Saturday, February 03, 2007

Pariah என்ற சொல்லின் அரசியல்

கீழே தரப்பட்டுள்ள கடிதம், தோழியொருவரால் அனுப்பப்பட்டது. இவ்விடயம் குறித்து அக்கறையுள்ளவர்கள் எதேனும் செய்யக்கூடும் என்பதால் மட்டும் இங்கு நன்றியுடன் பிரசுரிக்கப்படுகின்றது. பறையர் என்ற சொல்லின் அரசியல் குறித்து நிறைய எழுதலாம். சென்றவருடம் ரொரண்டோவில் தமிழியல் மாநாடு நடந்தபோதும், ஒரு பேராசிரியர் கூத்துக்கலையை (சரியாய் நினைவிலில்லை) விளக்குவதற்காய் படங்களில் அரசர்களுடன் 'பறையர்களை'யும் உலாவவிட்டிருந்தார். அதுகுறித்த அரசியலை, அந்த வார்த்தையின் பயன்பாட்டு தடைசெய்யப்படவேண்டும் என்றும் அரங்கில் இருந்த பலர் கேள்விகள் கேட்டதாய் நினைவு. நிறங்களில் கூட பறையர்களை பிறரிலிருந்து வேறுபடுத்திக்காட்ட அதில் முயற்சித்திருந்தார்கள்.

Please feel like a pariah

India's leading weekly Outlook has published a cover story in its February 5, 2007 issue about smoking. That story was filed by one Mr.Raghu Karnad. The magazine publicized it in its cover with the following title: "Smokers the New Outcasts- Growing middleclass intolerance makes smokers feel like pariahs". I have no objection over their stand on smoking though I have a different outlook about it. My concern is about their use of the word 'Pariah'. In that story 'advertising guru' Alyque Padamsee has used that expression. "Nobody really wants smokers in a room-they've become the new pariahs" he said. Feeling like pariahs is not an easy thing. Facing discrimination and contempt in each and every walk of life is the fate of the Dalits in India. If anybody wants to feel like a pariah, he must live like one first.

"The caste system of India placed pariahs, also known as Untouchables, very low in society. The word pariah, which we
have extended in meaning, came into English from Tamil pa raiyar, the plural of pa raiyan, the caste name, which literally means "(hereditary) drummer" and comes from the word pa rai, the name of a drum used at certain festivals. The word is first recorded in English in 1613. Its use in English and its extension in meaning probably owe much to the long period of British rule in India" thus defines the website called 'The freedictionary.com '.

Calling a person who belongs to the Scheduled Caste by his caste name is an offence under the Prevention of Atrocities Act 1989 .Tamilnadu government once booked a case against former central minister and Janatha Party president Subramaniam swamy under P.C.R Act when he called the L.T.T.E chief Pirabhakaran as "International Pariah".

Though our Acts prohibits the derogatory usage of the words such as 'pariah', the people in media still continues to use it in a casual manner. They must learn some lessons from countries like America where the Blacks were called once as 'nigger'. Now they use 'Afro Americans' to identify Black people.

This kind of insensitivity should not be tolerated. I request
everybody to share my pain and come forward to feel like a 'pariah'. Please write protest mails to Outlook. On our side we have decided to sue the magazine if it fails to apologize for its mistake.

E mail id: editor@outlookindia.com, letters@outlookindia.com

D.Ravikumar
MLA,Viduthalai Chiruthaikal Katchi(D.P.I)
Tamilnadu

RAVIKUMAR
B1B MLA Hostel
Chepauk,Chennai 600 005
Mobile:93454 19266

18 comments:

thiru said...

டி.சே. இன்று அதிகாலையில் தான் இந்த paraiah என்னும் ஆங்கில சொல் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்குள் அது பற்றிய ஒரு செய்தி உங்கள் பதிவு மூலம் அறிகிறேன். மொழியியல் கூட ஆதிக்கசாதியினர் பக்கம் சாய்ந்திருக்கிறது...ம்ம்... Black money (கருப்புப்பணம்), white paper இவை கூட இந்த ஆதிக்க வரிசையில் வருபவை தான்.

Anonymous said...

"On our side we have decided to sue the magazine if it fails to apologize for its mistake."

In that case please file a case against John Kerry also.He also
used the same word in a different
context.Go ahead, you are likely to lose the case but may gain publicity for your cause.

மாசிலா said...

'outlook' எழுத்தாளருக்கு "சட்டியில் என்ன உள்ளதோ அதுதானே அகப்பையில் வரும்" பறந்த உலக அறிவு பெற்றிருந்தால் இப்படி எல்லாம் சொல்லி இருக்கமாட்டார். இதுபோன்ற கூற்றுகளை வைத்தே இவருடைய பூர்வீகத்தை சுலபமாக யூகிக்க முடிகிறது.

'வெறுப்பு', 'வெறுப்புக்குரிய' என்கிற வார்த்தைக்கு 'பறையர்' என பொருள் கொடுத்திருக்கிறார். இந்தியா வல்லரசு ஆக வேண்டிய தருணம் வந்துவிட்டது.

'outlook'க்கு கண்டன மின் அஞ்சல் செய்தாகிவிட்டது.

நன்றி பகிர்ந்தமைக்கு.

சோமி said...

தகவலுக்கு நன்றி டி.சே.

திரு உங்கள் கருத்துச் சரியே.இப்படி எங்கள் ஊரில் பேச்சு வழக்கில் உள்ள நிறையச் சொற்களை உதாரணம் காட்டலாம்.

மாசிலா said...

Anony//In that case please file a case against John Kerry also.He also used the same word in a different context.Go ahead, you are likely to lose the case but may gain publicity for your cause.//

எனக்கு தெரிந்து ஐரோப்பாவிலும், பிரான்ஸில் இந்த வார்த்தை வழக்கமாக உபயோகத்தில் உள்ளதுதான்.

இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.
.....
அநாமதேய நண்பருக்கு: நீங்கள் கூறுவது அநேக இடங்களில்நடந்துகொண்டிருக்கின்றது (மாசிலாவும் குறிப்பிடுகின்றார்). ஆனால் அதன் அடிச்சொல் ஆரம்பமான நாட்டிலிருந்துதான் இதற்கான எதிர்ப்பு ஆரம்பிக்கவேண்டும். இந்தியாவிலிருப்பவர்களிடமிருந்து இதுகுறித்து விழிப்புணர்வை ஆரம்பிப்பதுதான் நன்றாக இருக்கும். தலித்துகளுக்கு அமெரிக்காவில் அதிகாரம் கிடைத்தால் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி John Kerry யும் மன்னிப்புக்கேட்கச் செய்யலாம். அண்மையில் Seinfieldல் நடித்த Cosmo Kramer கறுப்பினத்தவர்களை பழித்ததற்காய் அமெரிக்காவில் மன்னிப்புக்கேட்டது நீங்கள் அறிந்திருக்கக்கூடும். உங்களுக்கு -இப்படி பாதிக்கப்பட்ட அதன் வலிகளை உணர்ந்த இரவிக்குமார் போன்றவர்கள் எழுதுவது- publicity யாய் தெரியக்கூடும். என்னைப்பொறுத்தவரை தவறுகளைச் சுட்டிக்காடும்போது அடுத்தமுறை இவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகிக்கும்போது outlook மட்டுமில்லை பிறரும் கவனமாயிருப்பார்கள் என்றுதான் யோசிக்கமுடிகின்றது.
.....
திரு நீங்கள் குறிப்பிட்ட 'black' என்ற வார்த்தையின் அரசியலும் கவனிக்கத்தக்கது. நீங்கள் இதுகுறித்து முன்னர் எழுதிய கட்டுரையை வாசித்தது நினைவினிலுண்டு. அதேபோல் பதிவுகள் விவாதக்களத்தில் ரோசாவசந்தும் விரிவாக எழுதியதாய் ஞாபகம். சோமி கூறுவதுபோல் நமது தமிழ்மொழியில் நீக்கவேண்டிய சொற்களும் நீள்வரிசையாகத்தான் உள்ளன. நன்றி.

மாசிலா said...

டிசே தமிழனுக்கு :

அனானி சுட்டி காட்டிய 'விளம்பரத்தை'(!) நானும் உள்ளுக்குள் நினைத்து எரிச்சலுடன் கூடிய ஒருவித மகிழ்ச்சி (!) அடைந்தது உண்டு. இப்படியாவது நம் பாரத பூமியில் ஒரு குலம் மற்றொரு சக குலத்தை மதத்தின் பெயரில் இவ்வளவு தரக்குறைவாக நடத்துவது உலக வெளிச்சத்திற்கு வராதோ என்ற ஏக்கத்தில் ஏங்கினேன். அவர் ஜான் கெர்ரி மேலும் அனைத்து பட்டாளங்களும் மட்டும் என்னவாம்? அவர் இனத்தவரும் வட அமெரிக்காவை அடாவடி தனமாக ஆக்கிரமித்து சிகப்பு இந்தியர் இனத்தை அழித்து வாழ்ந்து வருபவர்கள்தானே? இவர்களுக்கு மூதாதையர்களான ஆன ஆங்கிலேயர்கள் இந்தியாவையும் ஏனைய ஆசிய ஆப்பிரிக்க நாடு அதன் மண் மனித வளங்களை சூறையாடியவர்கள்தனே? இப்போது யூதர்களுடன் தோல் சேர்ந்து அரபு தேசத்தை அழித்து வருபவர்கள் தானே? அகையால் ஜான் கெர்ரியாக இருக்கட்டும் அல்லது பாப் ஆண்டவராக இருக்கட்டும் 'உண்மை' மறைந்துவிடாது. தவறு என்றும் தவறுதான்.

இவ்வளவு இறுமாப்பு, திமிர், ஆணவம் கொண்ட சர்வாதிகார மனிதர்களை யார் இப்பறையர் மண்ணுக்கு தாம்பூலம் வைத்து அழைத்தது? இவர்கள் மண்ணில் ஏறிக்கொண்டு, அனைத்து வளங்களை சுரண்டி, தம் மண்ணிலிருந்து விரட்டி ஒதுக்கி கடைசியில் இவர்கள் குலப்பெயரையே ஒரு 'மன நிலை'யை சித்தரிக்க பொருள் பட அவமானம் செய்யப்பட்டிருக்கிறது.

Anonymous said...

இந்துமதத்திலுள்ள சாதி வேறுபாடுகள் எல்லாம் தொழில் பிரிவோடு வகுக்கப்பட்டது.கக்கூசு கழுவுவது பறையனின் வேலை.பனையேறுவது நளவனின் வேலை.ஊத்தையெடுப்பது தோட்டியானின் வேலை.இதை மாற்றச் சொல்வது மடமை.பிரமணன் போய் கக்கூசு கழுவ முடியுமா அல்லது வெள்ளாளன் போய் பனையேற முடியுமா?இதனால் சமூகத்தில் குழப்பம் தான் வரும்.
அவையவை அந்தந்த இடத்தில் இருப்பதே சரி.இதுதான் அர்த்தமுள்ள இந்துமதக் கருத்து.

Anonymous said...

One more opportunity for some to
indulge in their favorite Hindusim/brahmin bashing.

Jayaprakash Sampath said...

டி.ஜே. இந்தச் சிகரட்டுப் பிடிக்கிறவர்கள் படுகின்ற தொல்லைக்கு அளவே இல்லை.. ஒரு வழியாக நமக்கு ஆதரவாக ஒரு மேட்டர் வந்திருக்கேன்னு நினைச்சென்... ஆனால், அதிலும் இப்படி ஒரு பிரச்சனையா? எழுதினவர் இன்னும் நிதானமா , இணக்கமான வார்த்தைகளைப் போட்டு எழுதியிருக்கலாம். பாருங்க.. விஷயம் வேற திசைக்குப் போயிடுச்சு...

Anonymous said...

இப்போது யூதர்களுடன் தோல் சேர்ந்து அரபு தேசத்தை அழித்து வருபவர்கள் தானே?
How about the genocides by muslims.

Anonymous said...

http://poongaa.com/content/view/1127/1/

Anonymous said...

It is a good idea if anyone sends mail to outlook on its cover (s)he points out a collective condemnation comes out of Tamilmanam and Ponga. Cite sankarapandi’s article தலித் மக்களை இழிவு படுத்திய அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிகை: ஒரு வேண்டுகோள்! and other relevant posts appeared in Tamilmanam.

சுந்தரவடிவேல் said...

Thanks for sharing your mail DJ!
This is another opportunity for the new bloggers to identify who's who:)

GOVINDARAJAN said...

As others, I enjoy reading the Outlook magazine for some good
story/news whenever time permits. But that was not the reason I am writing to you
today. I, primarily, writing this e-mail to let you and the entire Outlook family know that you have insulted, pained and angered millions of people in India and abroad by your cover story entitled "Smokers the New Outcasts- Growing middleclass intolerance makes smokers feel like pariahs" in your February 5, 2007 issue. We welcome if Mr. Karnad and your
weekly want to educate and eradicate smoking among people. But is this the way
you guys spread the message through media about awareness of smoking among
the people by using the word "Pariah" which is a very sensitive one to millions of people in India and Indians abroad. Moreover, as an Editor, you should be knowing that the Prevention of Atrocities Act 1989 prohibits the derogatory usage of the words such as "Pariah" but you guys in the media and guys like Alyque Padamsee ENJOY use it in a casual manner and
waiting for the opportunity to use it again it seems!! Is this the “mantra” for controversial stories, which, will eventually sell morecopies of Outlook or on purpose??

Myself and many of my friends around the world outraged about your cover story and insensitive about the feelings of simple, hard working and exploited and under privileged millions of people in India.

On behalf of affected schedule caste community, I would request you not
to use the word "Pariah" in your media in the future please. We would also request you to withdraw all copies of February 5, 2007 issue of Outlook immediately.

Please remove the online edition of this issue immediately.

Finally, we want the Outlook to apologies for hurting the millions of people all over the world.

We are glad that the political party (D.P.I) in Tamil Nadu expressing the sentiments of the people and taking the issue seriously and we will support them in this matter.

Sincerely,

G.GOVINDARAJAN.

Anonymous said...

Mr.Govindarajan and others should know facts before jumping to conclusions.Using that word per se is not illegal or an offense under the law.Using it against a member of the Dalit community is an offense as per the law. Outlook did not use in that context.It used in a general sense.You could say that Outlook could have avioded that word. But there are limits to political correctness
and you cannot impose political
correctness on the media or on public.When a word has two or
more different meanings and is not used in a deragtory sense to defame a community, to assume that
the intention is to defame or hurt feelings may be an example of taking a politically correct stand
but that is nonsense.

இளங்கோ-டிசே said...

நன்றி நண்பரகளே.
.....
மேலே எழுதிய சில அநாமதயே நண்பர்களின் கருத்துக்களில் எந்தப்புள்ளியிலும் உடன்பாடில்லை என்றாலும், கருத்துக்களை தடைசெய்யக்கூடாது என்றவகையில் -மட்டுமே- அனுமதிக்கப்படுகிறது..

கடைசியாக பின்னூட்டமிட்ட அநேமதேய நண்பர் எந்த சிந்தனை அலைவரிசையில் இருக்கின்றார் என்பது தெளிவாய்த் தெரிந்தாலும், -உங்கள் 'அறிவுஜீவித்தனமான' கருத்துக்கள்- வார்த்தை மாயஜாலங்களுக்குள் அல்லது உங்கள் சிந்தனையோட்டத்தில் இருப்பவர்களுக்கு பிடிக்கக்கூடும் எனினும் எனக்கு உங்கள் கருத்துக்களில் எதிலும் உடன்பாடில்லை.
....
ஒடுக்கப்பட்டவர்களை நோக்கி அந்த வார்தை பிரயோகிக்கப்பட்டால்தான் அது தவறு என்று கூறும் நண்பர், இதை வாசிக்கும் தலித் மக்களுக்கு எப்படி இருக்கும் என்பதையோ அல்லது இதுவும் பயன்பாட்டில் இருக்கின்ற சாதாரண சொல் என்று பாவிக்கப்போகின்ற புதிய தலை முறை பற்றிக்கூட சிறிதும் சிந்தனை போகவில்லை. இங்கே இன்னும் எளிமைப்படுத்துவதாயின் 'கற்பழிப்பு' போன்ற வார்தைகளுக்கு பாலியல் வன்புணர்வு/ப்லாத்காரம் போன்ற புதிய சொற்களை உருவாக்கியதுபோல pariah என்ற சொல்லுக்குபதிலாய் புதிய சொல்லைக் கண்டுபிடிப்பதில் என்ன பெரிய பிரச்சினை இருக்கப்போகிறது? pariahவை பாவிக்காது இருப்பதால் நாம் ஆங்கிலத்திலோ அல்லது தமிழோ ஒரு மண்ணாங்கட்டியையும் இழக்கப்போவதில்லை.
.......
கோவிந்தராஜன் மிகவும் நன்றி. இந்த கடிதத்தில் எழுதப்பட்ட கருத்துக்க்ளோடு முழுதாய் உடன்படுகின்றேன். இதை ஒரு முன்மாதிரியாக வைத்து பிற நண்பர்களும் கடிதம் எழுத விரும்பினால் அதற்கு அனுமதி தருவீர்கள் என்று நம்புகின்றேன். நன்றி.

Unknown said...

it is not a bad word,not a name of caste,or to critisize any one.
it is the job done by ancestors,we say
"drumsman goes with king".it is good to hear.but in tamil "paraiah goes with raja"
i believe "paraiah-those who beats drum"