Tuesday, July 07, 2009

ம‌ன‌திற்கு நெருக்க‌மான‌ சில‌ பாட‌ல்க‌ள்


Eminem-Black Eyed Peas-Melissa-Akon

அண்மையில் வெளிவ‌ந்த‌ இறுவ‌ட்டுக்க‌ளில் எமினெமின் Relapse ஐயும், Black Eyed Peasன் The E.N.D (Engery Never Dies) வ‌ந்த‌ அன்றைய‌ தின‌ங்க‌ளிலேயே வாங்கியிருந்தேன்.

எமினெமின் இறுவ‌ட்டு வெளிவ‌ர‌முன்ன‌ரே We Made You என்ற‌ பாட்டு வீடியோவாக‌வும் வெளிவ‌ந்திருந்த‌து. அது வ‌ழ‌மையான‌ புக‌ழ்பெற்ற‌வ‌ர்க‌ளை ந‌க்க‌ல‌டித்துப் பாடுகின்ற‌ பாட‌ல். எமினெமின் பாட‌ல்க‌ள் கிட்ட‌த்த‌ட்ட‌ ஏ.ஆர்.ஆரின் பாட‌ல்க‌ளைக் கேட்ப‌தைப் போன்ற‌து. அதாவ‌து மொந்தையில் வைத்த‌ க‌ள் ஊற‌ ஊற‌த்தான் அதிக‌ம் வெறிக்க‌ச் செய்கின்ற‌மாதிரி, தொட‌ர்ச்சியாக‌ ப‌ல‌ முறைக் கேட்டால்தான் ம‌ன‌துக்கு அதிக‌ நெருக்க‌மாகும். முத‌லாவ‌து த‌ட‌வையாக‌ இசை கேட்ட‌லில் எமினெமோ, ஏ.ஆர்.ஆரோ சாதார‌ண‌மாய்த்தான் தெரிவார்க‌ள்.

எமினெமின் இந்த‌ பாட‌ற்தொகுப்பு கிட்ட‌த்த‌ட்ட‌ ஜ‌ந்து வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு வெளிவ‌ந்திருக்கின்ற‌து. அதுவும் இனி எமினெமின் மீள்வ‌ருகை சாத்திய‌மில்லை என்று எல்லோரும் எதிர்வுகூறிய‌போது எமினெம் த‌ன‌து த‌ன‌து ஆறாவ‌து இசைத்தொகுப்பான‌ Relapse மூல‌ம் வெளியே வ‌ந்த‌து ஆச்ச‌ரிய‌மான‌ ஒரு நிக‌ழ்வே.

இந்த‌ அய்ந்து வ‌ருட‌ங்க‌ளில் ஒருமுறை அதிக‌ போதை ம‌ருந்துக‌ளை எடுத்து கிட்ட‌த்த‌ட்ட‌ சுய‌நினைவில்லாது கிட‌ந்து ம‌ர‌ண‌த்தை நெருங்கியிருக்கின்றார் எமினெம். அத்தோடு போதைய‌டிமையிலிருந்து வெளிவ‌ருவ‌த‌ற்காய், போதைம‌ருந்து ம‌றுவாழ்வு நிலைய‌த்திற்கு சிகிச்சைக்காய் சென்று இடைந‌டுவில் கைவிட்டு வ‌ந்துமிருக்கின்றார். தான் போதை மருந்துக்கு அடிமையாவ‌திலிருந்து த‌ப்புவ‌த‌ற்கு ஒரேவ‌ழி இசைக்குள் நுழைவ‌துதான் என்கின்றார் எமினெம், அண்மையில் வ‌ந்த‌ நேர்காணல் ஒன்றில். இப்பாட‌ற்தொகுப்பு முழுதும் போதை ம‌ருந்துக்கு அடிமையாவ‌து குறித்தும், அத‌ன் இருண்ட‌ ப‌க்க‌ங்க‌ள் குறித்தும், த‌ன‌க்குள் கேட்கும் ப‌ல‌ குர‌ல்க‌ள் ப‌ற்றியும்தான் எமினெம் அதிக‌ம் பாடுகின்றார். அதுவும் Relapseல், அவ்வ‌ப்போது சில‌ நிமிட‌ங்க‌ளே வ‌ரும் உரையாட‌ல்க‌ளினால் எமினெம் த‌ன்னைத்தானே ந‌க்க‌லடிக்கும் ப‌குதிக‌ள் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌வை. த‌ன்னையே எள்ள‌ல் செய்ய‌முடியும் ஒருவ‌னால், பிற‌ரை எந்த‌த் தாட்ச‌ண்ய‌முமில்லாது ந‌க்க‌ல‌டிக்க‌ முடியும் என்ப‌தைச் சொல்லித் தெரிய‌வேண்டிய‌தில்லை.

Jessica Simpsons, Amy Whinehouse, Britney Spears, Hilary Duff, Jessica Alba போன்ற‌ அநேக‌ celebraties ந‌க்க‌ல‌டிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்.
வ‌ழ‌மை போல‌வே ஓரின‌ச் சேர்க்கையாள‌ர்க‌ளையும் Lindsy Lohanஐ முன்வைத்து ந‌க்க‌ல‌டிக்க‌வும் செய்கின்றார். தானொரு விளிம்புநிலை ம‌னித‌ன் என்ப‌தை (white america) உட்ப‌ட‌ பல்வேறு பாட‌ல்க‌ளில் உண‌ர்த்த‌ச் செய்கின்ற‌ எமினெம் தொட‌ர்ச்சியாக‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளாக‌ இருக்கும் ஒரின‌ச்சேர்க்கையாள‌ர்க‌ளை அதிக‌ம் ந‌க்க‌ல‌டிப்ப‌தை எப்ப‌டி எடுத்துக்கொள்வ‌து என்றும் விள‌ங்க‌வில்லை.

ஆனால் என‌க்கு We made you பாட‌லை விட‌ Beautiful என்ற‌ பாட‌லே அதிக‌ம் பிடித்திருந்த‌து. த‌னிமையையும்,அத‌ன் நிமித்த‌ம் எழுகின்ற‌ ம‌ன‌ அழுத்த‌த்தையும் அதிலிருந்து மீள்வ‌த‌ற்கான‌ ந‌ம்பிக்கையையும் கூறுகின்ற‌ அழ‌கான‌ ஒரு பாட‌ல்

(Warning: Some Scenes & Language are inappropriate for Children)


Lately I’ve been hard to reach
I’ve been too long on my own
Everyone has a private world
Where they can be alone
Are you calling me, are you trying to get through
Are you reaching out for me, and I’m reaching out for youBlack Eyed Peasன், Boom Boom Pow பாட‌ல்தான் அதிகம் புக‌ழ் பெற்ற‌து. சென்ற‌ வார‌த்தில் ரொறொண்டோவில் ந‌ட‌ந்த‌ Much Music விருது விழாவில் கூட‌ Black Eyed Peas இப்பாட‌லைத்தான் பாடியிருந்தார்க‌ள். அணணாவின் ம‌க‌ன் கீர்த்தியும் (9 வ‌ய‌து) த‌ங்க‌ள் பாடசாலை இசை வ‌குப்பில், இந்த‌ப்பாட‌லைத்தான் த‌ங்க‌ள் ஆசிரிய‌ர் போட்டு, த‌ங்க‌ளைப் பாட‌வும் ஆட‌வும் செய்வார் என்றான். அவ‌னின் நேய‌ர் விரும்ப‌த்தின்பேரில் இறுவ‌ட்டு வாங்கிய‌ ஆர‌ம்ப‌நாட்க‌ளில் அந்த‌ப் பாட‌லை ம‌ட்டும் அதிக‌ம் திருப்பி திருப்பி இசைத்து, வீட்டில் எம‌தெல்லோரின் வாயிலும் பூம் பூம் என்ற‌ வார்த்தை மித‌ந்து கொண்டிருந்த‌து. ஆனால்
என‌க்கு வீடியோவாய்ப் பார்க்கும்போது இந்த‌ இறுவ‌ட்டிலிருந்த‌ இன்னொரு பாட‌ல்தான் அதிக‌ம் பிடித்துக்கொண்ட‌து.

ஓர் இர‌வை இந்த‌ப் பாட‌லை விட‌ வெறெப்ப‌டிப் பெரிதாக‌க் கொண்டாடிவிட‌ முடியும்? பின்னிர‌வுக‌ளை வீதிக‌ளிலும், கிள‌ப்புகளிலும் க‌ழித்த‌வ‌ர்க்கு இந்த‌ப் பாட‌ல் நிச்ச‌ய‌ம் நெருக்க‌ம் கொள்ள‌வே செய்யும்.


I've gotta feeling


தொட‌ர்ச்சியாக‌ சில‌ மாத‌ங்க‌ளாய் ஈழ‌த்திலும் இங்கும் ஏற்ப‌ட்ட‌ நிக‌ழ்வுக‌ளால் வ‌ந்த‌ ஒருவித‌ ம‌ன‌ அழுத்த‌த்தால் இசை கேட்ப‌தே விரும்ப‌மில்லாது போய்க்கொண்டேயிருந்த‌து. எனினும் எதையாவ‌து கேட்காவிட்டால் அழுத்த‌ம் க‌ழுத்தை நெரித்துவிடுமோ என்ற‌ பய‌த்தில், பாட‌ல் வ‌ரிக‌ள் விள‌ங்காது ஆனால் இசை ஓடிக்கொண்டிருக்கும் எதையாவ‌து கேட்க‌வேண்டும் என்று தேடிய‌போது...ல‌த்தீன் பாட‌ல்க‌ளையும், அரேபிய‌ப் பாட‌ல்க‌ளையும் கேட்க‌த்தொட‌ங்கியிருந்தேன். இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் ல‌த்தீன் பாட‌ல்க‌ளைவிட‌ அரேபிய‌ பாட‌ல்க‌ளில் உள்ளொளிந்து தெரிந்த‌ விப‌ரிக்க‌முடியாத‌ சோக‌மும் தாப‌மும் என்னோடு அதிக‌ம் நெருக்க‌ம் கொண்ட‌ன‌. தொட‌ர்ச்சியாக‌ சில‌ நாட்க‌ள் இணைய‌திலிருக்கும் வானொலிக‌ளால் அரேபிய‌ப் பாட‌ல்க‌ளைக் கேட்க‌ முடிந்திருந்த‌து (முக்கிய‌மாய் Live365 ). அப்ப‌டிக் கேட்க‌த்தொட‌ங்கிய‌போது ஒரு சில‌ பாட‌க‌ர்க‌ளின் குர‌ல்க‌ள‌ அந்த‌மாதிரிப் பிடித்துப்போன‌து. சாரு ஏற்க‌ன‌வே அறிமுக‌ப்ப‌டுத்திய‌ நான்சி அஜ்ர‌த்தைப் போல‌, மெஸிசா என்றொரு பாட‌கியின் குர‌ல் உண்மையில் ம‌ய‌க்க‌வே செய்த‌து. அத‌ன்பின்ன‌ர் மெஸிசாவுட‌ன் என‌க்குப் பிடித்த‌ இன்னொரு பாட‌க‌ரான‌ Akon அவ‌ருட‌ன் சேர்ந்து பாடியிருந்த‌மையை அறிந்த‌போது ....இன்னும் விய‌ப்பாயிருந்த‌து.

இவ‌ர்க‌ள் இருவ‌ரும் பாடிய‌ இந்த‌ப்பாட‌லைக் கேட்டுப் பாருங்க‌ள்...குர‌ல்க‌ள் ம‌ன‌தை உருக்கிறதா இல்லையா


Yalli Nassini


இதைவிட‌ மெலிஸா த‌னியே பாடிய‌ இந்த‌ப் பாட‌லையும்...இந்த‌ இணைப்பை ந‌ண்ப‌ரொருவ‌ருக்கு செக்ஸியான‌ குர‌ல் கேட்டுப் பாருங்க‌ளென‌ அனுப்பிய‌போது, 'மெலிஸாவின் குர‌லை ம‌ட்டுந்தானா செக்ஸி?' என்கிறாய் என்று கேட்டிருந்தார் அவ‌ர். இப்போது யோசித்தால் ம்... 'குர‌ல் ம‌ட்டுமில்லை' என்றுதான் சொல்ல‌தான் ம‌ன‌ம் அவாவுகிற‌து.


Kam Sana

7 comments:

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அண்ணன்.

தமிழன்-கறுப்பி... said...

அரேபியப்பாடல்களின் உருக்கம் நெருக்கமாகத்தான் இருக்கம் புரியாவிட்டாலும்..

அரேபிய நாட்டில் இருந்தாலும் அரேபிய பாடல்கள் கேட்பதற்கான சூழல் குறைவாகத்தான் வாய்க்கிறது, தனியே இருக்கிற சந்தர்ப்பங்களில் அரிதாகக்கேட்டிருக்கிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

சொல்ல மறந்ததொன்று, அரேபியப்பெண்கள்...
அட போங்க டிசே சும்மா வெக்கையைக்கிளறிக்கிட்டு :)

அய்யனார் said...

பகிர்வுக்கு நன்றி டிசே
நான்சிய பாக்க ஒரு எட்டு வந்துட்டு போறது :)

Anonymous said...

eminem? ew

Fergie-ai spoil paNNathu Black eyed peas thaan.. She was so beautiful in her melodies.

Anonymous said...

listening to eminem, okay-ish lyricist.
the shoes bit. i like it
=)
aanaal, ena unga greats ellam homophobic macho guys-aa irukkaangkaLo theriyeallai. 50 cent, eminem..
but it's totally cool i guess. i know this gay guy who is a hardcore eminem fan, i tried to throw my bitching over this contradiction and he was like 'huh?'.
'it's the music that matters, dummy!'
*screech*

DJ said...

தமிழன்-கறுப்பி:
/அரேபியப்பெண்கள்...
அட போங்க சும்மா வெக்கையைக்கிளறிக்கிட்டு /

உங்குள்ள‌ கொதிக்கும் வெப்ப‌நிலைக்கு, அரேபிய‌ப் பெண்க‌ள் 'அன‌ல் மேற்ப‌னித்துளி'யாக‌ குளிர்ச்சியை அல்ல‌வா த‌ர‌வேண்டும் :-)
.....

அய்ய‌னார்:
நான்சி ம‌ட்டுமில்லை, மெலிஸாவும் லெப‌னான் ப‌க்க‌மாய்த்தானிருக்கின்றார். யாராவ‌து ஒரு ஷேக் sponsor செய்தால் வ‌ராமலா போய்விடுவேன் :-)

....
ஹ‌ரி,
Fergie, Black Eyes Peasற்கு வ‌ந்த‌த‌ன் பிற்குதான் என‌க்கு அறிமுக‌மானார்.
/Fergie-ai spoil paNNathu Black eyed peas thaan.. She was so beautiful in her melodies./
என்று நீங்க‌ள் கூறுவ‌து உண்மையாக‌க் கூட‌ இருக்க‌லாம்; ஆனால் Fergie பர‌வ‌லான‌ க‌வ‌ன‌த்தைப் பெற்ற‌து Black Eyed Peasகுழுவில் இணைந்த‌தன் பின் என்றே நினைக்கின்றேன்.

/macho guys/ஜ‌ப் பிடிப்ப‌த‌ற்கு இய‌ல்பில் அப்ப‌டி என்னால் இருக்க‌முடியாதது ஒரு கார‌ண‌மாய் இருக்க‌க்கூடுமோ என‌ யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.