்கு இப்புதிய விருது வழங்கப்படுகின்றது.
சினுவா ஆச்(சு)பேயின் நாவலான Things Fall Apart தமிழில் 'சிதைவுகள்' என்ற பெயரில் கே.மகாலிங்கம் மொழிபெயர்த்திருக்கின்றார்; தலைப்பின் மொழிபெயர்ப்பு சரியா? என்று சிவசேகரம் கொஞ்சம் கொழுவியதை 'சிவசேகரத்தின் விமர்சனங்கள் - 2' நூலில் பார்க்கலாம்.
இவ்வருட புக்கர் விருதிற்கான இறுதிப்பட்டியலில் கனடாவின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களான மார்க்கரட் அட்வூட்டும் (Margaret Atwood) , மைக்கல் ஒண்டாச்சியும் (Michael Ondaatje) இருந்திருக்கின்றார்கள்.
2 comments:
பரவாயில்லை உடனே தகவல் தந்துள்ளீர்கள், நம்மளுக்கும் புக்கர் பரிசு இல்லைனா குக்கர் பரிசு வாங்கனும்னு கலைத்தாகம் உண்டு! அதை எப்படி காட்டுறதுனு தான் தெரியலை.
வவ்வால் கனடா போன்ற நாடுகளில் நீங்களிருந்திருப்பின் FoodTv யில் முயற்சியுங்கள் என்று கையைக் காட்டியிருப்பேன். என்ன விதம் விதமாய், வர்ணம் வர்ணமாய் சமைத்துத் தள்ளுகிறார்கள். சிறந்த சமையற்காரர்களுக்கு என்று நிகழ்ச்சிகளும் நடத்தி மில்லியன் கணக்கில் பரிசும் கொடுக்கின்றார்கள். அறுபத்து நான்கு கலைகளில் அதுவும் ஒரு கலைதானே :-).
Post a Comment