Wednesday, May 02, 2007

அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள்

பிரேம்- ரமேஷ்

பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.

******
அந்த ‘ஆண்மை’ உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் ‘ஆண்மை’ நிற்கும் வரையில் பெண்ணடிமை வளர்ந்தே வரும். பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது ‘பெண்மை’ விடுதலையில்லை என்பது உறுதி. ‘ஆண்மை’யால் தான் பெண்கள் அடிமையாக்கப் பட்டிருக்கிறார்கள்.

*****
இவற்றை 1928_ல் தமிழ்நாட்டில் ஒருவர் பேசியிருக்கிறார் என்பதே வியப்பளிக்கக்கூடியதாக உள்ளது. வியப்பையும் மீறி, இன்றும் இவை விவாதிக்கப் படாதவைகளாகவே உள்ளது என்பது புரிந்துகொள்ளப்படவேண்டியதாக உள்ளது. ‘பெண் விடுதலை’ என்பதற்காக ஆண்கள் பாடுபடுவதும், கருப்பின மக்களின் விடுதலைக்காக வெள்ளை மேலாதிக்கத்தினர் பாடுபடுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒடுக்கும் சமூகத்தினர் பாடுபடுவதும் ‘ஏமாற்றுவதற்காகச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல’ என்பது வரலாற்றில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்ட ஒன்று. ஆனால் ஒடுக்குதல், ஒடுக்கப்படுதல் என்ற இருநிலைகளையும் ஏற்காத ‘முரண்படும்’ தன்னிலைகள் உருவாவது என்பது இந்த இரண்டு எதிரிடைகளையும் மறுக்கும் ஒரு தளத்தில் சாத்தியமாகக் கூடியதே. ‘விடுதலைக்கருத்தியல்கள்’ அனைத்திற்குமே இப்படி ஒரு விலகிய அடையாளம் தேவைப்படுகிறது. ஏனெனில், எல்லா ‘விடுதலைக்கருத்தியல்களுமே’ அதி தீவிர விலகுதல், அதி தீவிர மறுசீரமைப்பு என்ற தன்மைகளை உடையவை. ஒரு வகையில் இவை பலப்பட்டு விட்ட ‘உலகப்பொதுவழக்கு’ அல்லது ‘நிலைப்பட்டுவிட்ட எதார்த்தம்’ என்பதை மறுத்து, ஒரு குறிப்பிட்ட அறத்தின் அடிப்படையில் தமது நிலைப்பாட்டை எடுப்பவை. முழுவிடுதலை என்பது சாத்தியமே இல்லை என்பதும் ‘அடிமைத்தனம்’ இல்லாமல் ‘சமூகம்’ ‘நாகரிகம்’ என்பவை உருவாகி நிலை பெறாது என்பதும் உலகப்பொது வழக்கு சார்ந்த பிடிவாதமான நம்பிக்கைகள் என்றால், விடுதலைக் கருத்தியல்கள் ‘சுதந்திரம்’ என்பதை அதன் முழுவடித்திலும் தொடர்ந்து கூறிவருவது ‘முரண்படும் தன்னிலை’ பற்றிய சாத்தியம் குறித்து அவை கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த ‘நம்பிக்கை’ ‘பெண்ணியம்’ பற்றிய விவாதங்களிலும் பெண்ணியம் சார்ந்த மாற்று அறிதல் மற்றும் புரிதல்களிலும் தொடர்ந்து ஊடாடிக்கொண்டே இருக்கக்கூடிய ஒன்று.

இந்த நம்பிக்கையின் மற்றொரு வடிவம்தான் ஆண்மையம் மடிறுக்கும் ‘ஆண் முதன்மை’ மறுக்கும் ஆண்வழிப்புரிதல் கொண்ட ஆண்களால் ஏற்கப்படும் பெண்ணியம். நண்பர்கள் பலரும் தொடர்ந்து விவாதிக்கும் சிக்கிக் குழம்பும் ஒரு நிலைக்களம். பெண்ணியத்தை ஏற்கும் ஆண் அடையாளம், அல்லது பெண்ணியத்தால் உருவாக்கித் தரப்படும் ஆண் அடையாளம் என்பது என்ன? இது சற்றே சிக்கலாகத் தோன்றினாலும் முற்றிலும் சிக்கலானது அல்ல. பெண்மை, ஆண்மை என்ற இரண்டுமே கட்டமைக்கப்பட்ட புனைவுகள், புனைவுகளை மறுத்து மாற்று அடையாளம் பெறும் ஒரு அறிதல், கருத்தியல் தளத்தில் ‘அறவியல்’ மற்றும் ‘புலன் தளத்தில்’ சாத்தியமாகக் கூடியதுதான். மறுத்தல், முரண்படுதல், பங்கேற்காமை, விலகுதல், அடையாளம் துறத்தல் என்பவை அனைத்தும் ‘எதிர்ப்பு அரசியலின்‘ அறத்தந்திரங்கள் என்பது விரிவாக விளக்கத் தேவையற்ற நிஜங்கள். அப்படியெனில் பெண்ணியம் என்பது ஆண் விடுதலைக்கும், மாற்று அரசியலுக்கும் உரிய ‘உப அரசியல்’ பார்வை என்று பொருள்படுகிறது. இதுதான் ‘பெண்களை ஏமாற்றும் சூழ்ச்சி’. ஆம் பெண்ணியம் உண்மையில் ஆண் சுதந்திரத்தையும், ஆண் மைய மற்ற தளர்ந்த அடையாளத்தையுமே உருவாக்கித்தருகிறது. அதுவே புரட்சிகர அரசியல், விளிம்பு நிலை அரசியல் என மாற்று அறங்களை நோக்கிய கனவுகளைச் சாத்தியப்படுத்துகிறது. பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லது அடைபட்ட ஆண் தன்மையிலிருந்து யாருக்கும் விடுதலையில்லை. ஏனெனில் ‘ஆண்மை’ என்பது பெண்மையின் படைப்பு, ‘ஆண்நிலை’ ஆண் தன்மை, ஆண் அடையாளம் என்ற வன்முறைத் தொடர்ச்சி (இதனை வரமாக, பெருமையாகக் கொள்ளும் ஆண்கள் ஆதிசக்தியின் அருள்பெற்றவர்கள், அவர்கள் அவ்விதமே ஆகக்கடவது) தாய்மையால் உருவாக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு ‘பெண்மை’யால் வளர்த்தெடுக்கப்பட்டு விரிவுபடுத்தப்படுவது. அப்படியெனில் ‘பெண்மை’ அதுவும் பெண்மையால் தாய்மையால் வரையறுக்கப்பட்டு உருவகிக்கப்பட்டதே; அப்படியெனில், பெண்ணியம் ‘ஆண்மை’ என்பதை மட்டுமல்ல ‘பெண்மை’ என்பஆயும் அழித்தாக்கம் செய்யும் மிகச்சிக்கலான நிலையில் உள்ளது. அதனால்தான் இன்றைய ‘பெண்ணியம்’ பலவித வடிவங்களில் இயங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தகர்ப்பு, அழித்தாக்கம், முழு மறுபரிசீலனை, அரசழிப்புவாதம் என முனைப்பு கொண்ட தீவிர நிலைகளைப் பெண்ணியம் செயல்படவேண்டிய தேவை நேர்ந்திருக்கிறது.

பெண்ணியம் ஆண்மையைக் கட்டுடைக்கும்போது வரலாற்றில் ஆண்மை செலுத்தி வந்த அபத்தமான, அடக்குமுறையான பாத்திரம் தனது வடிவத்தை, இடத்தை இழந்து விடுகிறது. இதனை விடுதலை என்று ஏற்பதற்கு ஆண்மையம் மறுத்த ‘ஆண் அறம்’ ஒன்று தேவைப்படுகிறது. ‘நாம் எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து அடிமைகளாய் வளர்க்கப்பட்டோம் என்பதை மறுக்கின்றீர்களா? எனக் கேட்கும் பெரியாரின் குரலில், ஆண்மையம் மறுத்த ‘ஆண் அறம்’ வெளிப்படுவதை விடுதலைக் கருத்தியலின் பின் புலத்தில்தான் நாம் புரிந்துகொள்ள முடியும். ‘‘பெண்களின் அடிமைத் தன்மை பெண்கள் மாத்திரம் பாதிப்பதில்லை, அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை, ஆண்மையம் மறுத்த விடுதலைக் கருத்தியல் உடைய ‘சாதாரண ஆண்நிலை’ மறுத்த ஒரு புரிதலும் புலனும் உடையவராலேயே இதனைக் கூறமுடியும், இந்தக் கூற்று ‘அறிவொளி’த் தன்மை உடையது ‘அரசழிப்பு’த் தன்மை உடையது; ஏனெனில் அடிமைகள் அடிமைகளையே ‘காதலிக்கிறார்கள்’, அடிமைத்தனம் மறுத்தவர்கள் அடிமைப்படாதவர்களையே ‘காதலிக்கிறார்கள். இந்த அடிமைப்படுத்தல், அடிமைப்பட மறுத்தல் என்ற சமன்பாடு ‘அரசழிப்பு தன்மை உடையது, ‘அதீதி அறம்’ சார்ந்தது. ‘தனி மனிதர்’ என்பதை மூலக்கருவாகக்கொண்டது; இதனை இன்றைய பெண்ணியம் விரிவாக விவாதித்துக் கொண்டுள்ளது; பெண்மையை தகர்வாக்கம் செய்து கொண்டபடியே. அதனால்தான் பெண்ணியம் ‘ஆண்களுக்கு’ மட்டுமல்ல ‘பெண்களுக்கும்’ எதிரானதாக உள்ளது. ‘பெண்கள் விடுதலை பெறுவதற்கு ஆண்களைவிட பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள், (பெரியார் 1928) என்பது மேம்போக்ககான வெறுப்பு வாசகமல்ல, பெண்கள் முதலில் எந்த விடுதலைக் கருத்தியலையும் விட ‘பெண்ணியத்தையே’ முதலில் கேள்விக்குட்படுத்துவார்கள்; ஏனெனில் அது பெண், தாய்மை, அழகு, அன்பு, காதல், தியாகம் தெய்விகம் இன்னபிற பெரும்பேறுகளைக் கட்டுமானத் தகர்ப்பு செய்துவிடுகிறது. இந்தக் கட்டுமானங்களைத் தகர்த்து விட்டு ‘மாற்று அடையாளங்களை’, ‘அமைப்புக்கூறுகளை’ உருவாக்கும் செயல்பாடு மிகப்பெரும் வலி நிரம்பியது. இது நேரடியாக ஒரு ‘போர்க்கள’ச் சூழலை அழகியல், அறிவியல், அரசியல், கருத்தியல் தளங்களில் ஏற்படுத்திவிடக்கூடியது. எல்லா மாற்று, விடுதலைக் கருத்தியல்களுக்கும் இந்த ‘விதி’ ஒரு கட்டத்தில் நேர்ந்துவிடும். இந்த ‘போர்க்களச்சூழல்’ பட்டவர்த்தனமாக்கப்படவேண்டும், வெளிப்படையாகக்கப்படவேண்டும். குடும்பம் காதல், தாய்மை, தியாகம், பாசம், ஒழுக்கம், சமூக விதிகள் என்ற ஏதேதோ பெயர்களில் நிகழும் வன்முறைகளும் கொடூரங்களும் தமது ‘மூடிய தன்மையை இழந்து விடுவது ஒன்றே இந்த ‘போர்க்கள’ நிலையைப் பார்வைக்குக் கொண்டு வந்துவிடும். வன்முறையை, வன்கொடுமையை தேவகருணையாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் பாக்கியவான்களும் கூட; அமைதி அவர்கள் வசமே உறைகிறது. ஆனால் தொடர் போர் உத்திகளே மனித உறவுகளைத் திட்டமிட்டுத் தருகின்றன. இந்தத் திட்டமிடுதலில் ஆண்மையும்_ பெண்மையும் போராட்டம் மறந்து ஈடுபட்டு வருகின்றன. ஏனெனில் வரலாறும், சமூகமும், அரசியலும் ‘பெண் ஆண்’இணைகளால் உருவமைக்கப்பட்டவை, செயல்படுத்தப்படுபவை. பெண்ணியம் இந்த ‘இணையின்’ சமத்துவமற்ற தன்மையைத்தான் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. அதில் இரண்டொரு கேள்வி கள் மீதான கேள்விகளைச் சிறிது திருகித் திறக்கலாம்.

*******
மேல்நாள் நடந்த போரில் இவளுடைய தந்தை யானையை எதிர்த்து மாண்டான், நேற்று நடந்த போரில் இவள் கணவன் ஆநிரை கவர்ந்த பகைவரைத் தடுத்து மாண்டான், இன்றும் போர்ப்பறை கேட்டு விருப்பத்தொடு மயங்கி தன் ஒரே மகன் கையில் வேல் கொடுத்து வெண்ணிற ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய் தடவிச் சீவி போர்க்களம் நோக்கிச் செல்லெனத். தன் மகனை அனுப்பும் இவள் துணிவு அச்சம் தரக்கூடியது, இவள் சிந்தை கெடுவதாகுக, இவள் மூதில் மகளிராகும் தகுதிபெற்றவள்’’ ஒக்கூர் மாசாத்தியாரின் இப்பாடலின் நேரடிப் பொருள் எதுவான போதும், காலத்தின் வெவ்வேறு கட்டங்களில் தந்தை, கணவன், மகன் என அனைவரையும் போருக்குச் செலுத்தும் ‘மூத்த இல்லத் தலைமை கொண்ட பெண்மை’ பற்றி பதிவை உடையது. ஈன்று புறம்தருதலைத் தன் கடனாகவும் போரில் நின்று மடிதல் தன் மகன் கடனாகவும் நம்பும் மறத்தாய்மை பற்றியது. புராதனத் தாய்மை ‘ஆண்மை’ என்பதை வரையறுக்கும் சிக்கலான தாயும், பிற பெண்மையும் ஏற்பதில்லை என்பது வரலாற்று நாடகத்தின் கடினமான ‘அங்கம்’. இது ‘ஆண்மை’ பற்றிய கருத்துருவாக்கத்தின் மிக அடிப்படையான பகுதி.

*******

மேற்குலகின் கொடுங்கனவாக இருந்துவரும் ‘மெடியா’ என்ற தொன்மப் பாத்திரத்தை இங்கு பார்க்கலாம். யூரிபிடஸ் (கி.மு.431) எழுதிய நாடகத்தின் மூலம் தொடர்ந்து ‘பெண்நிலை’ பற்றிய கேள்விகளை எழுப்பும் பாத்திரம் இது. ஏடீஸ் என்ற கோல்சிஸ் மன்னனின் மகள் மெடியா. மெடியாவின் சகோதரன் அம்சிர்டஸ் ஜேசன் என்பவன் கோல்சிஸ் நாட்டில் உள்ள தங்கக் கம்பளத்தைக் கவர்ந்து செல்ல வருகிறான். அவன் அவ்வகையில் அந்நாட்டின் பகைவன். மெடியாவோ ஜேசன் மீது காமம் கொண்டு தன் தந்தைக்குத் துரோகம் செய்து, தன் சகோதரனையும் கொன்று அல்லது கொல்லப்படக் காரணமாகி ஜேசனுக்கு வெற்றி தேடித் தருகிறாள். ஜேசனுடன் சேர்ந்து வாழ்ந்து இரு மகன்களைப் பெறுகிறாள். ஜேசனோ கோரிந்த் நாட்டின் அரசனாகும் ஆசையில் கிரியோனின் மகளான இயோல்கஸ் என்பவளை மணக்கத் திட்டமிட்டு மெடியாவை நாட்டைவிட்டு வெளியேற கட்டளை பிறப்பிக்கிறான். வேற்று நாட்டைச் சேர்ந்த மெடியா வஞ்சனையின் வலியுடன் பழி வாங்க முயல்கிறாள். இயோல்கஸைத் தனது மந்திரத் தன்மையால் கொல்வதுடன் நில்லாது, ஜேசனின் மகன்களையும் தாய் என்ற நினைவு மறுத்துகொன்று தன் வஞ்சத்தைத் தீர்க்கிறாள்.

‘தாய் தன் பிள்ளைகொல்லுதல்’ என்ற உருவகத்தின் மூலம் ‘தந்தை உரிமையைத் தகர்க்கும் இந்நாடக விபரீதம், மேற்குலகின் அச்சமூட்டும் ‘மனச்சிக்கல்’ வகைமைகளில் ஒன்றாக இன்றுவரை அணுகப்பட்டு பல்வேறு பொருளுரைப் புகலுடன் தொடர்ந்து வருகிறது. மெடியா வஞ்சிக்கப்பட்ட பெண்மையின் குறியீடாக மட்டுமின்றி புராதன ‘பெண்மைச் சிக்கலின்’ குறியீடாகவும் அணுகப்படும் ஒரு பாத்திரம். நன்மை, தீமை எதிரிடைகள் குழம்பும் ஒரு மனவடிவம் இது. ஈராஸ் மற்றும் அப்ரோடைட் இணைந்து (இவர்கள் காமத்தின் மூலவடிவமும் மோகத்தின் உருவமுமான இணைகள்) மெடியாவைத் தூண்ட தன் தந்தை, நாடு சகோதரன், அனைவருக்கும் துரோகமிழைத்து, தன் துணையை வேற்று நாட்டு ஆணிடம் காண்கிறாள். இந்த முதல் துரோகத்திற்கும், ஜேசன் அவளுக்கு இழைக்கும் இரண்டாவது துரோகத்திற்கும் இடையில் உள்ளது நாடு, மண், அரசு என்ற களங்கள் அனைத்தையும் ஆணுக்காக இழக்கத் தயாரான மெடியாவின் ‘கொலைச் செயல்’ பல்வேறு வடிவங்களில் சிக்கலடையும் ஒன்று. மெடியாவின் தொன்மம் வெவ்வேறு வடிவ மாறுபாடுகளுடன் பேசப்பட்டாலும் ‘பெண்மை’யின் புராதனச் சிக்கலைப் பதிவு செய்துள்ள ஒன்று.

மூதிண் மகளிருக்கும் மெடியாவுக்கும் இடையில் நீலியும் கண்ணகியும் இன்னபிறரும் வரிசையாக வந்து நிற்கலாம். வஞ்சிக்கப்படுதல், வஞ்சித்தல் என்ற நாடகத்தின் நீட்சி வளையாபதி, குண்டலகேசிகளில் தொடரலாம். இந்தத் தொடர்ச்சி மண்ணாக, எல்லைகளாக, அரசாக, போராகத் தொடரலாம்; பெண்மை என்பது மையத்திலிருந்து விளிம்புக்கும் விளிம்பிலிருந்து மையத்திற்கும் இடையே அலைக்கழியவும் அலைக்கழிக்கவுமான வடிவம் கொள்ளலாம். இந்த அலைக் கழிப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இடையில் உள்ளது பெண்மை/ஆண்மை என்ற முரண் இணைவுகள்; ஒன்றை ஒன்று வரையறுத்துத் தொடரும் போர் உத்திகளின் விளையாட்டுகள்.

பெண்ணியம் இந்த வரையறுப்பின் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் நிலையில்தான் அனைத்து அறன்களையும் தலைகீழாக்கி, மறுபரிசீலனை செய்து, அழிப்பாக்கம் செய்து வேறொன்று பற்றிய வேறு பல பற்றிய பேச்சுக்களைத் திறந்து விடுகிறது.

பெண்மை என்பது தெய்விகம், இரக்கம், மென்மை, தயை, தாய்மை, பணிவு, ஆக்கம், கருணை, வன்முறைக்கு வெளியே உள்ளது, வரலாற்றிலும் அரசியலிலும் பங்களிக்காதது, முழுமையானது, வேட்கை தணிந்தது என்பன போன்ற’ ஆண்மை சூழ்ச்சி’ உத்திகளை மறுத்து ‘ஆண்மை’ என்பது போன்றே அனைத்துமாகக் கூடியது, அனைத்துமாக இருந்து வருவது, அனைத்திலும் பங்குடையது என்று கூறுவதன் மூலம் ‘புனைவுமறுப்பு’ நிலையை பெண்ணியம் அடைந்துவிடுகிறது.

இந்தப் பெண்ணியப் புரிதல் ஆண்மையின் அனைத்து மையத் தன்மைகளையும் குலைத்துவிடுவதன் மூலம் வரையறுப்பின் கொடுங்கோன்மையிலிருந்து பெண்மையை மட்டும் அல்ல ஆண்மையையும் விடுவித்திருக்கிறது; கருத்தியல் மற்றும் சொல்லாடல் தளத்தில் என்றாலும் இது எல்லாம் வல்ல பொது வழக்கின் முன்னே ஒரு புள்ளியாக நின்று இயங்கியபடி எல்லாவித ஒடுக்குமுறை, கொடுங்கோன்மை, நிர்ணய வாதங்களையும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். இது வரலாற்றின் முன்னொரு தொந்தரவூட்டும் கேள்வி இயந்திரம். இந்த வகைக் கேள்விகள் இல்லாமல் எந்தவகையான ‘அறங்களும்’ உருவாகவோ, உருமாறவோ முடியாது.

*******

பௌத்த பெண் துறவிகள் எழுதி, பலகாலம் வழக்கில் இருந்து வரும் ‘தேரி கதா’ என்ற தொகை நூலில் விடுதலை அடைவதற்கான தமது தேடல் பற்றியும், அத்தேடல்களுக்கு நேரும் இடையூறுகள் பற்றியும், அவற்றை அவர்கள் மீறிக் கடந்து உண்மையை உணர்ந்து ‘ஞானமடையும்’ நிலைபற்றியும் பிக்குணிகள் (பெண் புத்தர்கள் திபேத்திய தாந்திரிக பௌத்தத்தில் பெண், ஆண் என்ற இரு புத்தர்கள் உண்டு) விரிவாக குறியீட்டு வடிவில் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதில் ஒரு பிக்குணி தனது புலன்களும், ஆசைகளும் பலகாலம் தன்னை அலைக்கழிப்பது பற்றிக் குறிப்பிட்டு, ஒரு இரவு விளக்கின் முன் அமர்ந்து திரியையே கவனித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஞானத்தைக் கூறுகிறார்.

‘‘நான் அந்தச் சுடரையே/பார்த்துக் கொண்டிருந்தேன்/காற்றில் அதன் அலைக்கழிப்பு/சிறு குச்சியால் அதைக் கிண்டியபின்/திரியை எண்ணெய்க்குள்/அமிழ்த்தினேன்/விளக்கின் பெரு நிர்வாணம்!/ எனக்கு ஞானம் பிறந்தது/எனது இதயம் இப்போது/ விடுதலை அடைந்துவிட்டது.

எண்ணெய், திரி, சுடர், விளக்கு, ஒளி, இருள், சுடரை உயிர்ப்பிக்கும் எண்ணெயே சுடரை விழுங்குதல் வேட்கையின் அலைக்கழிப்பு, இருளின் உள்ளிருந்து புறப்படும் ஞானம். விடுதலையின் பாதை கடினமானது, அது இருள் ஒளி இரண்டிலுமாகத் தொடர்வது. விடுதலை பற்றிய கேள்வியோ வலியோ இல்லாதவர்கள் பாக்கியவான்கள்.

(நன்றி:தீராநதி)

20 comments:

-/பெயரிலி. said...

ம்ம்ம்ம்...
ஆண்-பெண் விவகாரங்கள் எல்லாவற்றையும் கறுப்பு வெளுப்பாக நீங்களும் பாலபாரதியும் பார்ப்பதை நிறுத்தும்வரைக்கும் நாட்டிலே சரியானது சரியானதாக நடக்குமென்று நம்பவில்லை.

சந்திரிகா காலத்திலே கோணேஸ்வரி, கிருஷாந்தி விவகாரங்கள் மூடி மறைக்கப்பட்டதுக்குக் காரணம்கூட நீங்களும் நானுமேதான் தெரியுமோ? :-(

கறுப்பி said...

டீஜே நல்ல ஒரு படைப்பு. என்ன செய்வது இது ஆண் அதிகார உலகம். எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகின்றது. சின்ன விடையங்களுக்குக் கூட போராட வேண்டிய நிலையில்தான் இன்றும் என்றும் பெண்கள் இருக்கப் போகின்றார்கள்.

-/பெயரிலி. said...

டிசே
சும்மா இப்பிடி வெட்டி ஒட்டுவதிலும்விட, ஏன் உம்மட சொந்தக்கருத்தை எழுதக்கூடாது? குறைஞ்சது, நீர் அப்பிடியே ரமேஷ்-பிரேம் எழுதினதை ஒத்துக்கொள்ளுறீரோ இல்லை, மாற்றாய் உமக்கும் ஏதும் கருத்து சொந்தமாய் இருக்கோ எண்டும் எழுதினாலே போதுமே! எடுத்ததையெல்லாம் பெண்களை அமுக்குறாங்கள் அமுக்கிறாங்கள் எண்டு கறுப்பு வெள்ளை படம் போட்டு ஓடுறது, பெண்கள் பேரிலை நாலைந்து வாழ்க கோஷம் உமக்கும் போடுறவைக்குப் பெண்ணியல்வாதிகள் எண்டும் பெயர் கிடைக்கும். (குறைஞ்சபட்சம், பெண்ணெண்டபடியால் அடிச்சுப்போட்டாங்கள் எண்டு ஆராச்சும் பின்னாலை ஒருநாளைக்கு பொய் மாய்மாலம் கொட்டேக்கையாச்சும் உம்மைக் காப்பாத்த உந்த ரெபரென்ஸ் உதவுமெண்டோ தம்பி :-)) நடைமுறையில, எல்லாம் கறுப்புவெள்ளையில்லை அப்பனே. வண்ணப்படம்.

(தோழி, கோழி மாய்மாலங்களை விட்டுவிட்டு எழுதினால், இன்னும் விசேசம் ;-))

சினேகிதி said...
This comment has been removed by the author.
-/பெயரிலி. said...

டிசே, ஏன் சிநேகிதி வேண்டாமெண்ட பிறகும் பப்ளிஸ் பண்ணினனீர்? உது சரியில்லை :-(
உதுக்குப் பிறகும் இணையத்துப்பெண்கள் மத்தியிலை நீர் பெண்ணியல்வாதி எண்டு உலாவமெண்டு நினைக்கிறீரோ? உம்மடை மதிப்பு என்னவாப் போச்செண்டு தெரியுமே?
ச்சுச்! ச்சுச்!! இனி இலங்கையில ஒரு பொடியர் மட்டுமேதான் மார்க்ஸிய பெண்ணியல்வாதியா மிஞ்சப்போறார் ;-)
உடன போய் சூடானிலை சாப்பிட வழியில்லாம செத்துப்போற ஆராச்சும் பொம்பிளையைப் பற்றி ஒரு தேடி கவிதை எடுத்துவிடும் (வீட்டில அம்மா சமைக்கிறாரோ அக்கா சமைக்கிறாவோ எண்டு கவலையில்லை). ஒரு மாதிரி பேரைச் சரிக்கட்டிப்போடலாம். [மறந்தும் பட்டினியில சாகிற மனிசியின்ரை புருசன் பட்டினியிலை செத்தானா? புல்லட்டில செத்தானா? எண்டு எல்லாம் எழுதாதையும். அவன் எப்பிடிச் செத்தால் என்ன? மனிசிக்கு மாடுபோல மிதிச்சான் எண்டு ரெண்டு சொல்லு போடும். அது கட்டாயமா உச்சத்தில கொண்டு வந்து பெண்ணியக்காவல்காரனென்ன, நாட்டாமையாகவே உம்மை நிப்பாட்டும்) குட் லக் ;-)

கறுப்பி said...

பெயரிலிக்கு என்ன கடந்தது இந்தக் காட்டுக்கத்தல் கத்துறார்:)-

-/பெயரிலி. said...

வாங்கோ வாங்கோ கறுப்பி
பெயரிலிக்கு ஒண்டும் நடக்கையில்லை; அதுதான் காட்டுக்கத்தல் போடுறார் ;-)
( அதுசரி காட்டானுக்கு நாட்டுக்கத்தல் போடுறது எப்படியெண்டு அறிஞ்சனியள் நீங்கள் ஒருக்கால் கட்டாயம் சொல்லித்தரோணும், கண்டியளோ? :-))

கறுப்பி said...

பெயரிலி நான் இப்ப முந்தி மாதிரி இல்லை. கொஞ்சம் மச்சுவேர்ட் ஆகீட்டன்

-/பெயரிலி. said...

கறுப்பி,
நானும் அப்பப்ப மச்சுவேட் ஆவன் ஆகாத நேரத்திலை காரியவிசரா மெச்ச வேர்ட்டு ஆயிடுவன்.
அப்பிடியே ஒரு கேள்வியும். எங்கையாச்சும் நல்ல ஆணித்தரமான சேர்ட்டிப்பிக்கற் குடுக்கிற பெண்ணியல்வாதியள் இருந்தால் ஒருக்கால் சொல்லுங்கோ. எனக்கும் ஒரு "இவர் ஒரு நல்ல வல்ல பெண்ணியல்வாதியின் நண்பர்" எண்டு ஒரு சேட்டிபிக்கற்று உடன தேவைப்படுகுது. சொல்லப்போனால், ரெண்டு மாசத்துக்கு முதல் கிடைச்சிருந்தால், எங்கட இரவுக்கழுகாரிட்ட குடுத்திருப்பன். மிஸ் பண்ணிப்போட்டன். இப்ப அதில்லாமயெல்லே கஷ்டமா இருக்கு. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் பாப்பன். பிறகும் ஒருத்தரும் தரயில்லையோ, நான் போய் ஹோமோன் ரீட்மெண்ட், ஸெக்ஸ் ஒப்பரேஷன் எல்லாம் எவ்வளவு சிலவானாலும் கிரெடிக்ட் கார்ட்டை வெள்ளத்தில ஓட விட்டுச் செய்துபோட்டு வந்து நான் போற வாறவைக்கெல்லாம் "இவர் நல்ல வல்ல பெண்ணியல்வாதி", "வல்ல வலைப்பெண்ணியல்வாதி", "வளமான பெண்ணியல்வாலித்தொண்டர்" இப்படியெல்லாம் குடுத்துப்போடுவன். இப்பவே சொல்லிப்போட்டன். முதலாவது எனக்கு நானே நல்ல வல்ல பெண்ணியவாதி சுப்பர் கிரேட் குடுத்துப்போடுவன். அடுத்தது, எங்கட இரவுக்கழுகாருக்கும் ஆணாதிக்கத்தால ஆண்டாண்டு காலமாய் வலையில பாதிக்கப்பட அவற்றை ஆக்களுக்குந்தான். பாவம் நல்லாக் கஷ்டப்படுத்தனானெல்லே.... கஷ்டப்படுத்தினதென்ன கஷ்டம் கழுத்தையுமெல்லே பிடிச்சுப் போவெண்டு தள்ளிப்போட்டன். உதுக்குப் போய் ஆணாதிக்கத்திராவிடத்தம்பிக்கழுகுகளை வைச்சு அடிக்கிறதோ, பெண்ணியம்? அதால நொந்துபோய் இரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா போலை கதறிக்கொண்டுகிடக்கிறன். உதைவிட்டால், உய்ய வேற வழியில்லை கண்டியளோ? இப்பிடி ஒவ்வொருத்தரும் பெண்ணியத்தை எங்கையெங்கை வளைச்சுத் தங்கள உய்விக்கிறமெண்டு இருக்கேக்கை, எனக்கு உத விட்டால், வேற வயி தெரியேல்லை கண்டியளோ? பெண்ணெண்டாத்தான் பெண்ணும் இரங்கும் ஆண் பிசாசுகளும் பேய்களும் திராவிடக்கழுகுகளும் இரங்குமெண்டு தெரிஞ்சுபோச்சு. உதுக்குப் பிறகும் பெண்ணியமும் மயிரும். சரியான பம்மாத்தெண்டுதான் நினைச்சன். ஆளுக்காள் அவரவற்றை விலாசம் தெரியுறத்துக்குத் தூக்கிப்பிடிக்கிறதுமாதிரித்தான் தெரிஞ்சுது. ஆனாலும், உதையே ஒப்பிரேஷன் பண்ணிப்போட்டு, நானும் உய்யச் சொல்லலாமெண்டால், ஏன் பாவிக்கக்கூடாது; சொல்லுங்கோ?

கறுப்பி said...

நீர் ஒரு புறோ ஆணியவாதி எண்டது எனக்குத் தெரியும். உமக்கு எந்த ஹோமோன் அடிச்சாலும் எப்படியான ஒப்பரேசன் செய்தாலும் பெண்ணியவாதியாக மாட்டீர். மிஸிஸ் பெயரிலிக்காக நாம் பிரார்திப்போமாக.

-/பெயரிலி. said...

கறுப்பி,
நன்றி. பெண்ணியல்வாதியா மாறி உங்கட பிழைப்பைக் கெடுக்க விரும்பயில்லை.
வீட்டில பூனை குறுக்காலபோனாலும் ஆணே காரணம் எண்டு சத்தியம் பண்ணும் உங்களோடு குந்தியிருக்கும் மிஸ்டரபிள் கறுப்பிக்கு என் அனுதாபம்

-/பெயரிலி. said...

டிசே
உங்கள் பதிவிலிருந்து கறுப்பி எழுதியதன் பின்னான என்னுடைய சில பின்னூட்டங்கள் விலகிப்போயிருப்பதாக உங்களுக்குத் தோன்றினால், அழித்துவிடுங்கள்.
நன்றி

கறுப்பி said...

உம்மட வீட்டு நிலமை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் என்ர வீட்டை பூனை குறுக்க போனால் அதுக்கு என்ர மனுசன்தான் காரணம்

இளங்கோ-டிசே said...

என்னய்யா இங்கே நடக்கிது?

மனுசர் சாப்பிடப்போய் ஓய்வெடுத்துக்கொண்டு VIBEஜ (Wife ஐ அல்ல) புரட்டிப்பார்ப்பதற்குள் ஒரு பெரும் பிரளயமே இங்கே நடந்தேறியிருக்கிறது.
......
பெயரிலி: ஏன் இந்த 'கொலைவெறி' :-)? நீங்கள் படம் பார் பாடம் படி என்றமாதிரி நானும் வெட்டி ஒட்டி காலத்தை வலைப்பதிவில் கடத்தாலாமென்டால் -அப்படி வெட்டி ஒட்டித்தான் FDற்கு நல்ல விடயம் நடந்தது; எனக்கும் அப்படி நடக்காதா ஒடாதா என்ற நப்பாசையில் என்பாட்டில் செய்துகொண்டிருந்தால் - இப்படி வளரவிருக்கிற ஒரு 'குருத்தை' மண்ணோடு மண்ணாய் கம்பளிப்பூச்சி மாதிரி நசுக்கித் தேய்க்கிறியளே நியாயமா, இது அடுக்குமா?? எல்லாம் வல்ல கோணமலையான் என்னை இரட்சிக்கட்டும்.

மற்றும்படி, கறுப்பி, பெயரிலி இரண்டு பேரும் back-to-for(u)mற்கு திரும்பிவிட்டினம் போல, எல்லாம் கோடை செய்யும் மாயம்;எமக்கும் கொண்டாட்டந்தான் :-).

................
சிநேகிதி, பின்னூட்ங்களை மட்டுறுத்தல் செய்வதை சில வாரங்களுக்கு முன் எடுத்திருதேன். அதனாலேயே உங்கள் பின்னூட்டம் பிரசுரமாயிற்று. உங்கள் விருப்பப்படி அதை அப்படியோ விடவோ அல்லது அழிக்கவோ செய்யுங்கள். தகவல் கிடைத்தது :-).

-/பெயரிலி. said...
This comment has been removed by the author.
-/பெயரிலி. said...

/பெயரிலி: ஏன் இந்த 'கொலைவெறி' :-)?/
விமர்சனமில்லாத எதுவும் - விடுதலைப்போராட்டம் என்றாலுஞ்சரி விடுதலைப்புலிகள் என்றாலுஞ் சரி, சக்கரவர்த்தியின் சகடையில சுத்துற கவிதையென்றாலுஞ்சரி - வாழைக்குருத்தைமட்டும் வளர்க்காது; காளான்களையும் குருத்தாக்கிக் காட்டிப்போடும். இது பெண்ணியம், சாதியம், தேசியம், மொழியியம், சாதாரண தண்ணிக்குட ஈயம் எல்லாத்துக்கும் பொருந்தும்.
தம்பி விமர்சனம் எவ்வளவு முக்கியமென்று ஓர் உதாரணம் பாரும்;
"அவன் ஐஞ்சு பெட்டையளோட ஒண்டாப் படுத்தான்" என்றால், பண்பாட்டுக்காவற்காரத்தனம் பழமை, புதுமை, மார்க்ஸு, அடம்ஸு, பூக்கோ எல்லாத்துக்குள்ளையிருந்தும் புடுங்கிக்கொண்டு வந்து உதைச்சுப்போடும்; ஆனால், உதையே, "நான் ஐந்து தோழிகளோடு கூட்டுக்கலவி செய்தேன்" என்று விட்டால், பின்நவீனத்துத்துப்பெம்மானாய் பெருமைத்துவப்படுத்தப்படுவார். சாருநிவேதிதாவும் சொன்னார்; அண்ணன் சுகனும் சொன்னார். உதுக்குப் பெருமானார் பூக்கோ துடக்கம் எல்லா தும்புத்தடிப்பெக்கோவரைக்கும் முண்டு குடுக்கலாம். உந்த விளையாட்டு எல்லா 'ஈய'த்துள்ளையும் இப்ப ஈயப்பட்டு, குருத்தெது காளானெது எண்டு தெரியாமற்போச்சு. என்ரை கண்ணை இராப்பொழுதெண்டாலும் கழுகார் திறந்தார்; கண்டீரோ? அவ்வளவுதான். நான் கொண்டது ஆண்கொலைவெறியெண்டால், அடியாள் கழுகாரை இல்லாதும் பொல்லாததும் பெண்ணியம் பேரிலே உசுப்பேத்தி ஏவிவிடுவது என்ன குலைவெறியோ? கடிவெறியோ?
சொந்தச்சில்லெடுப்புக்குப் பெண்ணியக்கண்ணாடி எதுக்கப்பனே? :(

சினேகிதி said...
This comment has been removed by the author.
Anonymous said...

இந்த இரட்டையர் சம்பந்தாசம்பந்தமில்லாமல் எதையாவது எழுதுவதும்.நீர் அதை எடுத்துப் போடுவதும்- எண்ட குருவாயுரப்பா- என்ன சோதனையிது. எஸ்.வி.ராஜதுரை இதே பாத்திரம்
(மெடியா) குறித்து விரிவாக, இவர்கள் போல் ஜல்லியடிக்காமல் எழுதியிருக்கிறார். அது எந்தத் தொகுப்பில் உள்ளது என்பதை நானறியேன், நீர் அறிந்து கொள்க. மற்றப்படி இந்தக் கட்டுரையில் சிறப்பாக எதுவுமில்லை, இரட்டையர்கள் தாங்களும் குழம்பி, பிறரையும் குழப்பத்தில் வல்லவர்கள் என்பதைத் தவிர. டி.சே- இதை நித்திரை அல்லது தீர்த்த யாத்திரை கலக்கத்துடன் இதைப் படிக்க வேண்டாம்,படிக்கும் போது பெயரிலியை நினைக்க வேண்டாம். நிதானமாக படித்துப் புரிந்து கொள்ளவும்.
அம்புட்டுத்தான், ஆளை விடுங்கடா சாமி, நான் போய் சமைக்கணும்.

Anonymous said...

பெண்ணியம் போற்றும் கண்ணியத்தலைவர் டிசே வாழ்க வாழ்க!
;-)

இளங்கோ-டிசே said...

ரமேஷ்-பிரேமின் இக்க்ட்டுரைக்கான பெயரிலியின் எதிர்வினைப்பதிவு:
http://wandererwaves.blogspot.com/2007/05/8.html