ஆயிரத்தில் ஒருவனின் திரைக்கதை ஓட்டையைவிட அதிலிருக்கும் ethics அதிகம் உறுத்தியது
எக்காலத்திலும் எங்கும் இந்திய் இராணுவம் என்பது ஒரேமாதிரி 'நல்லதே' செய்யும் என்று காட்டியதைப் பாராட்டவேண்டும்
தனித்தனியே துண்டுகளாய் யோசிக்கும்போது சில காட்சிகள் அசாதாரணமானவை.
எங்கேயோ முடிந்திருக்கவேண்டிய படம் (2 3/4 hrs) எங்கையோ நீண்டு முடிந்திருக்கிறது அதனால் வரும் அலுப்பு
முக்கியமாய் இசை, சோழன் முதல் வருகையில் heavy metal இசை அதிர்கிறது. மிகுந்த அபத்தம்.
அவதானம்# நம் தமிழ் ரசிகர்களுக்கு தீர்க்கமான ஒருமுடிவு வேண்டும். இதில் அது இல்லாததால் இது வெற்றியாவது கடினம்
ஆ.ஒ. பார்த்துவிட்டு வந்துவாசித்த விமர்சனமே இது ஈழத்தோடு தொடர்புடையது என்பது. வந்தஎரிச்சல் சொல்லி மாளா. வலிகள்=விம்பம்.wt a shame
.....
பாண்டியர்களுக்கும் சிங்களமன்னர்களுக்கும் பெண்கொடுத்தல்/எடுத்தல் நீண்டகாலமாய் இருந்திருக்கிறது
சி.மன்னர்கள் தங்கள் உள்பிரச்சினையைத் தீர்க்க சோழர்களின் படையெடுப்பைத்தடுக்க பாண்டியர்களை தொடர்ச்சியாக நாடியிருக்கிறார்கள்
சோழ படையெடுப்பின் முன்னே ஈழத்தில் தமிழர்இருக்கிறார்கள். 1001படம் அந்தவகையில் 'பூர்வீக'த்தமிழர்களை அடையாளப்படுத்த முடியாது
பாண்டியர்கள் மணிமுடியை மறைத்தால் அது சிங்களவரிடமே இருக்கவேண்டும். ஆனால் 1001ல் சோழபரம்பரையில் இருப்பதாய்ச் சொல்கிறது
சோழரின் தொடர்ச்சியான படையெடுப்பு சிங்களவர்களுக்கு, எப்போதும் ஈழத்தமிழர்கள் அச்சுறுத்தல் எனும் எண்ணத்தை வளர்த்திருக்கிறது
பின்னாட்களில் வந்த பல சிங்களமன்னர்கள் அதைப் பிரதிபலித்திருக்கிறார்கள். துட்டகைமுனுவின் பிரசித்தம் பெற்ற வாசகம் இருக்கிறது
தமிழ்பவுத்தம் (முக்கியமாய் யாழில்) அழிந்துபோனமைக்கு சோழர் படையெடுப்பு/ஆதிக்கம் காரணமாய் இருந்திருக்கலாம் என்பது என் ஊகம் (தவறாகவுமிருக்கலாம்)
............
1001 Magical Realism என்பதெல்லாம் சற்று அதிகப்படியானது.
அப்படிப் பார்த்தால் நிறையப்பாடல்கள், 20-30 பேரை துவசம்செய்யும் காட்சிகளுள்ள எல்லாத் த.படங்களையும்கூட M.R என்றும் நிரூபிக்கலாம்
1001 பார்க்கக்கூடிய படமா எனக்கேட்டபோது, கட்டாயம் ஒருமுறை பார்க்கலாம் என்றிருக்கின்றேன். வன்முறைகள் இருக்கும் எச்சரிக்கையுடன்
நான் பார்த்த காட்சியில், சனம் குடும்பத்தோடு வந்திருந்தன. சின்னஞ்சிறு குழந்தைகள் நிறைந்திருந்தன்.
ஆங்கிலப்படமாயிருப்பின் வன்முறைக்காட்சிக்காய் 18A கொடுக்கவேண்டிய படம். அவை குறித்த அக்கறையின்றி சிறார்களை கூட்டிவருதல் கொடுமை
வரும் நிறையப் பதிவுகள் 1001 தவிர்க்கமுடியாத படமாகிவிட்டதையே காட்டுகிறது.
ஆனால் வேட்டைக்காரனுக்கு வரும் பதிவுகளைப்போலவே 1001ற்கும் -எவ்வித நுட்பமான பார்வைகளுமின்றி- வருவதுதான் சோகம்
நேற்று வாசித்த பதிவில் 1001 Rema is real bitch இப்படிச் சொல்பவருக்காகவே 1001 ஓடவேண்டும் என்று நினைத்தேன்
நாசமறுவான்களே,முக்கால்வாசி தமிழ்ப்படங்களே செமிபோர்னோ படம் அதை எல்லாம் வாய்பிளக்கும் இரசிக்கும் நீங்களா இதைச் சொல்வது?
ஹீரோ என்ற விம்பத்தையே 1001ல் 2 பெண்களுமே மாறிமாறி விளாசுவதும், உடல்மீது காலால் ஏறிமிதிப்பதும் ஆண்களுக்கு எரிச்சலாய்த்தானிருக்கும்
செல்வராகவன்/பாலா பிடித்த இயக்குனர்கள். பாலாவைப் போலன்றி செ.ராகவின் பெண்களின் பாத்திரம் ஆளுமைமிக்கவையாக இருக்கும்
இங்கும் ரீமாசென்னே முக்கிய பாத்திரம். கார்த்தியும் பார்த்திபனும் சேர்ந்தே ரீமாவிற்கு ஈடுகொடுக்கவேண்டியிருக்கிறது நடிப்பில்
ஆனால் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் சிலகாட்சிகளை தவிர்த்திருக்கலாம் erotic என்பதைவிட எரிச்சலேவந்தன சிலகாட்சிகள் பார்க்கையில் .
Ethics என்று சொல்வது, மேற்கத்தையர் எப்படி பலபடங்களில் ஆசியர்/ஆபிரிக்கர்களை காட்சிப்படுத்துகின்றார்களே அவ்வாறே இப்படத்தில் ஆதிவாசிகள் வித்தியாசமின்றி காட்சிப்படுத்துகின்றார்கள்
இது மற்றதைப் (other) புரிந்துகொள்வதில் வரும் நமது போதாமை..
(குறிப்பு: இதில் நண்பர்களின் கருத்துக்களுக்கு எழுதிய twitterகளும் இருக்கின்றன)
http://twitter.com/elanko
2 comments:
///நேற்று வாசித்த பதிவில் 1001 Rema is real bitch இப்படிச் சொல்பவருக்காகவே 1001 ஓடவேண்டும் என்று நினைத்தேன்///
யாரந்தப் புண்ணியவான சகோதரா?
கிருத்திகன், அருண் என்பவர் எழுதியிருந்ததாய் நினைவு. தமிழ்மணத்தினூடாக அதை வாசித்தேன். அவரின் வலைப்பதிவின் பெயர் இப்போது நினைவினில் இல்லை :-(
Post a Comment