இவரும், வலைப்பதிவு எழுதும் லோஷனும் (http://loshan-loshan.blogspot.com) ஒருவரே என்று நினைக்கின்றேன். இவருடன் எவ்விதமான தொடர்புமில்லாததால் நண்பரொருவரின் -Facebook- மூலமாகவே இச்செய்தியை அறிந்தேன். லோஷனின் நண்பர்கள், தெரிந்தவர்கள் மேலும் இச்செய்தி குறித்து எழுதக்கூடும். ஏற்கனவே ஊடகவியலாளர்களான ஜசிதரன், வளர்மதி, திஸ்ஸநாயகம் போன்றவர்கள் இன்னமும் சிறைக்குள் இருப்பதை நாமனைவரும் அறிவோம்.
லோஷன் விரைவில் விடுதலையாவார் என்பதை நம்புவதை விட வேறு எதைத்தான் இந்தக்கணத்தில் நம்புவது?
(~டிசே)
...............
ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) கைது
தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) இன்று சனிக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது. இவரைக் கைதுசெய்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். லோஷன் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக வெற்றி எப்.எம். அறிவிப்பாளர் சந்திரமோகனும் (சந்துரு) அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாரால் கடுமையாக விசாரணை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
--
நன்றி: http://thambiluvilweb.blogspot.com/2008/11/blog-post_9962.html
Facebook: http://www.facebook.com/group.php?gid=25329430013
21 comments:
பதிவரும் அவரே, நிகழ்ச்சி தயாரிப்பாளரும் அவரே :(
அவர்தான்...:(
என்ன நடக்குது நாட்டில...
இருவரும் ஒருவர்தான். மிகவும் வருத்தத்தைத் தருகிறது.
இவர் இறுதியாக எழுதியுள்ள அரசியல் பதிவு இதற்குக் காரணமாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். :(
:(
இலங்கை அரசு தமிழ்மக்களை நன்றாகவே நடத்தும் புலிகளை மட்டுமே நான்குகாலிலே நடத்தும் என்று எங்களுக்கு வாக்கு தந்திருக்கிறது என்று பேரரசுகளும் அவர்களின் பேரர்களும் சொல்லும்வரை இதுவென்ன இதுக்குமேலேயும் நடக்கும்.
அவரே தான் :(
அவரே தான் DJ.
எம்மை விட ஒரு வயதுதான் மூத்தவர் என்ற வகையில் எனக்கு அவரிடம் நல்ல் பரிச்சயம் உள்ளது. நல்ல நிகழ்ச்சி தயாரிப்பாளர். சூரியனில் தொடங்கி வெற்றி FM வரையான அவரது வெற்றி பயணாத்தை தூர நின்று ரசித்தவன் நான். மிகுந்த மன அழுத்தத்தை என்மீது ஏவி விட்டு சென்ற நிகழ்வு இது. இப்படியான நிகழ்வுகள் நாளாந்த நிகழ்வாகிப்போன ஒரு சமுதாயத்தில் ஏன் பிறந்தோம் என்ற வெறுப்பே மேலொங்கி இருக்கின்றது
http://tamilweek.com/news-features/archives/1471
tamilmanam blogs should show support to him given that the sri lankan government hasn't charged him with any specific wrongdoing
வேதனையான செய்தி! மேலதிகத் தகவல்களைப் பரிமாறவும்.
தயவு செய்து லோஷன் அண்ணா விடுதலையாக பிரார்த்திப்போமாக. இப்படி பட்ட நிகழ்வுகளை தட்டி கேட்க முடியாதாத கையாலாதவனாக இருகிறோமே என்று கவலை படுகிறேன்.
தயவு செய்து லோஷன் அண்ணா விடுதலையாக பிரார்த்திப்போமாக. இப்படி பட்ட நிகழ்வுகளை தட்டி கேட்க முடியாதாத கையாலாதவனாக இருகிறோமே என்று கவலை படுகிறேன்.
வருத்தப்படுகிறேன்,
அன்பர் லோசன் விரைவில் விடுதலையடைந்து தன் குடும்பத்தினருடன்
இன்புற்றிருக்க இறைமையை இறைஞ்சுகிறேன்.
அன்புடன்,
கி.சதீசு குமார்
நண்பர் லோஷனைக் கைது சிங்களக் கொடுங்கோல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இந்த இழிசெயலைச் செய்ததன் மூலம் இலங்கை அரசு தமிழ் பதிவுலகுக்குத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளது. ஊடகங்களைக் கட்டுப் படுத்திவைத்திருக்கும் இலங்கை அரசு இன்னும் மற்ற தமிழரையெல்லாம் என்ன பாடு படுத்துகிறதோ? :(
ஊடகவியலாளர்களை சிறைப்பிடிப்பதும், சித்திரவதை செய்வதும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஒரு தேசத்திடம் எதையும் எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.
இந்த நாட்டின் அரசபயங்கரவாதம் எங்களை பூண்டோடு அழிக்க செயல்படுகிறது என்பது தெள்ளத் தெளிவான விசயம். இதில் நாம் என்ன எழுதி என்ன நடந்துவிடப் போகிறது? செவிடன் காதில் சங்கு ஊதினாற் போல்...
லோஷன் விரைவில் விடுதலையாக வேண்டும் என்ற பிராத்தனையை தவிர வேறு எதுவும் செய்ய இயலாத இயலாமையை நினைத்து மனம் புளுங்குகிறேன்... லோஷனை போல் இன்னும் எத்தனை சகோதர்களுக்காக இப்படியே மனம் புளுங்கி மண்ணோடு மண்ணாக உக்கிவிடுவது தான் தமிழினத்தின் விதியா?
லோஷன் கைது செய்யப்பட்டது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆம்... இலங்கை அரசு சொல்வதுபோல "யுத்தம் புலிகளின் மீதே ஏவப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் அதனால் பாதிக்கப்படவில்லை"
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பது அடிக்கடி உறுதிப்படுத்தப்படுகிறது. தான் நினைத்ததைப் பேசமுடியாத, கருத்துச் சுதந்திரம் இல்லாத நாட்டில்... ஜனநாயகமாவது மண்ணாங்கட்டியாவது...!
இந்த நேரம் எதை சொன்னாலும் ஏதோ ஒரு பக்கம் அதை நேர் எதிராக தான் கொள்வார்கள்.
என்ன செய்ய இலங்கையில் பிறந்த காரணத்திற்காக வலிந்து கையாலாகத ஒரு சமூகமாக இருக்க வேண்டியிருக்கிறதே!
ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளித்து திரு. லோஷன்
விரைவில் விடுதலை செய்யப்பட பிராதிதிப்போம்.
To Read a press release from Reporters Without Borders (RWB) regarding Loshan's Arrest:
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27501
மிகச்சிறந்த அறிவிப்பாளர். தேடல் கொண்ட ஒரு வானொலிக் கலைஞன். இதுதான் இப்போதுள்ள இலங்கை நிலவரம். இவற்றிற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். அதுவரை இப்படியான துன்பியல் நிகழ்வுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.
லோஷனின் கைது இலங்கை கைதுகள்,காணாமல் போதல்கள், கொலைகள் என்ற அரச பயங்கரவாத அடாவடித்தனத்தின் இன்னுமொரு கோர அத்தியாயம். எழுத்துகளை நசுக்க பத்திரிகையாளர். குரல்களை நசுக்க வானொலிப்படைப்பாளர்கள். இளையதம்பி தயானந்தா, நடராஜா குருபரன் வரிசையில் இப்போது லோஷன். ஒரு பேனைக்குப்பதில் ஆயிரம் பேனாக்கள். ஒரு குரலுக்கு பதில் பல்லாயிரம் குரல்கள் ஒலிக்கும். வெல்வோம். வாழ்வோம்.
http://irakasiyam.blogspot.com
:(
அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார்.
http://www.tamilwin.com/view.php?22OpDcc3nW24dC2h202HQM4d20jH0bP9E2e2ILL3b37GYe
just now i checked your post.. thanks for that ...
thatblogger site is mine...
Post a Comment