Tuesday, July 07, 2009
மனதிற்கு நெருக்கமான சில பாடல்கள்
Eminem-Black Eyed Peas-Melissa-Akon
அண்மையில் வெளிவந்த இறுவட்டுக்களில் எமினெமின் Relapse ஐயும், Black Eyed Peasன் The E.N.D (Engery Never Dies) வந்த அன்றைய தினங்களிலேயே வாங்கியிருந்தேன்.
எமினெமின் இறுவட்டு வெளிவரமுன்னரே We Made You என்ற பாட்டு வீடியோவாகவும் வெளிவந்திருந்தது. அது வழமையான புகழ்பெற்றவர்களை நக்கலடித்துப் பாடுகின்ற பாடல். எமினெமின் பாடல்கள் கிட்டத்தட்ட ஏ.ஆர்.ஆரின் பாடல்களைக் கேட்பதைப் போன்றது. அதாவது மொந்தையில் வைத்த கள் ஊற ஊறத்தான் அதிகம் வெறிக்கச் செய்கின்றமாதிரி, தொடர்ச்சியாக பல முறைக் கேட்டால்தான் மனதுக்கு அதிக நெருக்கமாகும். முதலாவது தடவையாக இசை கேட்டலில் எமினெமோ, ஏ.ஆர்.ஆரோ சாதாரணமாய்த்தான் தெரிவார்கள்.
எமினெமின் இந்த பாடற்தொகுப்பு கிட்டத்தட்ட ஜந்து வருடங்களுக்குப் பிறகு வெளிவந்திருக்கின்றது. அதுவும் இனி எமினெமின் மீள்வருகை சாத்தியமில்லை என்று எல்லோரும் எதிர்வுகூறியபோது எமினெம் தனது தனது ஆறாவது இசைத்தொகுப்பான Relapse மூலம் வெளியே வந்தது ஆச்சரியமான ஒரு நிகழ்வே.
இந்த அய்ந்து வருடங்களில் ஒருமுறை அதிக போதை மருந்துகளை எடுத்து கிட்டத்தட்ட சுயநினைவில்லாது கிடந்து மரணத்தை நெருங்கியிருக்கின்றார் எமினெம். அத்தோடு போதையடிமையிலிருந்து வெளிவருவதற்காய், போதைமருந்து மறுவாழ்வு நிலையத்திற்கு சிகிச்சைக்காய் சென்று இடைநடுவில் கைவிட்டு வந்துமிருக்கின்றார். தான் போதை மருந்துக்கு அடிமையாவதிலிருந்து தப்புவதற்கு ஒரேவழி இசைக்குள் நுழைவதுதான் என்கின்றார் எமினெம், அண்மையில் வந்த நேர்காணல் ஒன்றில். இப்பாடற்தொகுப்பு முழுதும் போதை மருந்துக்கு அடிமையாவது குறித்தும், அதன் இருண்ட பக்கங்கள் குறித்தும், தனக்குள் கேட்கும் பல குரல்கள் பற்றியும்தான் எமினெம் அதிகம் பாடுகின்றார். அதுவும் Relapseல், அவ்வப்போது சில நிமிடங்களே வரும் உரையாடல்களினால் எமினெம் தன்னைத்தானே நக்கலடிக்கும் பகுதிகள் கவனிக்கத்தக்கவை. தன்னையே எள்ளல் செய்யமுடியும் ஒருவனால், பிறரை எந்தத் தாட்சண்யமுமில்லாது நக்கலடிக்க முடியும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
Jessica Simpsons, Amy Whinehouse, Britney Spears, Hilary Duff, Jessica Alba போன்ற அநேக celebraties நக்கலடிக்கப்படுகின்றார்கள்.
வழமை போலவே ஓரினச் சேர்க்கையாளர்களையும் Lindsy Lohanஐ முன்வைத்து நக்கலடிக்கவும் செய்கின்றார். தானொரு விளிம்புநிலை மனிதன் என்பதை (white america) உட்பட பல்வேறு பாடல்களில் உணர்த்தச் செய்கின்ற எமினெம் தொடர்ச்சியாக விளிம்புநிலை மனிதர்களாக இருக்கும் ஒரினச்சேர்க்கையாளர்களை அதிகம் நக்கலடிப்பதை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் விளங்கவில்லை.
ஆனால் எனக்கு We made you பாடலை விட Beautiful என்ற பாடலே அதிகம் பிடித்திருந்தது. தனிமையையும்,அதன் நிமித்தம் எழுகின்ற மன அழுத்தத்தையும் அதிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையையும் கூறுகின்ற அழகான ஒரு பாடல்
(Warning: Some Scenes & Language are inappropriate for Children)
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
பகிர்வுக்கு நன்றி அண்ணன்.
அரேபியப்பாடல்களின் உருக்கம் நெருக்கமாகத்தான் இருக்கம் புரியாவிட்டாலும்..
அரேபிய நாட்டில் இருந்தாலும் அரேபிய பாடல்கள் கேட்பதற்கான சூழல் குறைவாகத்தான் வாய்க்கிறது, தனியே இருக்கிற சந்தர்ப்பங்களில் அரிதாகக்கேட்டிருக்கிறேன்.
சொல்ல மறந்ததொன்று, அரேபியப்பெண்கள்...
அட போங்க டிசே சும்மா வெக்கையைக்கிளறிக்கிட்டு :)
பகிர்வுக்கு நன்றி டிசே
நான்சிய பாக்க ஒரு எட்டு வந்துட்டு போறது :)
eminem? ew
Fergie-ai spoil paNNathu Black eyed peas thaan.. She was so beautiful in her melodies.
listening to eminem, okay-ish lyricist.
the shoes bit. i like it
=)
aanaal, ena unga greats ellam homophobic macho guys-aa irukkaangkaLo theriyeallai. 50 cent, eminem..
but it's totally cool i guess. i know this gay guy who is a hardcore eminem fan, i tried to throw my bitching over this contradiction and he was like 'huh?'.
'it's the music that matters, dummy!'
*screech*
தமிழன்-கறுப்பி:
/அரேபியப்பெண்கள்...
அட போங்க சும்மா வெக்கையைக்கிளறிக்கிட்டு /
உங்குள்ள கொதிக்கும் வெப்பநிலைக்கு, அரேபியப் பெண்கள் 'அனல் மேற்பனித்துளி'யாக குளிர்ச்சியை அல்லவா தரவேண்டும் :-)
.....
அய்யனார்:
நான்சி மட்டுமில்லை, மெலிஸாவும் லெபனான் பக்கமாய்த்தானிருக்கின்றார். யாராவது ஒரு ஷேக் sponsor செய்தால் வராமலா போய்விடுவேன் :-)
....
ஹரி,
Fergie, Black Eyes Peasற்கு வந்ததன் பிற்குதான் எனக்கு அறிமுகமானார்.
/Fergie-ai spoil paNNathu Black eyed peas thaan.. She was so beautiful in her melodies./
என்று நீங்கள் கூறுவது உண்மையாகக் கூட இருக்கலாம்; ஆனால் Fergie பரவலான கவனத்தைப் பெற்றது Black Eyed Peasகுழுவில் இணைந்ததன் பின் என்றே நினைக்கின்றேன்.
/macho guys/ஜப் பிடிப்பதற்கு இயல்பில் அப்படி என்னால் இருக்கமுடியாதது ஒரு காரணமாய் இருக்கக்கூடுமோ என யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
Post a Comment