Monday, September 21, 2009

பலூனில் பறந்த அனுபவம்

இவ்வாறான பலூனில் பறப்பது என்பது சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமமாகின்ற நேரத்தில் பொதுவாக நடைபெறுகின்றது. எங்களது பலூன் பறப்பானது காலை 7.30 மணிக்கு என்றார்கள். கிட்டத்தட்ட 8.00 மணியளவில் பலூன் மேலே பறக்கத் தொடங்கியது. காலநிலையைப் பொறுத்தே பலூன் பறப்பதா இல்லையென்பதைத் தீர்மானிக்கின்றார்கள்; நாங்கள் பறப்பதற்கு முதல்நாள் காற்று அதிகமாக இருந்ததனால் பறக்கவில்லை.

நாங்கள் சென்ற பலூனில் 12 பேரளவில் பறக்கமுடியும். அத்தோடு ஒரு flight pilot இருப்பார். அன்றைய நாளுக்கான காற்றே எந்தத் திசையில் பலூன் பறப்பதைத் தீர்மானிக்கும். உயரம் மேலே செல்ல/ கீழிறங்க மட்டுமே பைலட்டால் கட்டுப்படுத்தமுடியும். பறக்கும் திசையைக் காற்று மட்டுமே தீர்மானிக்கும். ஆகவே பலூன் ஏறிய அதேயிடத்திலேயே பலூன் கீழிறங்கும் என்று (என்னைப் போல) நீங்கள் யோசிக்கக்கூடாது.

நாங்கள் சில மைல்கள் அப்பாலிருந்த அறுவடை செய்த நிலத்தில் இறங்கியிருந்தோம். நாங்கள் பறந்த அன்று காலநிலை மிகவும் சுமுகமாக இருந்ததால் எந்த adventures ஜயும் நாங்கள் சந்திக்கவில்லை. பலூன் பக்கவாட்டுக்குப் போகும் வேகத்தை காற்றுத் தீர்மானிக்கும். மேலிருந்து கீழேயோ/ கீழிலிருந்து மேலேயோ போவதை gas தீர்மானிக்கும். கிட்டத்தட்ட ஒரு நிமிடத்தில் ஆயிரம் அடி உயரப்போகலாம் என்று பைலட் கூறினார்.

மறக்கமுடியாத அனுபவம் என்றால் சோள வயற்காட்டுக்குள் சோளப்பயிர்களைத் தொட்டவாறு பறந்தது. அதேபோல பார்த்துக்கொண்டிருந்த சொற்ப நிமிடத்தில் சட்டென்று நாமறியாமலே மேலேயுயர்ந்து சென்றதையும் கூறலாம்.

மெய்சிலிர்ப்பதற்கு எதுவுமில்லையென்றாலும், நினைவில் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வாக பலூனில் பறத்தல் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் பறந்தோம். இப்படியான பலூனில்தான் முன்பு உலகையெல்லாம் வலம் வந்தார்கள்/வரமுயற்சித்தார்கள் என்று நினைக்கும்போது சற்று வியப்பு ஏற்படுகின்றது. அது உண்மையில் ஒரு adventureதான்.

கீழேயிறங்கியபின் பறத்ததின் வெற்றியைக் கொண்டாட champagne போத்தல்களை உடைத்தார்கள். நான் என்றுமே நல்ல 'ஆண்' என்பதால் முகர்ந்து பார்த்ததோடு சரி. பறக்கும்போது வராத மயக்கம் champagneஐ முகர்ந்து பார்த்தபோது வந்ததில் பலூனில் பறப்பதைவிட champagnஐ முகர்வதுதான் ஆபத்தானது எனபது நன்கு விளங்கியது :-).

(படங்களை அழுத்திப் பெரிதாக்கியும் பார்க்கலாம்)
(ரிக்கேட்டுக்களை complimentsயாய் 'வைகறை'யில் ஒருகாலத்தில் எழுதிய பாவத்திற்கு எங்களுக்குத் தந்த ரவிக்கு நன்றி :-) )

5 comments:

சினேகிதி said...

\\நான் என்றுமே நல்ல 'ஆண்' என்பதால் முகர்ந்து பார்த்ததோடு சரி. பறக்கும்போது வராத மயக்கம் champagneஐ முகர்ந்து பார்த்தபோது வந்ததில் பலூனில் பறப்பதைவிட champagnஐ முகர்வதுதான் ஆபத்தானது எனபது நன்கு விளங்கியது :-).
\\

நல்ல ஆண்கள் முகர்ந்து பார்ப்பவர்களா? :)அப்ப நல்ல பெண் என்பது எப்படி ?

அண்மையில் நண்பர் ஒருவர் Greece போய் வந்திருந்தார். அங்கும் இந்த பலூனில் பறப்பது பெரிய பொழுதுபோக்கு போல. 3.5 மணித்தியாலங்கள். அழகழான கோட்டைகள் பழங்கால கட்டிடங்கள் எல்லாவற்றையும் பலூனில் இருந்து படம் பிடித்திருந்தார். பார்க்க நன்றாக இருந்தது.

துளசி கோபால் said...

அருமை.

நானும் ஒரு ரெண்டுவருசம் முந்திப் போய்வந்தேங்க. எழுதாம விட முடியுதா? ரெண்டு பதிவு போட்டுருக்கேன். நேரம் கிடைச்சால் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2007/06/blog-post.html

செல்வநாயகி said...

///பலூனில் பறப்பதைவிட champagnஐ முகர்வதுதான் ஆபத்தானது எனபது நன்கு விளங்கியது /////

:))

DJ said...

/அப்ப நல்ல பெண் என்பது எப்படி ?/
சிநேகிதி, காரோடும்போது rear window வில் ஒன்றுமே தெரிய‌வில்லை என்று கூறி, காரில் கூட‌ வ‌ருப‌வ‌ர்களைப் ப‌ய‌முறுத்துப‌வ‌ர்க‌ள்... என்று சொன்னால் நீங்க‌ள் ந‌ம்ப‌வா போகின்றீர்க‌ள் :-)
....
துளசி,
இப்போதுதான் உங்க‌ள் ப‌திவைப் பார்த்தேன். ந‌ன்கு அனுப‌வித்து எழுதியிருக்கின்றீர்க‌ள்.
....
செல்வ‌நாய‌கி, நான் க‌ண்ட‌றிந்த‌ உண்மையை வழிமொழிந்த‌மைக்கு ந‌ன்றி :-).

சினேகிதி said...

புகையடிச்சுப்போயிருந்திருக்கும் அதான் கண்ணாடி கறுப்பா இருந்திருக்கும்.பெண்கள் construction area ல நிதானமாத்தான் கார் ஓடுறவையாம் :)