Tuesday, May 05, 2009

தடுப்பு முகாங்களில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படும் பெண்கள்

பிரித்தானியத் தொலைக்காட்சி அதிர்ச்சித் தகவல்!



வவுனியாவின் வடக்குப்பகுதியிலுள்ள இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து பிரித்தானிய சனல் 4 தொலைக் காட்சிச் சேவைக்குக் கிடைத்த செய்திகள் பிரகாரம் இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாவதக தெரியவருகிறது.

அரசு சாரா ஊடகவியளார்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாத நிலையில், ஒளிப்படக் கருவியை மறைத்துவைத்து முகாமிற்குள் நுளைந்த சனல் 4 செய்தியாளர் ஒருவர் முதல் தடவையாக சுதந்திரமாக சில செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார்.

இச்செய்தி ஒளிப்பதிவானது முதல் தடவையாக சுதந்திரமாகப் பதிவுசெய்யப்பட்ட செய்தியென சனல்4 கூறுகிறது. நிக் பட்டனின் இச் செய்தி அறிக்கையின் படி இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவது தவிர, இறந்த உடல்கள் முகாம்களுள் வெளியான இடங்கள் நாட்கணக்கில் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் மேலும் கூறும் சனல் 4 செய்திகள் இம்முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கிறது.

தன்னை அடையாளம் காட்டவிரும்பாத உதவி அமைப்பாளர் ஒருவர், தனது முகாமில் நான்கு இறந்த உடல்கள் மூன்று நான்கு நாட்களாக கவனிப்பரற்றுக் கிடந்ததாகக் குறிப்பிடுகிறார். பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாத தாய்மாரைப் காண்பதாகக் கூறும் இவர், ஒரு தாய் இரண்டு கரண்டி பாலுக்காக தன்னிடம் கெஞ்சி மன்றாடியதாகவும் குறிப்பிடுகிறார்.

பல குழந்தைகள் தாய் தந்தையர் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளதாக முகாம் வாசி ஒருவர் குறிப்பிடுகிறார். இங்கு எமக்கு வாழ்க்கையில்லை இது ஒரு சிறைச்சாலை என மேலும் குறிப்பிடுகிறார். உணவிற்காக நெரிசலில் சிக்குண்டு இறந்து போன இரு சிறார்களைப் பார்த்ததாக மேலும் சாட்சியமளிக்கும் இவர், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த தமிழர்களை மிரட்டுவதே அரசின் நோக்கம் எனவும் குறிப்பிடுகிறார்.

ஒரு பெண் உதவிப் பணியாளர் சாட்சியமளிக்கையில் இளம் பெண்கள் இராணுவத்தால் பிரித்தெடுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறுகிறார். முகாம்களிலிருந்து தனிமைப்படுத்தப்படும் பெரும்பாலனவர்க மீண்டும் திரும்புவதில்லை எனக் குறிப்பிடுகின்றார்.

பெண்கள் எல்லோர் முன்னிலையிலும் குளிக்கவேண்டிய நிலையிலிருப்பதாகவும் இது அவர்களின் மிகப் பெரும் பாதுகாப்புப் பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவிக்கும் இச்செய்தி நேற்று குளியற் பகுதியில் மூன்று பெண்களின் இறந்த உடல்கள் காணப்பட்டதாகவும் கூறுகிறது.
இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.


நன்றி: Channel 4 & இனியொரு

No comments: