மெலிஞ்சி முத்தனின் நான்காவது தொகுப்பாய் 'வேருலகு' வெளிவருகின்றது. ஏற்கனவே மூன்று கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். முதல் இரண்டு தொகுப்புக்கள் ஈழத்திலும், மூன்றாம் தொகுப்பு பிரான்சிலும், நான்காவது தொகுப்பான வேருலகு கனடாவிலும் வெளிவருகின்றது.
இத்தொகுப்பை ஒருவகைக்குள் அடக்குவதாயின் 'குறுநாவல்' என்று பெயரிட்டாலும், மெலிஞ்சி இதைத் தனது 'கனவுகளின் தொகுப்பு' எனவே அழைக்க விரும்புகிறார். இத்தொகுப்பில் யதார்த்ததிற்கும் கனவுக்கும் இடையிலான மிக அந்தரங்கமான மொழியில் (நான் வாசித்தவளவில்) மெலிஞ்சி எழுதியிருக்கிறார். துயரமான ஈழத்தின் வாழ்வும் அதற்கு சற்றும் குறைவில்லாத இன்னொரு துயரமான புலம்பெயர் வாழ்வும் இதில் மிக நெருக்கமாய்ப் பதிவு செய்யப்படுகிறது. அண்மைய காலத்தில் தமிழ்ச்சூழலில் வெளிவருகின்ற புனைவுகளில் முக்கியமான ஒன்றாய் இதனைக் கருதுகிறேன்.
நண்பர்கள் நாங்கள் இணைந்து நடத்துகின்ற இவ்வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.
No comments:
Post a Comment