Saturday, January 26, 2008

வெளியீட்டு விழா: மு.தளையசிங்கம் படைப்புகள்

-விழாவில் நிறையப் பேச்சாளர்கள் பேசினார்கள்...

- தளையசிங்கத்தின் ஒரு தொகுப்பு வெளிவந்தபோது, மெளனியிடம் அத்தொகுப்பைக் கொடுத்தபோது, ஈழத்தில் நன்கு எழுதுகின்றவர்களென வ.அ.இராசரத்தினத்தையும், மு.தளையசிங்கத்தையும் குறிப்பிட்டு மெளனி தனக்குச் சொன்னாரென ஒருவர் (சிவானந்தன்?) கூறினார்.

- இம்முழு தொகுப்பின் விலை சற்று அதிகம். 50 டொலருக்கு விற்கபட்டது (கனடாவின் டொலர் பெறுமதி அண்மைக்காலமாய் அமெரிக்காவின் டொலரோடு சரிசமனாய் இருக்கின்றதென்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இங்கே எதுவுமே விலை குறைந்ததாய்க் காணவில்லை என்பது வேறுவிடயம்). இந்தியாவில் விலை ரூபாய் 500 எனப்போடப்பட்டிருக்கின்றது. புத்தக விலை + அனுப்பிய தபாற்செலவு என்றால் கூட 20 -25 டொலரிற்கு மேற்போகச் சாத்தியமில்லை; அதைச் சற்றுக் கவனித்திருக்கலாம். இல்லையெனில் சேரவேண்டியவர்களைப் போய்ச்சேராது அழகிற்கும் அலங்காரத்திற்குமென அலுமாரியை நிரப்புவர்களை மட்டுமடைந்து தொகுப்பு உறங்குநிலைக்குப் போய்விடும் அபாயமுண்டு.

- கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களுக்கு வந்திருக்கும் தொகுப்பை கனடாவில் இயங்கும் மறுமொழி ஊடக வலையமும், காலச்சுவடும் இணைந்து பதிப்பித்திருக்கின்றது. காலச்சுவடா? நான் அதைப்பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை..









26 comments:

கானா பிரபா said...

பதிவுக்கும் படங்களுக்கும் நன்றி டிசே

ஒரு சிலர் விலை கொடுத்து வாங்க, மற்றவர்கள் நூலகத்தில் தான் படிக்கக் கூடிய வாய்ப்பை இந்த நூலின் விலை காட்டுகின்றது.

ஈழநாதன்(Eelanathan) said...

http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இளங்கோ-டிசே said...

பிரபா: ம்... விலை அதிகந்தான்.
...
ஈழநாதன்: நூலகத்திலிருக்கும் மு.தவின் நூல்கள் பற்றிய இணைப்புக்கு நன்றி. பிரபாவும் இந்த 'நூலகத்தைத்தான்' குறிப்பிட்டார் என நினைக்கின்றேன்.
...
இவ்வாறான தொகுப்புகள் வருவது நல்லது. இல்லாவிட்டால் எழுபதாம் ஆண்டுக்கு முன் ஈழத்திலக்கியம் விரல் சூப்பிக்கொண்டிருந்தது (நன்றி: மு.புஸ்பராஜன்) போல, அடுத்த பத்திருபது வருடங்களில் தமிழகத்து ஜாம்பவான்கள் இரண்டாயிரத்தில் ஈழ/புலம்பெயர் இலக்கியம் தவழத்தான் தொடங்கியிருந்ததெனச் சொன்னால் இவ்வாறான தொகுப்பால் திருப்பி அடிக்கவாவது உதவுமல்லவா?

ஈழநாதன்(Eelanathan) said...

//இவ்வாறான தொகுப்பால் திருப்பி அடிக்கவாவது உதவுமல்லவா?//

அண்ணை புத்தகத்தின்ரை பருமனைப் பார்த்த பிறகும் இப்படிச் சொல்கிறீர் என்றால் நீர் துணிஞ்ச கட்டை தான்.இந்தத் தொகுப்பாலை அடிக்கிற விளையாட்டுக்கு நான் வரேலை

இளங்கோ-டிசே said...

ஈழநாதன்:அடிக்கவெல்லாம் வரவில்லையப்பா. பிறகு ஊட்டியில் மு.தவை நாங்கள்தான் ஊட்டி வளர்த்தோம் என்று ஓடிவருவார்கள். அதைவிடும்;
உங்கால் பக்கம் காலச்சுவடு கண்ணன் வந்தால் இதைக்கேளும்...
மு.தவைப் பற்றி சு.ரா எழுதிய கட்டுரையில் (தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் ) பாரதி, புதுமைபித்தனுக்குப் பிறகு மூன்றாவதாய் வருபவர் மு.தளையசிங்கம் என்று தான் சு.ரா குறிப்பிடுகின்றார். இன்னும் திருத்தமாக சு.ராவின் வார்த்தைகளில் சொல்வதனால், பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது என்றிருக்கின்றார். அப்படியாயின் பாரதிக்கு 150, பு.பித்தனுக்கு 100, சு.ராவுக்கு 75 எனக் காலச்சுவடு கொண்டாடும்போது மு.தவைத் தவறவிட்டது எந்தவகை அரசியலில் சாத்தியமானதென என் சார்பில் கண்ணனிடம் கேட்டுப்பார்க்கவும்.
....
நண்பர்களுக்கு:
தோற்று போவோமா... தொகுப்பு இணையத்தில் கிடைக்கிறதென்று உயிர்நிழலில் இருந்து மெயில் அனுப்பியிருக்கின்றார்கள். விரும்பினால் இங்கே சென்று எட்டிப்பார்க்கவும்:
http://www.uyirnizhal.com/e-book.html

ஈழநாதன்(Eelanathan) said...

அதுக்கென்ன கேட்டால் போச்சு
பாரதியையும் புதுமைப் பித்தனையும் காலச்சுவடு தத்து எடுத்துவிட்டது.தளைய சிங்கத்தைப் பங்கு பிரிப்பதில் பிரச்சனை இதுவே தளையசிங்கமோ தம்பி பொன்னம்பலமோ காலச்சுவட்டிற்கு தளையசிங்கத்தை அறுதி எழுதிக் கொடுத்திருந்தால் ஒரு வேளை சாத்தியப்பட்டிருக்கலாம் இப்ப என்னடாவென்றால் தளையசிஙம் ஜெயமோகன் வேதசகாயகுமாரின் ஆளோ என்று எனக்கே சந்தேகம் காலச்சுவட்டுக்கும் கண்ணணுக்கும் அந்தச் சந்தேகம் வராமல் இருக்குமா?

அதுசரி பகிடியை விட்டிட்டுக் கேட்டால் தளையசிங்கத்தை ஈழத்தில் எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறோம்?ஒரு சிறுகதைக்கும்,கவிதைக்கும் கொடுக்கும் மதிப்பை ஏன் தத்துவாசிரியனாக தளையசிங்கத்துக்குக் கொடுக்கவில்லை.முற்போக்கு நற்போக்கு பிரச்சனைகள் புகழ் பெற்ற அளவுக்கு ஏன் தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் என்னும் கோட்பாடு விமர்சிப்பார் இல்லாமலும் விசாரிப்பார் இல்லாமலும் ஏன் வழக்கொழிந்து போயிற்று?இன்றைக்கும் இந்தியாவில் பாரதி பற்றியும் புதுமைப்பித்தன் பற்றியும் அவர்களது கோட்பாடுகள் பற்றியும் விவாதங்கள் ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் தளையசிங்கத்துக்கு ஒரு தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது எனது சிற்றறிவுக்கு எட்டியவரை மு.பொன்னம்பலம் மட்டும் தான் தளையசிங்கத்தினது கோட்பாடுகளது தொடர்ச்சி என்று சொல்லும்படிக்கு பேசியும் எழுதியும் வருகிறார்

ஈழத்தில் தத்துவக் கோட்பாடுகள் அவற்றின் கூரிழந்து முனை மழுங்கியபடிதான் உலா வருகின்றன என்பது எனது அபிப்பிராயம் அது மார்க்சியமாகட்டும்,தமிழ்த்தேசியமாகட்டும் மூன்றாம் அகிலக் கோட்பாடாகட்டும் இல்லை பின்னவீனத்துவமாகட்டும் அது அதற்குரிய வீரியத்தில் வெளிப்படுவதில்லை இது எம்மிடையே இருக்கும் தத்துவ வரட்சி என்று சொல்லலாமா?இல்லை வழக்கம் போல போராட்டத்தின் மீது பழியைப் போடுவமா?

உம்மடை பதிவிலை எதையாவது எழுதவே பயமாயிருக்கு.பெரும் பெரும் தலையெல்லாம் உம்மடை பதிவை வாசிப்பதாகக் கேள்வி

ஈழநாதன்(Eelanathan) said...

அண்ணை அந்தப் புத்தகத்தின் பெயர் தோற்றுத்தான் போவோமா அதன் பிரதியை இலங்கைக்கு அனுப்பி நூலகத்தில் சேர்ப்பத்து பற்றி கோபியுடன் பேசிக்கொண்டிருந்தேன் எனது வேலையை மிச்சமாக்கிவிட்டார்கள் அப்படியே உயிர்நீழலின் பழைய இதழ்களையும் இணையத்தில் ஏற்றினார்கள் என்றால் புண்ணியமாகப் போகும்.

விரைவில் அருளரின் லங்கா ராணியும்,சோபாசக்தியின் கொரில்லாவும் நூலகத்தில் இடம்பெறவிருப்பதாகக் கோபி சொன்னார் ஏற்கனவே புதியதோர் உலகம் இருக்கிறது.முறிந்த பனையும் சேர்க்கப்பட்டாயிற்று விரைவில் அடேல் ஆனின் சுதந்திரப்பறவைகளையும் பாலசிங்கத்தின் விடுதலையையும் நூலகத்தில் சேர்த்துவிட்டால் ஈழப்போராட்டத்தைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுப் பார்வையை நூலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

Anonymous said...

நூலகம் திட்டம் நின்றுவிட்டதாக கேள்விப்பட்டேன். உண்மையா?
கோபி என்பவரின் தொலைபேசி எண்ணுக்கு பல தடவை தொடர்பு கொண்டும் பாவனையில் இல்லை என்ற தகவையே பெறகூடியதாக உள்ளது. ஈழநாதனிடம் சேர்ப்பித்தால் நூலகத்தில் சேர்க்க முடியுமா?
ஈழநாதனது முகவரியை கூற முடியுமா? புத்தக தெரிவு எவ்வாறு இடம்பெறுகிறது? அதில் எனது புத்தகத்தை எவ்வாறு இணைத்துக் கொள்வது?
(கோபி என்பவர் வேறு ஒருவரது தொலைபேசி இலக்கத்தை எனக்கு கொடுத்து இருந்தார். அந்த இலக்கத்தை தொடர்பு கொண்ட போது பெரும்பாலும் பதில் இருக்காது. சில வேளைகளில் recieve பண்ணப்பட்ட நேரங்களில் எல்லாம் 50 cent இன் பாடல்கள் ஒலித்தபடி இருக்கும். யாரும் பேச மாட்டார்கள். திருத்தமான இலக்கத்தைத் தந்து உதவவும்.)

சிப்லி
கொலன்னாவ

ஈழநாதன்(Eelanathan) said...

நண்பருக்கு

நூலகம் திட்டம் முனைப்புடன் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது.திட்ட அறிமுகப் பக்கத்தில் கூறியுள்ளபடி போதிய நிதியின்மை காரணமாக எழுந்த தேக்கம் உங்களை இவ்வாறு நினைக்க வைத்திருக்கிறது.நூலகத்தில் உங்கள் நூலை எவ்வாறு இணைப்பது போன்ற விபரங்கள் நூலகத்தின் உதவிப் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.

கோபி தற்போது இலங்கையில் இல்லை.நீங்கள் உங்கள் நூலை வேண்டுமானால் மயூரனிடமோ அல்லது சசீவனிடமோ கொடுக்கலாம் முடிந்தவரை மின்னூல் வடிவில் கொடுத்தீர்களானால் உதவியாக இருக்கும்.நூலகத்தின் மடலாடற் குழுவில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுங்கள் அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்

Anonymous said...

கோபி 'என்பவர்' இலங்கையில் இல்லை. நூலகம் திட்டத்தில் இப்பொழுது தினமும் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன :-) உங்களது நூலை இணைப்பது தொடர்பாக நூலகம் மடலாடற் குழுவுக்கு எழுதுங்கள். எஸ்.எம்.எஸ். அனுப்புபவர்கள், மிஸ் கோல் எடுப்பவர்கள் எல்லோரும் யார் யாரென அறிய முடியாது தானே :) நூலகம் தன்னார்வலர்களாலேயே இயங்குகிறது. மின்வடிவத்தில் அனுப்பப்படும் புத்தகங்கள் உடனடியாகச் சேர்க்கப்படும். புத்தகமாக அனுப்பினால் தாமதமாகலாம்.

மு. மயூரன் said...

சிப்லி,

நூலகத்தின் முகவரி:
www.noolaham.net

நூலகம் பற்றிய விபரங்களுக்கு:
திட்ட அறிமுகம்

-/பெயரிலி. said...

/அதுக்கென்ன கேட்டால் போச்சு
பாரதியையும் புதுமைப் பித்தனையும் காலச்சுவடு தத்து எடுத்துவிட்டது.தளைய சிங்கத்தைப் பங்கு பிரிப்பதில் பிரச்சனை இதுவே தளையசிங்கமோ தம்பி பொன்னம்பலமோ காலச்சுவட்டிற்கு தளையசிங்கத்தை அறுதி எழுதிக் கொடுத்திருந்தால் ஒரு வேளை சாத்தியப்பட்டிருக்கலாம் இப்ப என்னடாவென்றால் தளையசிஙம் ஜெயமோகன் வேதசகாயகுமாரின் ஆளோ என்று எனக்கே சந்தேகம் காலச்சுவட்டுக்கும் கண்ணணுக்கும் அந்தச் சந்தேகம் வராமல் இருக்குமா?/

ZIPPPPPPPPPPPPPPPPPPP!! ;-)

ஈழநாதன், தவப்பொழுதின் இலக்கியத்தத்துவம் என்பது அவப்பொழுதின் அணுகாமையில்லாதவர்களுக்கு மட்டுமே தேவைப்படுவதும் வகுக்கப்படமுடிவதுமோ என்று கொஞ்சம் சந்தேகம் இப்போதெல்லாம் வருகிறது. ஒரு நிரம்பிய எண்ணெய்ப்பாத்திரத்திலிருந்து சிந்தாமல், சிதறாமல் கொண்டு போகமுடியாத திரிலோகசஞ்சாரிக்கட்டைகளுக்குத் தத்துவவிசாரசமும் விரசமும் நவரசமும் பிறக்கலாம்; ஆனால், அதிகாலைமுதல் நள்ளிரவுவரை விதைக்கும் & அறுக்கும் வேலைகள் பார்க்கும் விவசாயிக்குடும்பிகளுக்குச் சரிவராது. ஆட்களுக்கு, காலும் காலனும் பாவா நாட்டிலே தத்துவவிசாரம் இலக்கியத்திலே இல்லாதுபோனால், பரவாயில்லை; நடைமுறையிலே கணம் கணம் எழுந்துகொண்டுதானிருக்கும்; செய்யும் வேலைக்குச் சிற்றாளை அமர்த்திவிட்டு, மற்றவன் கட்டுரையை மனைவி பெயரிலே வெளியிட்டுவிட்டு, கண்டத்துமணி ஆட்டு மந்தைக்குக் கோட்பாடு மேய்ப்பானாக, கூட நின்று படமெடுத்து, விருது பற்றி வியாக்கியானம் செய்கிறவர்களின் தத்துவம் ஆற்றுநடுவிலே ஓட்டைப்படகிலே நீந்தத்தெரியாத பண்டிதனின் ஏட்டுச்சுவடிதான்.

மெய்யுளின் காலத்துக்கான தேவை இப்போது இல்லையென்றே தோன்றுகின்றது. அகம் திரும்பி ஆழத் தோண்டுவதற்கும் கால்கள் புறம் நிற்க நிலைப்பு வேண்டும்.

எழுத்துலகிலே -புதிய பார்வையின்மை, அணுகுமுறையின்மை, வீச்சழிதல் & மட்டுப்படல் என்பதாக - தேக்கம் என்பது ஒரு விடயம்; இலக்கியத்தத்துவம்..... வாழ்வுக்கு வாகாய்ப்படாவிடத்து, அக்கு(ட்)டையை மடித்து முறித்துக் குட்டையிற் போட்டு நடப்பதாலே எவ்விதமான சேதமுமில்லை. எமக்கும் ஓர் இலக்கியத்தத்துவமுண்டு என்று குந்தியிருந்து நோண்டியெடுத்து எழுதப் பொழுதும் புகழும் வாய்க்கின்றவர்களுக்குமட்டுமே அது பயனாகும்.

[பிகு: வலைப்பதிவுகளிலே அநாமதேயம், தனிமனிதப்பழிப்பு, சண்டை சச்சரவுகளைப் பற்றி(யும்) எஸ். ராமகிருஷ்ணன் தொலைக்காட்சியிலே சொல்லியிருப்பதை ஸ்ரீனிவாசன் பதிவிலே பார்க்கமுடிந்தது. குட்டி ரேவதியும் இக்குருபீடவரிகளைக் கேட்டிருப்பார் என்று நம்புகிறேன். இப்படியானவர்களின் இலக்கியத்தத்துவம் கண்டு எத்துவம் ;-))

Anonymous said...

நூலகம் திட்டம் பற்றிய தகவல்களுக்கு நன்றிகள்.
நான் பல மாதங்களுக்கு முன்னரே தொடர்பு கொண்டிருந்தேன். ஆயினும் இன்றைக்கு வரைக்கும் புத்தகத்தைக் கையளிப்பது என்பது சிறிய வேலையே முடியவில்லை. நூலகம் போன்ற ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு இவ்வாறான நடவடிக்கைகள் அழகல்ல. ஒருவராவது responsiblity உடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. சரியான போக்கை நின்று நிதானித்தல் வேண்டும். அசமந்த போக்குள்ளவர்கள் இவ்வாறான பெரிய அளவிலான திட்டங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அது அத்திட்டத்திற்கு அவ்வளவு நல்லதல்ல.
ஈழநாதன்,
யாரும் தொடர்பு கொள்ளாமையால் தான் இது போன்ற பொது இடத்தில் பிரஸ்தாபிக்க வேண்டி வந்தது.
நூலகம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த
ஈழநாதன், Anonymous, மயூரன்
போன்றவர்களுக்கு நன்றிகள்.
அரச அலுவலகங்களில் கூட இவ்வாறான நடவடிக்கைகள் நடப்பதில்லை.

இளங்கோ-டிசே said...

சிப்லி:
நூலகம் திட்டத்தோடு தொடர்புடைய நண்பர்கள் உங்களுக்குத் தேவையான பதில்களைத் தந்துள்ளார்கள் என நம்புகின்றேன். மற்றது நூலகமோ, தமிழ்மணம் போன்ற திரட்டிகளோ தன்னார்வலர்களின் முயற்சியாலேயே இயங்குகின்றது. பலருக்கு இவ்வாறான திட்டங்களில் முழுமையாக ஈடுபடவிரும்பினாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, பொருளாதார வசதி போன்றவை இடங்கொடுப்பதில்லை. எனவே இவ்வாறான புரிந்துணர்வோடேயே இவ்வாறான திட்டங்களையோ அதற்காய் உழைத்துக்கொண்டிருப்பவர்களையோ அணுகவேண்டியிருக்கின்றது. நன்றி.

ஈழநாதன்(Eelanathan) said...

பெயரிலி

தத்துவ விசாரத்தில் பாரதிக்கே குருநாதர் தந்த நாடு எங்கள் நாடு அதில் சந்தேகமில்லை நீங்கள் சொன்னபடி காலும் காலனும் பாவா நாட்டில் தத்து விசாரம் இலக்கியத்தில் இல்லாது போனால் பரவாயில்லை தான் ஆனால் இலக்கியத்தையும் தாண்டிய வாழ்க்கையின் சாரங்களில் கொஞ்சம் கூடவா தொடர்ச்சி இல்லாமற் போகும் ஈழத்துச் சித்தர் பரம்பரையில் கள்ளச் சாமிகள் மட்டும் எஞ்சியிருக்கிறார்கள் அரசியலில் இன்றைக்கும் விசுவானந்த தேவனும் சண்முகதாசனும் தான் குருமார் இலக்கியத்தில் சித்து விளையாட்டுக் காட்டுபவர்கள் இருக்கும் அளவுக்குச் சிந்தனாவாதிகள் இல்லை இவையெல்லாவற்றுக்கும் போர் என்ற ஒற்றைக் காரணி பெரும்பான்மைக் காரணியாக இருக்கலாம் வேறெதுவும் காரணி உண்டோ என்று யோசிக்கத் தலைப்பட்டதன் விளைவு தான் இது.

உண்மையைச் சொல்லப்போனால் ஹரிஹரசர்மா போன்றோரின் எழுத்தைப் பார்க்கும் போது நான் சொல்வது எனக்கே முரணாகவும் இருக்கிறது

Anonymous said...

நூலகம் பற்றிய விடயங்கள் அலசப்படுவதால் சில விடயங்களை சொல்ல வேண்டிய தேவை உள்ளது. சில காலங்களுக்கு முன்பு நூலகம் மடலாடல் குழுவில் இணைதேன். ஆயினும் ஒரு கட்டத்தில் அதில் இருந்து எனக்கு வந்த மெயில்களைப் பார்த்த போது ஏன் இணைந்தோம் என்றாகிவிட்டது. என்னாலால் இயன்ற அளவிற்கு இத்திட்டத்திற்கு உதவலாம் என்ற நோக்கோடு தான் அதில் இணைந்தேன். அதே கலத்தில் இனொருவரும் இத்திட்டத்தில் என்னை போல இணைந்திருக்க வேண்டும். அவர் நூலககத்தில் ஏற்கனவே இருந்தவர்களுடன் மெயில் களைப் பரிமாறிக்கொண்டு இருந்தார். அதனை நானும் அவதானித்தவாறு இருந்தேன். அவரும் இன்னொருவரும் சேர்ந்து ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கலாம் என்ற தீர்மனத்தில் அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்தார். அந்நேரத்தில் அவருக்கு சரியான பதிலைக் கொடுக்காது ஏற்கனவே இருந்தவர்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். அச்சண்டையில் ஆக்கபூர்வமான விடயங்களுக்கான முடிவுகள் எதுவுமே இருக்கவில்லை. வெறும் ego பிரச்சனை போன்றே எனக்கு பட்டது. ஒரு கட்டத்தில் சண்டை உச்ச கட்டத்தை அடைந்து மயூரன் என்பவர் இன்னொருவரை நூலகத்தை விட்டு வெளியேறுமாறு சொன்னார். கோபி என்பவர் மயூரனுடன் தர்க்கப்பட்டார். வெளியேற சொன்னவர் scaning பொறுப்பாக இருப்பதாகவும் அவர் 300 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நூலகத்தில் இணைத்ததாகவும் சொல்லப்பட்டது. தங்களுக்குள்ளேயெ இவ்வாறான வகையில் சண்டை பிடித்துக் கொள்பவர்கள் எவ்வாறு எம்மை இணைத்து நல்லபடியாக கொண்டு செல்லப்போகின்றார்கள் என்ற எண்ணத்தில் மெயில் வாசிப்பதையே நிறுத்திவிட்டேன். ஆயினும் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தால் எனது உதவியை அவர்களுக்கு வழங்கலாம் என்றே நினைத்தேன் நேற்றுவரை. நேற்று இவ்வலைப்பூவில் நடந்த பேச்சுகளின் பின்பு எனது நம்பிக்கை பெருமளவு தகர்ந்துவிட்டது. ஒருவர் தனது நூலை இணைப்பதற்கான உதவி மறுக்கப்பட்டமை என்பது தவிர நூலகத்தில் நன்றாக அறியப்பட்டவர்கள் அதற்கு அளித்த பதில்கள் எனக்கு திருப்தியாக இல்லை. நூலகம் மடலாடல் குழுவில் வந்து கதைக்குமாறு சொல்லப்பட்டது. அங்கே அவர்கள் எவ்வாறான வகையில் உரையாடுவார்கள் என்பது ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்தவிடயம். இவாறான ஒரு வலைத்தளத்தில் அதற்கான சந்தர்ப்பம் வரும்போது அதைப்பற்றி பேசுவதில் எதுவித தப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அண்மையில் எனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு திரைப்படங்களை மார்கெட் செய்யும் விதங்கள் பற்றிய பேச்சின் போது இயக்குநராலும் தயாரிப்பளாராலும் நியமிக்கப்படும் public relation officer சில வேளைகளில் படத்தின் விற்பனையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றிய பேச்சி வந்தது.
அவ்வேளையில் நூலகம் திட்டம் பற்றிய பேச்சும் இடையில் வந்தது. அப்போது அவரிடம் அதுபற்றி ஆர்வமாக கேட்டபோது, அவர் சொன்ன விடயங்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோபி என்ற ஒருவரே பெரும்பாலான வேலைகளை செய்வதாகவும் அதற்கு பத்மநாப ஐயரின் பங்களிப்பே அதிகம் என்ற தகவல் கிடைத்தது. மற்றையவர்கள் சும்மா பேசிக்கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். நூலக்ம் திட்டத்திற்கும் சில public relation officer இருப்பதாகவும் அவர்களால் தான் சண்டை என்றும் அவர் சொன்னார். ஆயினும் கோபி என்பவர் இலங்கையில் இல்லாத வகையில் நூலகம் திட்டம் நின்றுவிட்டதாக அவர் நினைத்ததில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். நானும் அவ்வாறு தான் நினைக்கின்றேன். ஆயினும் நூலகத்தில் ஒவ்வொரு நாளும் புத்தகங்கள் வெளிவருகின்றன என்ற அநாமேதய நண்பரின் கருத்து உண்மையாக இருக்க சாத்தியமில்லை.
மற்றபடி இது போன்ற பொது இடங்களில் இவ்வகையான விடயங்கள் பேசப்படுவது நல்லது. நூலகம் மெயில் களில் பேசும்போது தட்டிக்கழிக்கும் போக்கும் அதிகார போக்கும் காணப்பட்டது. இவ்விடத்தில் பேசுவது அப்படியில்லாமல் இருக்குமென்றே நினைக்கின்றேன்.
நூலகத்தில் வந்து கதை என்று சொல்வது இவாறான பெரிய திட்டத்தைக் குறுக்கும் முயற்சியே அன்றி வேறில்லை. தற்போது நூலகம் மெயிலில் இர்ந்து மெயில் வருவதும் இல்லை. இவ்வாறான இடத்தில் அதை பற்றிப் பேசினால் உண்மையை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். உண்மையில் நூலகம் தற்போதும் இயங்குகிறதா? அதன் போக்குகள் என்ன என்பது அறிய நினைப்பதில் தவறில்லை.
'நாடற்றவனின் குறிப்பு' இளங்கோவிற்கு நன்றிகள். இவ்வாறான reply அனுமதித்து உண்மையில் நூலகத்துக்கு நன்மை செய்கின்றீர்கள். உங்களுக்கு நன்றிகள்.

Anonymous said...

டி.சே. படங்களுக்கும் குறிப்புக்கும் நன்றிகள்.

இளங்கோ-டிசே said...

ஈழநாதன் மற்றும் பெயரிலி:
இந்த தொகுப்பு வெளியீட்டை முன்வைத்து 'வீடு' பத்திரிகையில் மு.த படைப்புகள் பற்றிய சிறப்புப்பகுதி வந்திருக்கின்றது. ஏழெட்டுப்பேர்கள் எழுதியிருக்கின்றார்கள். அதில் ஒருவர் பத்துப் பதினைந்து பக்கத்திற்கு மேலாய்க் கட்டுரையெழுதி பேப்பரில் ஒருபக்கமளவு கட்டுரையிற்கே இடங்கொடுக்கப்பட்டதால் சுருக்கியெழுதியதாகவும் கேள்விப்பட்டேன். எனவே மு.தவிற்கான வாசிப்புக்கள் அங்கும் இங்குமாய் விரிவாக நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால் ஓரிடத்தில் இவ்வாறான விடயங்கள் தொகுக்கப்படாததாலும், வாசிப்புக்கள் நூலாக்கம் பெறாததாலும் பரவலான இடங்களைப் போய்ச்சேரவில்லையென நினைக்கின்றேன். தமிழகத்திலிருக்கும் அநேக பதிப்பகங்களுக்கு அரையும் குறையுமாய் ஏதாவது ஈழஞ்சம்பந்தமான சூடான விடயங்களைப் பதிப்பித்து காசாக்கும் வியாபாரத் தந்திரம் இருக்கின்றதே தவிர ஆய்வுகளுள்ள பிரதிகள் குறித்து பெரிதும் அக்கறையில்லை. (இந்த விடயங்களைத் தொட்டெதிய ஒரு பதிவு அரைகுறையில் நிற்கின்றது. முடித்துவிட்டு வருகின்றேன்)
........
இந்த வெளியீட்டு விழா நிகழ்வு நடந்துகொண்டிருந்தபோது அரங்குக்கு வெளியில் இன்றைய காலத்தில் கவிதைகள் மிகுந்த இருண்மைத் தன்மைக்குப் போய்க்கொண்டிருக்கின்றதென உயிர்மை, காலச்சுவடுகளில் வந்த கவிதைகளை முன்வைத்து நண்பர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள். சும்மா என்ரை பாட்டில் போன என்னையும் இழுத்து வைத்து இரண்டு கேள்வி கேட்டனர். நான் முதலில் கேட்டது, உயிர்மை காலச்சுவட்டில் வருவது மட்டுந்தானா கவிதைகள்? அடுத்தது எங்களுக்கென்று ஒரு தனிக்கவிதைப் போக்கு இருந்தது; மலையாளக் கவிதைகள் போல ஈழத்துக்கவிதைகள் நேரடியாகப் பேசுவனவாகவும் நீண்டகவிதைகளாகவும் இருந்தன. ஆனால் அவற்றை முன்னகர்த்திச் செல்ல ஈழத்தில்/புலம்பெயர் தேசத்தில் எமக்கென்றிருந்த தனித்த விமர்சனப்போக்கு தொடர்ச்சியாக வளரவில்லை. எனவே நாங்களும் தமிழகத்திலிருந்து வெளிவருபவை மட்டுந்தான் கவிதைகள் என்ற நினைப்பில் அவ்வாறான போக்கில் எழுதத்தொடங்கிவிட்டோமெனச் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த உரையாடலின் நீட்சியில் கவிதைக்கென ஒரு தனிப்பட்ட உரையாடலை விரைவில் ஒழுங்குசெய்து இவை குறித்து கதைத்துப் பார்ப்போமென அந்நணபர்கள் குறிப்பிட்டார்கள். நடந்தால் ஒருக்காய் எட்டிப் பார்த்துவிடவேண்டியதுதான்.
.....

நேரடியாகப் பேசும் ஈழத்துக் கவிதைப் போக்கிலிருந்துதான் சோலைக்கிளி, சித்தார்த்த சே குவேரா போன்றவர்கள் தனித்துவமான கவிதைத்தடங்களை நோக்கி நகர்ந்தவர்கள் இவர்களைப் போன்றவர்களின் கவிதைகள் குறித்த உரையாடல்கள் எங்கேனும் விரிவாக நிகழத்தப்பட்டிருக்கின்றதா?

....

/ஈழத்தில் தத்துவக் கோட்பாடுகள் அவற்றின் கூரிழந்து முனை மழுங்கியபடிதான் உலா வருகின்றன என்பது எனது அபிப்பிராயம் அது மார்க்சியமாகட்டும்,தமிழ்த்தேசியமாகட்டும் மூன்றாம் அகிலக் கோட்பாடாகட்டும் இல்லை பின்னவீனத்துவமாகட்டும் அது அதற்குரிய வீரியத்தில் வெளிப்படுவதில்லை இது எம்மிடையே இருக்கும் தத்துவ வரட்சி என்று சொல்லலாமா?/

போர் ஒரு முக்கிய காரணந்தான். ஆனால் போர் மட்டுமே காரணமல்ல. இப்போது இது குறித்து விரிவாக எழுத ஆரம்பிக்கும்போதுகூட மன்னாரில் இறந்த பிள்ளைகளின் நினைவு எல்லாவற்றையும் அபத்தமாக்கி ஒருநிலைப்பட்ட மனதிலிருந்து எழுதுவதைத் தவிர்க்கிறது. எனவே போரும், புலம்பெயர்வும் அனைத்தையும் மீறி எங்களை ஏதோவொருவிதத்தில் பாதித்துக்கொண்டுதானிருக்கின்றது (பெயரிலி பின்னூட்டத்தில் இதைத்தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்)
நிற்க.
ஆனால் மேலே ஈழநாதன் சொன்னமாதிரி, மார்க்க்சியர்களோ தேசியர்களோ, பின் நவீனத்துவவாதிகளோ(?) தமது எல்லைகளை விட்டு ஒரு பொதுவெளியில் எதையும் பேசுவதே இல்லை என்பதே எங்களுக்குள்ளிருக்கும் பலவீனம்.. ஷோபாசகதி போன்றவர்களுக்கு தேசியத்திற்குள் நின்று ஈழத்திலக்கியத்திற்கு வளஞ்சேர்த்தவர்களைக் கண்டால் வேப்பங்காய் கசப்பு. எங்கே நேர்காணல் கொடுத்தாலும் அப்படியொரு பக்கமிருப்பதைக் கவனமாய்த் தவிர்ப்பார்/கள். மற்றப்பக்கம் தேசியர்கள், புலிகளை எதிர்த்துக்கொண்டு எழுதிக்கொண்டிருப்பவர்களை இருட்டடிப்புச் செய்வதில் வல்லவராக இருக்கின்றார்கள்.. இவ்வாறாக எல்லைகளுக்குள் சுருங்கினால் மாற்று உரையாடல்களுக்கான சாத்தியமேயில்லை என்பதோடு ஒரேயிடத்தில் தேங்கிவிடும் அபாயமும் உண்டெனத்தான் சொல்லவேண்டியிருக்கின்றது. எமக்கிடையே வெளிப்படையான உரையாடல்கள் வளர்த்து எடுக்கப்படவில்லை என்பதுதான் இன்றைய சோகம். பிறகு எப்படி இவற்றுக்குள்ளிலிருந்து தத்துவங்களை நோக்கிய விரிவான உரையாடல்களை நோக்கி நகரமுடியும்? மேலும் ஈழத்திற்கென்று இருந்த தனித்துவமான விமர்சன மரபின் தொடர்ச்சி இல்லாமற் போய்விட்டிருக்கின்றது. (விமர்சனங்களுக்கு அப்பால்) கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களைத் தமது முன்னோடிகளென அ.மார்க்ஸ், வீ.அரசு போன்றவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்; ஆனால் ஏன் நம்மிடையே அப்படியொரு மரபு தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது கேள்விக்குரியது. (அரசியல் ஆய்வாளர்கள் என்று சிலர் தோன்றியிருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கும் தாங்கள் சொன்னதற்கு விளக்கம் சொல்லிச்சொல்லியே சிறுவட்டத்திற்குள் சுழல்வதோடு காலம் போய்விடுகின்றது.)
மேலும்,
/அகம் திரும்பி ஆழத் தோண்டுவதற்கும் கால்கள் புறம் நிற்க நிலைப்பு வேண்டும்./
என்று பெயரிலி சொல்வதையும் ஒரு முக்கிய காரணமாய் ஏற்றுக்கொள்கின்றேன்.

இன்னும் நிறைய எழுதலாம். இத்தோடு நிறுத்திக்கொள்வது எனது நாளை நிம்மதியாய் இருப்பதற்கு சற்று உத்தரவாதமானது :-)

இளங்கோ-டிசே said...

நண்பர் நூலகவிரும்பிக்கு,
உங்களது பின்னூட்டத்தை-நீண்ட நேர யோசனைக்குப் பிறகே- வெளியிடுகின்றேன். என் மீதான விமர்சனங்கள் குறித்ததெனில் எவ்வித பிரச்சினையுமில்லை; பிறர் பற்றிய விமர்சனங்கள் என்று வருகின்றபோது நிறையத் தயக்கங்கள் இருக்கின்றன. உங்களது பின்னூட்டம் தனிப்பட்ட காழ்ப்புணர்வாய் இருக்கின்றதென நூலகத்தோடு தொடர்புடைய நண்பர்க்ள் கூறுவார்களாயின் உங்களது பின்னூட்டத்தை நீங்களோ அல்லது நானோ அகற்ற அனுமதி தருவீர்களென நம்புகின்றேன்.
நிற்க.
நூலகத்தின் தனிப்பட்ட பயனாட்டாளன் என்பதைத் தவிர நூலகத்தின் உள்ளே நடப்பது குறித்து அவ்வளவாய் அறிந்ததுமில்லை. இங்கே நடக்கும் உரையாடல்கள் நூலகத்தின் வளர்ச்சியிற்கு ஏதேனுமொருவகையில் உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் உங்களின் பின்னூட்டத்தை அனுமதிக்கின்றேன். நன்றி.

மு. மயூரன் said...

நூலகம் விரும்பியின் பின்னூட்டத்தினை இங்கே பிரசுரித்தடி. சே. தமிழனுக்கு நன்றி.

நூலகம் விரும்பி இங்கே பெயர் சொல்லியே குறிப்பிட்ட நூலகம் திட்ட உறுப்பினன் என்ற வகையில், எனது பார்வையில் இவர் தனிப்பட்ட காழ்ப்புணர்வு எதனையும் கொட்டியதாகத் தெரியவில்லை.(மற்றவர்கள் எப்படி கருதுவார்களோ தெரியவில்லை)

மிக ஆரோக்கியமான விமர்சனம்.

இப்படி முகத்துக்கு முன்னால் செய்யப்படும் விமர்சனங்கள் அதுவும் இவ்வளவு கண்ணிஅய்த்தோடு செய்யப்படும்போது மனவருத்தத்துக்கு மாறாக சுயவிமர்சனத்துக்கான உற்சாகத்தையே தருகிறது.

நூலகம் விரும்பிக்கும் நன்றிகள்.

இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் கருத்துக்களுக்கான என்னுடைய பதில்களை இங்கே பதிவு செய்கிறேன்.

ஈழநாதன்(Eelanathan) said...

நண்பர் நூலக விரும்பிக்கு

பல தன்னார்வலர்களுடன் நானுமொரு பங்காளன் என்ற முறையில் அன்றி நூலகத்தின் பயனாளன் என்ற வகையில் உங்களுடன் பேசுவது பொருத்தமாக இருக்கும்.அதைவிடவும் நூலகத்தின் தொடுப்புக்களை இங்கே கொடுத்துத் தொடக்கி வைத்தவன் நான் நூலகத்திற்கு வெளியே அது பற்றிய விவாதம் வளர்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது ஆகவே இளங்கோ அனுமதித்தால் இங்கேயே பேசலாம்

ஆக பல மாதங்களாக நீங்கள் நூலக மடலாடற் குழுவில் இணைந்திருருக்கிறீர்கள் தேவையற்ற விவாதங்கள் என நீங்கள் குறிப்பிடுபவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு ஆனால் இவ்வளவு காலம் கழித்து அவற்றைச் சுட்டிக் காட்டும் நீங்கள் அன்றே இதனைத் தெரிவித்திருந்தால் விவாதத்தைத் திசைவழிப்படுத்த்க முடிந்திருக்குமே இன்று ஒருவர் தர்ம அடி போட்டதுமே நான் முந்தி நீ முந்தியென தர்ம அடிக்கு கையோங்குவதை விட ஆக்கபூர்வமாக அன்றே அதை மடலாடற் குழுவில் சொல்லியிருக்கலாமே ஏன் இன்றுகூட நீங்கள் சொல்வதை தனிப்பட்ட விரோதமாக நான் கருதவில்லை,நூலகத்தின் செயற்பாடுகள் மீதான அதிருப்தி என்று மட்டுமே எண்ணுகிறேன் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

நான் நூலக மடலாடற் குழுவில் வந்து பேசும் படி கூறியதன் நோக்கம் கருத்துக்களை ஓரிடத்தில் குவிப்பதற்காகவன்றி அதிகாரத்தை வெளிப்படுத்தவல்ல என்னிடம் நூலகம் சம்பந்தமாக எந்த அதிகாரமும் கிடையாது.ஒருவர் தனது நூலை எப்படி நூலகத்தில் சேர்க்கலாம் என்று கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக்கொடுத்த மாதிரி நூலகம் உதவிப் பக்கத்தில் சொல்லியிருக்கிறார்கள் இங்கே ஒருவர் விளக்கம் கேட்கும் போது அங்கே வந்து ஏற்கனவே இருக்கும் விளக்கத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை

நூலகம் பற்றிய கருத்தாடல்கள் உள்ளேயும் புறத்தேயும் வளரவேண்டும் அதை நீங்கள் ஆரம்பித்து வைத்தால் மகிழ்ச்சி தான்

நூலகம் தளத்திற்கு கடைசியாக எப்போது வந்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?இரண்டு வாரங்களுக்கு முன்னர் 400 ஆக இருந்த நூல்களின் எண்ணிக்கை இப்போது 1000 ஆக இருக்கிறது அவை இரண்டு வாரங்களில் வலையேற்றப்பட்டவைதான் ஆனால் இரண்டு வாரங்களில் மின்னூலாக்கப்பட்டவையல்ல பல மாதங்கள் பல தன்னார்வலர்களின் கடும் உழைப்பில் உருவானவை நிதிப்பிரச்சனை காரணமாக நூலகம் தள்ளாடித் தள்ளாடி நடக்கிறது உங்களால் எந்த வகையிலான உதவி செய்ய முடியும் என்று சொல்லுங்கள் தினமும் ஒரு நூலை நூலகத்தில் சேர்க்கலாம்

மு. மயூரன் said...

ஷிப்லி எழுப்பிய பொறுப்பீனம் - அசமந்தப்போக்கு போன்ற குற்றச்சாட்டுக்களுக்கான பதில் டீ சேயால் தெளிவாகவே தரப்பட்டுவிட்டது என்று கருதுவதால்,


நூலகம் விரும்பியின் விமர்சனத்துக்கான பதில்களை விரிவாக தருகிறேன்.


அதற்குமுன் சிறிய முன்னுரை.

நூலகம் திட்டம் அடிப்படையில் யாருக்கும் சொந்தமனதல்ல. இது மிகத்தெளிவாக நூலகம் திட்ட அறிமுக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒரு கூட்டுழைப்பு. கூட்டுழைப்பு எனும்போது அங்கே சேர்ந்து உழைக்கும் பலரும் பல விதமான பணிகளை பொறுப்பெடுத்துக்கொள்கிறார்கள். இங்கே கேள்வி எழுப்பப்பட்டவுடன் டீ சே பதிலளித்தாரென்றால், அவரும் அங்கே அந்தக்கூட்டுழைப்பில் பங்கெடுத்திருக்கிறார் என்றுதான் அர்த்தம். (மடலாடற்குழுவில் இணைந்திருக்கவில்லை (?) என்றபோதும்) அளவு அல்ல, ஈடுபாடும், மனவுவப்புமே மிக மிகப்பெறுமதியானது. அத்திட்டத்தின் பல நூறு உறுப்பினர்களில் ஒருவன் என்ற வகையில் இங்கே நான் பதிலளிக்க விழைவதும் இதன் அடிப்படையில் தான்.

சரி,


//அந்நேரத்தில் அவருக்கு சரியான பதிலைக் கொடுக்காது ஏற்கனவே இருந்தவர்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். அச்சண்டையில் ஆக்கபூர்வமான விடயங்களுக்கான முடிவுகள் எதுவுமே இருக்கவில்லை. வெறும் ego பிரச்சனை போன்றே எனக்கு பட்டது.//


மடலாடற்குழுக்களில் இவ்வாறான சண்டைகளும் ஈகோ பிரச்சினைகளும் மிகச்சாதாரணமானவை. மேலிருந்து கீழாக அதிகாரம் யாப்பு ரீதியாக நிறுவப்படாத நூலகம் போன்ற சமாந்தரக் கூட்டுழைப்பில் இவ்வாறு நிகழ்வதில் வியப்பேயில்லை. ஆரோக்கியமில்லாதவற்றை காலத்தோடு களைந்து கடந்து வளர்ச்சி நோக்கி செல்ல வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகிறோம்.

//ஒரு கட்டத்தில் சண்டை உச்ச கட்டத்தை அடைந்து மயூரன் என்பவர் இன்னொருவரை நூலகத்தை விட்டு வெளியேறுமாறு சொன்னார்.//


அந்த மயூரனாகிய நான், வெளியே போகச்சொன்ன சசீவனின் உழைப்பினாலேயே இன்று நூலகம் மிகப்பிரமாண்டமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. இப்போது மயூரன் ஆறுதலாகப் பதிலளித்துக்கொண்டிருக்க, வீட்டில் அவர் நூலகத்திற்கு புத்தகங்களைத் தரவேற்றும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். இந்த பதிவைப் படிக்கக்கூட நேரமில்லாமல்.

அப்படி வெளியே போகச்சொன்ன சம்பவத்தின் பின்னணி என்பது, நூலகத்தின் சமாந்தரக்கூட்டுழைப்புத்தன்மை, அதிகாரப்படிநிலைகளையுடைய நிறுவனமாக மாறிப்போகக்கூடிய சாத்தியங்கள் அமையப்போவதாக பயந்ததாலேயேயாகும். ஆனால் அந்தப்பிரச்சினைகளைக் கடந்திருக்கிறோம் ஓராவுக்காவது.

//கோபி என்பவர் மயூரனுடன் தர்க்கப்பட்டார். வெளியேற சொன்னவர் scaning பொறுப்பாக இருப்பதாகவும் அவர் 300 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நூலகத்தில் இணைத்ததாகவும் சொல்லப்பட்டது. தங்களுக்குள்ளேயெ இவ்வாறான வகையில் சண்டை பிடித்துக் கொள்பவர்கள் எவ்வாறு எம்மை இணைத்து நல்லபடியாக கொண்டு செல்லப்போகின்றார்கள் என்ற எண்ணத்தில் மெயில் வாசிப்பதையே நிறுத்திவிட்டேன்.//


இதில் சம்பந்தப்படும் கோபி, மயூரன் சசீவன் மூவரும் ஒருவருக்கொருவர் தனிப்பட ரீதியில் நல்ல நண்பர்கள். இந்தச் சண்டைகள் தர்க்கம் எல்லாம் இல்லாமல் மனிதர்கள் கூடிப்பணி செய்யமுடியுமாக இருந்தால் நல்லதுதான். ஆனால் அப்படி இல்லை அல்லவா?

இவை புதிதக வந்த உங்களைப்போன்ற பயனர்களைப் புண்படுத்தி, சோர்வடையச்செய்திருந்தால், தர்க்கத்தில் பங்கெடுத்தவனென்ற வகையில் மன்னிப்புக்கோருகிறேன்.

தொடர்ச்சியாக கட்டற்ற திறந்த மூல மென்பொருள் இயக்கங்களில் பங்கெடுத்து வருபவன் என்ற வகையில் இதுவரை இவ்வாறான தீவிர அடிதடி நிகழாத கூட்டுழைப்புக்களை நான் பார்த்ததே இல்லை.

தனிமனிதன் - கூட்டுழைப்பு என்ற மனிதரின் இரு வேறு முரண்பாடான நிலை என்ற உண்மையை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

தலைமை - ஆணை - பணி என்ற தமிழ்ச்சூழற் போக்கில் பழகி வந்த எமக்கு நூலகம் திட்டத்தின் அமைப்பும் யாப்பும் புதியது. அதனை உள்வாங்கி கொண்டு நடத்துவதானால் மோதி விழுந்து அடிபட்டு காயப்பட்டு தவண்டு எழுந்துதான் சீராக ஓட முயல முடியும்.


//கோபி என்ற ஒருவரே பெரும்பாலான வேலைகளை செய்வதாகவும் அதற்கு பத்மநாப ஐயரின் பங்களிப்பே அதிகம் என்ற தகவல் கிடைத்தது. மற்றையவர்கள் சும்மா பேசிக்கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். நூலக்ம் திட்டத்திற்கும் சில public relation officer இருப்பதாகவும் அவர்களால் தான் சண்டை என்றும் அவர் சொன்னார்.//


கோபியின் உழைப்பு மதிக்கப்பட வேண்டியது.
உங்களோடு பேசியவர் தனது அறிவுக்கெட்டிய தகவல்களைச் சொல்லியிருக்கிறார். அது அவரின் சுதந்திரம்.
உண்மை நிலை இதை விடக்கூடுதலான செய்திகளைக்கொண்டது.
ஓரளவுக்கேனும் மற்றவர்களின் பங்களிப்புக்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. தயவு செய்து பார்த்துவிட்டு அவருக்கும் அறியப்படுத்தவும்.

தொடுப்பு 1

தொடுப்பு 2

//கோபி என்பவர் இலங்கையில் இல்லாத வகையில் நூலகம் திட்டம் நின்றுவிட்டதாக அவர் நினைத்ததில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். நானும் அவ்வாறு தான் நினைக்கின்றேன். ஆயினும் நூலகத்தில் ஒவ்வொரு நாளும் புத்தகங்கள் வெளிவருகின்றன என்ற அநாமேதய நண்பரின் கருத்து உண்மையாக இருக்க சாத்தியமில்லை.//


இந்த இடத்தில் மட்டுமே நான் உங்களில் கோபம் கொள்கிறேன். உங்களிடம் நூலகம் திட்டத்தின் வலை முகவரி இருக்கிறதல்லவா? போய் ஒருக்கா பார்த்துவிட்டு இதனை எழுதியிருக்கலாமே? கடந்த ஒரு வருடமாக நீங்கள் இந்த முகவரியை ஒருதரமேனும் போய்ப்பார்க்காமல் இப்படி கதைப்பது எவ்வளவு தவறானது?
நூலகத்தின் முகவரி இதுதான் : www.noolaham.net


மேலும்,


நூலகம் மடலாடற்குழுவில் தற்போது உரையாடல்கள் குறைந்துவிட்டன. சேர விரும்பினால் சேர்ந்து உரையாடலாம். ஈழநாதன் தற்போது மடலாடற்குழுவின் மட்டுறுத்துனராக இருக்கிறார்.

நூலகம் தளம் மீடியா விக்கியில் அமைக்கப்பட்டபிறகு அங்கேயே உறுப்பினர்கள் உரையாட முடிவதால் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புவது குறைந்துபோய்விட்டது.

நூலகம் இயங்குகிறதா செத்துப்போய் விட்டதா என்று இங்கே நாடிபார்க்கலாம்.


வெளிப்படையான விமர்சனத்தை பொதுவில் முன்வைத்தமைக்கு நன்றி.

மறுபடியும் சொல்கிறேன், நூலகம் யாருக்கும் சொந்தமானதல்ல. எனக்கு நேரமும் வாய்ப்பும் கிடைத்ததால் இங்கே பதிலளிக்கிறேன். மற்றவர்கள் வேலை செய்கிறார்கள். இன்னும் பலர் முகம் தெரியாதவர்கள் நூலகத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி பயன்பெறச்செய்கிறார்கள். இந்தக்கூட்டுழைப்பில் இணைந்துகொள்ளுங்கள். நூலகத்தை உங்களுடையதாய் உணருங்கள்.

Anonymous said...

Super writing dj

any one can give me a link where i can type tamil words, thinking to start my one blog.

Guna

கோபி said...

பதிவுக்குத் தொடர்பற்ற பின்னூட்டத்துக்கு வருந்துகிறேன்.

சிப்லி,
நீங்கள் என்னைத் தொடர்பு கொண்டது spam செய்து. ஆயினும் உங்களுக்குப் பதிலளித்தேன். மயூரன், சசீவன் ஆகிய இருவரது தொலைபேசி இலக்கங்களைத் தந்திருந்தேன். அவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா இல்லையா என்பது பற்றி நீங்கள் எதுவும் தகவல் தரவில்லை. follow up செய்யாமல் responsibility பற்றிப் பேசுவது முரண்நகை. மற்றபடி நீங்கள் இங்கு பின்னூட்டமிட்டமை எழுத்தாளர்கள் நூலகத்தைத் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் இருப்பதைக் காட்டுகின்றது. நூலகத்தினர் இது தொடர்பில் கவனமெடுக்க வேண்டுகிறேன்.

நூலக விரும்பி,
டீசேயின் வலைப்பதிவு பொது இடமல்ல. பதிவுக்குத் தொடர்பற்ற இவ்விவாதத்தை அவர் அனுமதித்தது நூலகம் மீதான அக்கறை காரணமாக. அப்புறம் நீஙகள் நூலகம் மடலாடற் குழுவுக்கு மிகவும் பொருத்தமானவர். குறை கூறுவதன்றி ஆக்கபூர்வமாக எதுவுமில்லை.:)

நூலத்தின் பங்களிப்போர் பட்டியல் மிகப் பெரியது. மடலாடல், நூலகம் விக்கி மற்றும் பொது இடங்களில் உரையாடுவோர் பெயர்கள் மட்டுமே தெரிய வருகிறது. பங்களித்து வரும் பலர் இன்னமும் போதிய இணைய அறிமுகம் இல்லாதவர்கள். அவர்கள் இணையத்துக்கு வரும் காலத்தில் நூலகம் தொடர்பான தகவல்களுக்கு பொது இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது இணைய இணைப்பு என்னும் வசதியைக் கொண்டிருப்போரது அதிகார மனப்பாங்கேயாகும். நூலகம் குழுவிலோ விக்கியிலோ கருத்துக்கூறுவதற்கு எத்தடையுமில்லை.

இத்தகைய நீண்ட கருத்துக்களைத் தட்டெழுதும் நேரத்துக்கு நூலகத்துக்குப் புத்தகம் ஏதாவது தட்டெழுடலாம். நன்றி.

இளங்கோ-டிசே said...

குணா,
தமிழ்மணத்தின் இந்தப்பக்கத்திற்குப் போனால் அங்கே 'தமிழ் எழுது கருவிகள்' என்று பட்டியலிட்டு இருக்கின்றார்கள்: உங்களுக்குப் பொருத்தமான ஏதாவதொன்றைப் பயன்படுத்தி தமிழில் எழுதலாம்.
http://www.thamizmanam.com/resources.php

Anonymous said...

நன்றி DJ

குணா