Wednesday, December 27, 2006

மரணதண்டனை வேண்டாம்

-கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி -

அ.ஞா. பேரறிவாளன்
மரண தண்டனைச் சிறைவாசி
த.சி.எண். 13906
நடுவண் சிறை, வேலூர் - 2

அன்புக்குரியீர்,

வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்கு அனுப்புகிறேன்.

எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் மனிதநேய அமைப்பினர், சட்டமறிந்த வழக்கறிஞர்கள் என்ற முறையில் உங்களோடு எனது காவல் துறை துன்பங்கள், வாக்குமூலத்தில் என் கையொப்பம் பெறப்பட்ட முறையை, எனது மனநிலையை, சிறைக் கொடுமைகளை வாழ்கின்ற தன்மையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

அக்கறையோடும், உள்ளன்போடும் படித்தறிந்து எனது தரப்பு நியாயத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு இம்முறையீட்டின் மூலம் உங்களது மனதை நான் வென்றுவிட வேண்டும் என்றே ஆசை கொள்கிறேன். அதுவே எனது நீதிக்கான போராட்டத்தில் வெற்றியின் படிக்கல்லாக கருதுகிறேன்.

தொடர்ந்து வாசிக்க.....


(நன்றி: விழிப்புணர்வு)

9 comments:

முத்துகுமரன் said...

நல்லதொரு பகிர்வு டிசே. இங்கே தந்தமைக்கு நன்றி. பழ.நெடுமாறன் அவர்களின் மகள் எழுதிய ''தொடரும் தவிப்பு'' என்ற நாவலில் இருந்த பல செய்திகள் இக்கட்டுரையில் வாசிக்கக் கிடைக்கிறது. அதை நாவல் என்று சொல்வதை விட பேரறிவாளனின் தாயர் அற்புதம் அம்மா அவர்களின் உள்ளப்பகிர்வு என்றே சொல்லலாம்.

நன்றி

-/பெயரிலி. said...

முத்துகுமரன்,
இப்புதினம் எங்கே கிடைக்கும்?

இளங்கோ-டிசே said...

நன்றி முத்துக்குமரன். பேரறிவாளனின் தாயார் குறித்து இவ்வழக்கு நடந்த ஆரம்பகாலகட்டத்தில் நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றேன். பெயரிலி கேட்டதுமாதிரித்தான், அந்த புதினம் குறித்து மேலதிக விபரங்களை உங்களால் தந்துதவ முடியுமா?

செல்வநாயகி said...

இந்த நாவல் பற்றியும், அதை எழுதிய பழ.நெடுமாறனின் மகளின் செவ்வியும், எழுதுவதற்காகத் தகவல் சேகரித்தபோது ஏற்பட்ட அவரின் அனுபவங்களும் இருந்த கட்டுரை ஒன்றை எங்கோ படித்தேன். சேமிக்கத் தவறியதால், உடனடியாக இணைப்புக்கொடுக்கவோ, எடுத்துப்போடவோ முடியவில்லை:(( தேடிக் கிடைத்தால் இடுகிறேன்.

முத்துகுமரன் said...

அறைக்கு சென்றவுடன் மேலதிக விபரங்களை அறியத் தருகிறேன்

வசந்தன்(Vasanthan) said...

டி.சே,
பழ.நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலி எழுதிய 'தொடரும் தவிப்பு' என்ற புத்தகம் என்னிடமுள்ளது.
அதில் 'அறிவம்மா' என அழைக்கப்படும் பேரறிவாளனின் தாயாரின் போராட்டத்தைப் பதிவாக்கியிருக்கிறார். 2004 நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. வழக்குகளும் அதனோடு ஒட்டி நடந்த பல சம்பவங்களுமாக முக்கியமானதோர் ஆவணம்.

வெளியீடு: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
புதிய எண் 33, நரசிம்மபுரம்
மயிலை, சென்னை
தொ.பேசி. இல. 24640575

மின்னஞ்சல்: thamiz@thenseide.com

கானா பிரபா said...

பெயரிலி

முடிந்தால் ஒரு தனி மடல் போடுங்கள், இந்த நூலைப் பெற்றுத் தர முயற்சிக்கின்றேன்.

இளங்கோ-டிசே said...

விபரங்களுக்கு நன்றி நண்பர்களே.

Anonymous said...

தொடரும் தவிப்பு கீழுள்ள சுட்டியில் கிடைக்கிறது தோழர் -

http://www.panuval.com/index.php?route=product/product&product_id=104