Thursday, February 05, 2009

பெப்ர‌வ‌ரி 04: இல‌ங்கைத் தூத‌ர‌க‌ம் முன்பாக‌...

ரொர‌ண்டோ (Feb 04, 2009 between 5.30-7.30 pm)






















நேற்று, இதேவேளை ஒட்டாவாவிலுள்ள‌ க‌ன‌டாப் பாராளும‌ன்ற‌ம் முன்னாலும் மாண‌வ‌ர்க‌ளால் மிக‌ப்பெரும் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து. இத‌ன் அழுத்த‌த்தால், க‌ன‌டாவிற்கான‌ வெளியுற‌வு அமைச்ச‌ர் ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார். இன்று House of Commonsல் Emergency Debateல் ஈழ‌நில‌வ‌ர‌ம் குறித்து ந‌ட‌ந்த‌ விவாத‌த்தை இங்கே வாசிக்க‌லாம். சில‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ர், புதிய‌ ஜ‌ன‌நாய‌கக் க‌ட்சி (NDP) விடுத்த‌ அறிக்கையை ஏற்க‌ன‌வே இங்கே ப‌திவிலிட்டுள்ளேன்.

-----------------------------

த‌னிப்ப‌ட்ட‌ ஒருவ‌னின் குறிப்புக‌ள்
க‌னடாவில் வ‌ந்திற‌ங்கிய‌ ப‌தின்ம‌வ‌ய‌தில் நான் முத‌லாவ‌தாய்க் க‌ல‌ந்துகொண்ட‌ ‍-90க‌ளின் இறுதியில்- அரசிய‌ல் போராட்ட‌ம் என்ப‌தும் ஒரு பெப்ர‌வ‌ரி நான்காம் திக‌தியாகும். நேத‌ன் பிலிப்ஸ் என்ற‌ ரொர‌ண்டோவின் ந‌க‌ர‌ச‌பையிருக்கும் இட‌த்திலிருந்து ஆர்ப்ப்பாட்ட‌ப் பேர‌ணி தொட‌ங்கி, ஒன்ராரியோ மாகாண‌த்தின் அர‌சிருக்கும் Queens Park ற்குப் போய்ச் சேர்ந்திருந்தோம். Queens Park முன்ற‌லில் நின்றுகொண்டு 'இது எம‌க்கான‌ சுத‌ந்திர‌ தின‌ம் அல்ல‌' என்று க‌த்திய‌தும்.., நிக‌ழ்வின் ந‌டுவில் தொலைதூர‌த்திலிருந்து ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்டு நிக‌ழ்வையின்னும் உச்ச‌த்திற்குக் கொண்டுபோன‌போது, வ‌ளாக‌ம் சென்று ஈழ‌த்திலுள்ள‌ ம‌க்க‌ளுக்காய் நிறைய‌ச் சாதிக்க‌லாம் என்று க‌ன‌வு க‌ண்ட‌தும் நினைவிலுண்டு.

ஜ‌ன‌வ‌ரி பெப்ர‌வ‌ரி மாத‌ங்க‌ளே இங்கே மிக‌க்குளிருள்ள‌ மாத‌ங்க‌ள் என்ப‌தால் (நேற்றும் -20C ஜ‌த்தொட்டிருந்த‌து) அன்று சுக‌வீன‌ங்கார‌ண‌மாய் மூன்றோ நான்கு நாட்க‌ள் பாட‌சாலை போகாதிருந்த‌து நினைவிலிருக்கிற‌து. நேற்றுக் க‌ல‌ந்துகொண்ட‌தும் ஒரு பெப்ர‌வ‌ரி நான்கிற்கு.

கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு த‌சாப்த‌கால‌த்திற்கு மேலான‌ கால‌த்தில் எத்த‌னைவித‌மான‌ ந்ம்பிக்கைக‌ள், ஏமாற்ற‌ங்க‌ள், ச‌லிப்புக்க‌ள், முத்திரை குத்த‌ல்க‌ள். இனி -தனிப்ப‌ட்ட‌வ‌ளவில்- ச‌ந்திப்ப‌த‌ற்கு எதுவுமிருக்கா என்று தெரியவில்லை. ப‌தின்ம‌னாய் இருக்கும்போது இருந்த‌ அர‌சிய‌ல் நிலைப்பாட்டுக்கும் இப்போது இருப‌த‌ற்கும் நிறைய‌வே வேறுபாடுக‌ள் உண்டு. யாரெல்லாம் ந‌ம்மைப் பாவித்தார்க‌ள், யாரெல்லாம் ந‌ம்மைக் கேலி செய்கின்றார்க‌ள்,யாரெல்லாம் ந‌ம்மை வைத்து த‌ம‌க்கான‌ ஆட்ட‌ங்க‌ளை ஆடுகின்றார்க‌ள் என்ப‌தைப் ப‌ற்றி யோசிக்க‌வும், விள‌ங்கிக்கொள்வ‌த‌ற்குமான‌ ப‌க்குவ‌ம் ஒர‌ள‌வு வ‌ந்துவிட்ட‌தென‌வே நினைக்கின்றேன்.

இவ்வாறான‌ ம‌க்க‌ளுக்கான‌ போராட்ட‌ங்க‌ள், யாரோ ஒரு க‌விஞ‌ர் சொன்ன‌துபோன‌, 'ப‌ள்ள‌த்தாக்கில் எறிய‌ப்ப‌ட்ட‌ பூவைப் போல‌ ச‌ப்த‌மின்றிக் கரைந்துக்கொண்டிருக்கின்ற‌ன' என்ற‌ புரித‌ல் இருந்தாலும், இதுவே புல‌ம்பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌னின் ஆக‌வும் க‌டைசி ந‌ம்பிக்கையாய் இருக்கிற‌து. ஏதோவொரு அரோப்பிய‌ ச‌ஞ்சிகையில் யாரோவொருவ‌ர், பாரிசில்(?) 'மேதின‌க்கூட்ட‌த்தில் க‌ல‌ந்துகொள்வ‌தைவிட‌ அன்றைய‌ நாளில் ஒரு எம்ஜிஆர் ப‌ட‌த்தைப் பார்த்துக்கொண்டிருப்ப‌தே த‌ன‌க்கு உவ‌ப்பான‌து' என்று சொல்கின்ற‌ 'நிலைமை' இன்னுமென‌க்கு வ‌ந்துவிட‌வில்லை. என‌தெல்லாப் ப‌ல‌வீன‌ங்க‌ளோடும், எம் மீது எல்லோராலும் திணிக்க‌ப்ப‌ட்ட‌ அவ‌ந‌ம்பிக்கைக‌ளோடும், நாம் க‌ல‌ந்துகொள்ளும் ஒவ்வொரு நிக‌ழ்வுக‌ளும் ஈழ‌த்தில் போர்ச்சூழ‌லில் வாழ்கின்ற‌ ம‌க்க‌ளின் சாவை இன்னும் ஒருநாளாவ‌து த‌ள்ளிவைக்க‌லாம் என்ற‌ சிறுதுளி ந‌ம்பிக்கை ம‌ட்டுமே என் வ‌ச‌ம் இக்க‌ண‌த்தில் உண்டு.

1 comment:

Anonymous said...

Good. Even I think of your last lines when I write letters to these MPs.

History has taught us that only with protests and unity among public, has any liberties been won. It is unfortunate, that this era does not have the uncensored and unbiased(at least for some part) medias. That we don't have the courageous men who were willing to report the truth.

-kajan