Friday, December 01, 2006

அஸினுடனான கவித்துவமான உரையாடல்

இவ்வளவு காலமும் அஸினின் தீவிர இரசிகராய் இருக்கும் நான் அஸினை நேரில் சந்தித்தால் -அஸினுக்கு எனக்கும் இடையிலான உரையாடல் - எப்படியிருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன். கவித்துவமாய்த்தான் உரையாடல் தெரிகிறது, கனவில்.

நிஜத்தில் என்னத்தால் எல்லாம் அடி/உதை வாங்குவேன் என்பதை தயவு செய்து எவரும் நினைவுபடுத்திவிடாதீர்கள்.


Asin's Fan:
பால்மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா..
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா..
வார்த்தைவரக் காத்திருக்கும் கவிஞனில்லையா..
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா..
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

Asin
சாரல் மழைபோல் விழுந்துவிட்டாய்
வேர்கள் முழுதும் நனைத்து விட்டாய்
மழையாயிருந்த எனது மனசில்
விதையாய் விழுந்து முளைத்து விட்டாய்

என் பொக்கிஷங்கள் திருடிவிட்டாய்
பூவின் காற்றாய் வருடிவிட்டாய்

வாழை இலைபோல் மறைந்திருந்தேன்
காற்றாய் நுழைந்து கிழித்து விட்டாய்
அரசம் இலைபோல் துளிர்த்திருந்தேன்
உயிரை உயிரால் உழுதுவிட்டாய்


asin98

Asin's Fan:
பூங்காற்றிலே உன் சுவாசத்தைத்
தனியாகத் தேடிப்பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப்பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா

காற்றின் அலைவரிசை கேட்கிறதா
கேட்கும் பாட்டிலொரு
உயிர்விடும் கண்ணீர் வழிகின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகுமொரு வாசம் வருகிறதா......

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை...
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை...

Asin:
ஒரு அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

உந்தன் அலாதி அன்பினில்
நனைந்தபின் நனைந்தபின்
நானும் மழையானேன்

தூக்கம் வருகையில்
கண்பார்க்கும் கடைசி காட்சிக்குள்
நிற்பதுந்தன் முகமே

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்


Asin's Fan:
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும்போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும்போது....

நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயோ
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயோ

கடலின் அடியில் பளிங்காய் இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தே கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீதானா வழிந்தோடினாய்

Asin:
குழந்தையைப்போலவே
இதயமும் தொலையுதே

வானத்தில் நடக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோர்
காற்றாடியாகிறேன்

வெள்ளிக்கம்பிகளைப் போலே
ஒரு தூறல் போடுதோ
மீண்டும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்

மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கரைகிறாய்


asin111

Asin's Fan:
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு....

உன்னோடு நான் கொண்ட பந்தம்
மண்ணோடு மழைகொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்...

Asin:
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன்மடியில்
தூங்கினால் போதும்

அதேகணம்
என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின்
ஏக்கங்கள் தீரும்

ஏங்குகிறேன் ஏங்குகிறேன்
உன் நினைவாலே நான்

அடைமழை வரும்
அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ஸ்நேகம்
ஒரு போர்வைக்குள்
இரு தூக்கம்

குளுகுளு பொய்கள் சொல்லி
எனை வெல்வாய்
அது தெரிந்தும்கூட அன்பே
மனம் அதையே தான் எதிர்பார்க்கும்

திருடன் போல்
பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை
நீயணைப்பாயே
அது கவிதை


ம்....இவ்வளவு காலமும் 'கவிதை' என்று எழுதியதை அவையெல்லாம் கவிதைகளல்ல என்று ஒரு வரியில் அஸின் புரட்டிப்போட்டுவிட்டாரே என்று கோபம் வந்தாலும், சொன்னது அஸினாயிற்றே என்றபடியால் அமைதியாகிவிட்டேன் :-).


குறிப்பு: பாவனாவின் படங்கள் போட்டு ஒரு உருப்படியான பதிவு எழுதினனீ, நெடுங்கால இரசிகராய் இருக்கும் நீ எனக்கு எதுவும் எழுதாது இருப்பது நியாயமா என்று அஸின் என்னை நாளை திட்டாமல் இருப்பதற்காய் முற்கூட்டிய கவனத்துடன் ஆனான பதிவு இது!

8 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

பொடிக்கு முத்தீட்டுது.

ravi srinivas said...

may your wish be fulfilled but
dont worry, somebody will dub for her :)

டிசே தமிழன் said...

இதுவரை நாளும் ஒளிந்திருந்து விட்டு அஸினைப் பார்த்தவுடன் ஓடிவந்த ஈழநாதரே.... உன்னானைக் கேட்ட்கிறன், உம்மடை பதிவிலை எதுவும் எழுதினால் அஸின் கனவில் வரமாட்டேன் என்று சொன்ன்வாவோ? அவ்வப்போது பதிவுகள் எழுதினால் குறைந்தா போய்விடுவீர் :-(?

டிசே தமிழன் said...

இரவி அசலைப்பற்றி கனவுகண்டால் நகலைப்பற்றி எழுதி ஆறுதல் கூறுகின்றீர்களே :-(

பொன்ஸ்~~Poorna said...

//படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்//
டிசே, பக்கத்தில் மேலே உள்ள "ஆவி வந்த" கைகளைப் பார்க்கும் போதில் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது..

அஸினுடனான உங்களின் கவித்துவமான உரையாடல்!! அடடா. எத்தனை கவிதைகள்....

(அஸின் பாடும் போது பின்னணிக் குரல் யார் கொடுக்க வேண்டும் என்பதை இன்னும் தேர்வு செய்யவில்லையா? அவர்களையே பாடவிட்டால், நிஜமான பயங்காட்டுதலாகி விடப் போகிறது :)) )

நான் என்கிற நான் said...

கவிதை போட்டோ
போட்டோ கவிதை
இரண்டுமே அழகு :-)

ஈழநாதன்(Eelanathan) said...

//அவ்வப்போது பதிவுகள் எழுதினால் குறைந்தா போய்விடுவீர் :-(? //

அண்ணை படிக்கப் படிக்க எண்டு வேண்டின புத்தகங்கள் ஒரு அம்பாரம் சேர்ந்திட்டுது.அதை முடிக்காமல் வலைப்பதியுறேலை எண்டு சபதமெடுத்து ஒரு வருசம் ஆனதுதான் மிச்சம் வாசிச்சும் முடிக்கேலை வலைப்பதியவும் நேரமில்லை எண்டாகிப்போச்சு(எப்படி நொண்டிச்சாட்டு)அப்பப்ப நீங்கள் எழுதுறதை வாசிக்கிறதே சந்தோசம் அதை விட்டிட்டு ஒரு பதிவு எழுதி அதுக்கு மறுமொழி மட்டுறுத்துறன் நட்டு முறுக்கிறன் பேர்வழியெண்டு அஞ்சு நிமிசத்துக்கொருக்கா ஆராவது பின்னூட்டம் போட்டாலும் எண்டு பெட்டியைத் திறந்து பின்னூட்டம் இருந்தா அதுக்கு பெமிஷன் குடுத்து இல்லாட்டி ஈயோட்டி என்று தலை காய்ஞ்சு போயிட்டுது அதுக்குள்ளை தனக்கடா வேட்பிரஸ் தன் பிடரிக்குச் சேதம் எண்ட கதையாய் அதை மாத்தப்போய் கடைசியிலை எனக்கெண்டு ஒரு பதிவு இருக்கிறதே மறந்து போச்சுது.வேண்டாமண்ணை இருக்கிறவனுக்கு ஒரு வலைப்பதிவு இல்லாதவனுக்கு ஓராயிரம் பதிவு.

டிசே தமிழன் said...

அஸின் பாடும் போது பின்னணிக் குரல் யார் கொடுக்க வேண்டும் என்பதை இன்னும் தேர்வு செய்யவில்லையா? /
பொன்ஸ், அஸின் சும்மா கதைத்தாலே எனக்கு எல்லா ஸ்வரங்களும் இசைந்த பாடலாய்த்தான் இருக்கும் :-). ஈழநாதன் திருப்ப வந்து இது முத்தின கேஸ் இனிக் குணப்படுத்தமுடியாது என்று மட்டும் ஒரு பின்னூட்டம் இடவேண்டாம்.
...
நான் என்கின்ற நான்: ஜோதியில் ஐக்கியமாடியிட்டமில்ல :-).
...
ஈழநாதன், உங்களை மாதிரித்தான் வாசிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியல் எனக்கும் நீண்டுகொண்டே போகின்றது. வாசிப்புக் குறைந்துபோவதன் பலவீனம் எதையாவது எழுத வெளிக்கிடும்போது விளங்குகின்றது :-(.