Saturday, July 25, 2009
ஒரு மாலையில் ஜாஸ் இசையுடன்
StreetFest is a Beaches International Jazz Festival original event showcasing the finest in Big Band, Swing, Dixieland, Smooth, Post-Bop, Afro-Cuban, Fusion, Funk, R&B and Soul sounds that Canada has to offer. Upwards of 50 bands entertain you along a closed 2 km stretch of Queen Street East! It's an annual 3-afternoon into evening pilgrammage for close to a million folks who come out to groove to the music and soak in the ambience
She said (2 me), We Will Rock You.
மேலுள்ள தகவல்: www.beachesjazz.com
Monday, July 13, 2009
வாசிக்கவேண்டிய சில கட்டுரைகள் மற்றும் மேலதிகக் குறிப்புகள்
வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாங்களுக்கு ஒரு பத்திரிகையாளராக சென்ற நண்பன் சஜீதரனின் கட்டுரை, எவ்வாறு மெனிக் பாமில், அகதிகள் வலயங்களாகப் பிரிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும், எவ்வாறான சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் விபரிக்கின்றது. வலயம் பூச்சியமெனக் குறிக்கப்படும், கதிர்காமர் இடைத்தங்கல் முகாமே ஒரளவு அடிப்படை வசதியுடையதாக இருக்கின்றது. அதனுள்ளே இயங்கத்தொடங்கியிருக்கும் பாடசாலை,வங்கி, தபாற்கந்தோர் என்பவற்றைப் பார்க்கும்போது, இம்முகாமிலே உள்ள மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களிலே மீளக்குடியமர்த்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லைப் போலத்தான் தெரிகிறது. வலயம் 4 எனப்படும் மெனிக் பாமிலுள்ள அகதிமுகாமில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வந்த மக்கள் எந்தவகையான அடிப்படை வசதிகளுமில்லாது இருப்பதை மிகச் சொற்ப நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பொழுதில் கண்டறிந்து சஜிதரன் எழுதியிருக்கின்றார். இவர்கள் இறுதி யுத்தம்வரை இருந்ததனால், மிகப்பெரும் உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்பதை வார்த்தைகளில் கூறத்தேவையில்லை.
கூடவே ஒரு உபரிக்குறிப்பாய், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இடைத்தங்கல் முகாங்களிலுள்ள மக்களுக்குச் சொன்ன செய்தியையும் சேர்த்து வாசிக்கவேண்டும். இனி முல்லைத்தீவு மாவட்டம் உயர்பாதுகாப்பு வலயமாக ஆக்கப்படும். அங்கே பூர்வீகமாய் வசித்த மக்கள் இனி அங்கே மீளக்குடியமர்த்தப்படமாட்டார்கள் என்பது. இத்தோடு, நாகார்ஜூனன் தமிழாக்கிய அகம்பென்னின் 'முகாம் என்பது யாது?' கட்டுரையையும் சேர்த்து வாசித்தால், இடைத்தங்கல் முகாங்களிலுள்ள மக்களின் எதிர்காலம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கப்போவதில்லை என்பது உறுதி.
அண்மையில், சில கனடியர்கள் இடைத்தங்கல் முகாமிலிருக்கின்றார்கள் என்பதை கனேடிய அரசாஙகமும் உறுதி செய்துள்ளது. அங்கே தங்கவைக்கப்பட்டுள்ள கனடிய பிரஜாவுரிமையுள்ள ஓர் இளைஞர், 'இங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியமாய்த் தேவைப்படுவது கவுன்சிலிங்' என்று குறிப்பிட்டதும், இம்முகாங்களுக்கு சென்ற ஒரு கனடிய பாராளுமன்ற உறுப்பினர், இடைத்தங்கல் முகாங்களில் நல்ல வசதியுடன் இருப்பவை, வசதி அற்று இருப்பவை என்ற கருத்துக்களுக்கு இடமில்லை. இடைத்தங்கல் முகாங்கள் என்பதே அடிப்படையில் மிகவும் கோரமானவை என்றும் கூறியிருக்கின்றார்.
சஜீதரனின் லக்பிமநியூஸில் வந்த கட்டுரையை இங்கே வாசிக்கலாம்...
......
வளர்மதி, ஈழப் பிரச்சினை குறித்து எழுதத் தொடங்கியிருக்கின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரோ எவரினதோ முகமூடிகள் கழன்று விழுந்தபடியே இருக்கின்றன. வளர்மதி தனிப்பட்ட காழ்ப்புணர்வின்றி ஆதாரங்களுடன் தனது இக்கட்டுரையைத் தொடர்வாரென நம்புகின்றேன். பொதுவெளிக்கு வந்தால் யாரும் விமர்சனங்களில் இருந்து தப்பமுடியாது. முக்கியமாய் தாங்கள் தனித்துவமானவர்கள், மாற்றானவர்கள் என்று கலகம் செய்வதான பாவனையில் முட்டாள்தங்களை நோக்கிப் பயணித்துக்கொள்பவர்களை, அவர்களைத் தட்டி எழுப்பவாவது எதிர்வினைகள் அவசியமாகின்றன.
வளர்மதி குறிப்பிடுவதைப் போன்று, இனி சிறுபான்மையினர் என்ற பெயரே அகராதியில் இருக்கக்கூடாது என்கின்ற ராஜபக்சவிடம், மலையகத்தமிழர், முஸ்லிம் மக்கள், தலித் மக்கள் என்ற சிறுபான்மையினரின் குரல்களைச் செவிமடுக்கவேண்டுமென அகிலன் கதிர்காமர் போன்றவர்கள் கூறிக்கொண்டிருப்பதைக் கேட்கும்போது எங்களுக்கு ஏற்கனவே காதில் பூச்சுற்றியாகிவிட்டது என்றுதான் வேண்டியிருக்கிறது.. அண்மையில் புலிகள் அல்லாத வேறொரு இயக்க நண்பர் தங்கள் நிகழ்வொன்றுக்கு வரச்சொல்லியிருந்தார். போயிருந்தபோது அங்கே ஒருவர் கூறியதுதான் வளர்மதியின் கட்டுரையை வாசிக்கும்போது நினைவுக்கு வந்தது.... 'இனி என்ன சொன்னாலும், வெள்ளாளன் எங்கள் தலையில் குதிரை ஓட்டப் போகின்றான், பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்'.
கவனிக்க, இவ்வாறு கூறியவர் ஒரு பழம்பெரும் மார்க்சியவாதி
வளர்மதியின் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்...
....
அநாமதேயன், யாழ்ப்பாணச் சூழலில் இருந்து தனது குறிப்புக்களை மீண்டும் காலச்சுவடில் எழுதியிருக்கின்றார். இறுதி யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில்போது, வெள்ளவத்தையில் நிகழ்ந்ததாய்க் கூறப்படுவதாய்க் குறிப்பிடும் சம்பவங்கள் நானறியாதன. சிலவேளைகளில் பெருப்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நடந்திருக்கூடிய சூழல்தான் என்பதையும் மறுக்கமுடியாது. இந்த வெற்றிக்கொண்டாட்டத்தின்போது, சிங்கள் மக்கள் சிலர் கூறிய கருத்துக்களாய் அவர் குறிப்பிடுவதுதான் அச்சமூட்டக்கூடியவை.
அதேசமயம், யாழ்ப்பாணத்திலுள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் சந்தித்த புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒருவர் கூறிய வாக்குமூலமும் முக்கியமானது. அந்தக் குரல்களையும் செவிமடுக்காது, நாம் நாடு கடந்த அரசு குறித்தோ வேறு எந்த விடயமோ கதைப்பதுகூட பம்மாத்தாய்தான் போய்முடியும்.
அநாமதேயனின் கட்டுரைக்கு...
.....
யமுனா ராஜேந்திரனின் ஈழம் தொடர்பான அண்மைக்காலத்தைய கட்டுரைகள் நீண்ட உரையாடலுக்கான களங்களைத் திறப்பவை. இனி ஆயுதப்போராட்டத்தின் முடிவின் பிறகான காலகட்டத்தில் எப்படி நகர்வது என்பதையும், ஈழத்தமிழர்கள் தங்களை எப்படித் தகவமைத்துக் கொள்வது என்பது பற்றியும் -உலக வரலாற்றைச் சரியாக விளங்கிக்கொள்ளாது- எதையும் செய்துவிடமுடியாது. யமுனாவின் முன்பு எழுதிய ஒருகட்டுரைக்கு நீண்ட பின்னூட்டம் எழுதிவிட்டு நிறைவில்லாத நினைப்பில் அதை அனுப்பாது விட்டிருந்தேன். புலிகளின் ஆயுதப்போராட்டதின் தோல்விக்கு 9/11 முக்கிய காரணம் போல, பின்-காலனித்துவக் காரணிகளும் கண்ணுக்கு வகையில் இருந்து செயற்பட்டிருந்தை முக்கியப்படுத்தவேண்டுமெனத்தான் -அந்த அனுப்பாத பின்னூட்டத்தில்- எழுதியிருந்ததாய் நினைவு.
இப்போது உயிரோசையில் யமுனா எழுதியுள்ள இந்தக் கட்டுரையும் முக்கியமான ஒரு கட்டுரையே...

Tuesday, July 07, 2009
மனதிற்கு நெருக்கமான சில பாடல்கள்
Eminem-Black Eyed Peas-Melissa-Akon
அண்மையில் வெளிவந்த இறுவட்டுக்களில் எமினெமின் Relapse ஐயும், Black Eyed Peasன் The E.N.D (Engery Never Dies) வந்த அன்றைய தினங்களிலேயே வாங்கியிருந்தேன்.
எமினெமின் இறுவட்டு வெளிவரமுன்னரே We Made You என்ற பாட்டு வீடியோவாகவும் வெளிவந்திருந்தது. அது வழமையான புகழ்பெற்றவர்களை நக்கலடித்துப் பாடுகின்ற பாடல். எமினெமின் பாடல்கள் கிட்டத்தட்ட ஏ.ஆர்.ஆரின் பாடல்களைக் கேட்பதைப் போன்றது. அதாவது மொந்தையில் வைத்த கள் ஊற ஊறத்தான் அதிகம் வெறிக்கச் செய்கின்றமாதிரி, தொடர்ச்சியாக பல முறைக் கேட்டால்தான் மனதுக்கு அதிக நெருக்கமாகும். முதலாவது தடவையாக இசை கேட்டலில் எமினெமோ, ஏ.ஆர்.ஆரோ சாதாரணமாய்த்தான் தெரிவார்கள்.
எமினெமின் இந்த பாடற்தொகுப்பு கிட்டத்தட்ட ஜந்து வருடங்களுக்குப் பிறகு வெளிவந்திருக்கின்றது. அதுவும் இனி எமினெமின் மீள்வருகை சாத்தியமில்லை என்று எல்லோரும் எதிர்வுகூறியபோது எமினெம் தனது தனது ஆறாவது இசைத்தொகுப்பான Relapse மூலம் வெளியே வந்தது ஆச்சரியமான ஒரு நிகழ்வே.
இந்த அய்ந்து வருடங்களில் ஒருமுறை அதிக போதை மருந்துகளை எடுத்து கிட்டத்தட்ட சுயநினைவில்லாது கிடந்து மரணத்தை நெருங்கியிருக்கின்றார் எமினெம். அத்தோடு போதையடிமையிலிருந்து வெளிவருவதற்காய், போதைமருந்து மறுவாழ்வு நிலையத்திற்கு சிகிச்சைக்காய் சென்று இடைநடுவில் கைவிட்டு வந்துமிருக்கின்றார். தான் போதை மருந்துக்கு அடிமையாவதிலிருந்து தப்புவதற்கு ஒரேவழி இசைக்குள் நுழைவதுதான் என்கின்றார் எமினெம், அண்மையில் வந்த நேர்காணல் ஒன்றில். இப்பாடற்தொகுப்பு முழுதும் போதை மருந்துக்கு அடிமையாவது குறித்தும், அதன் இருண்ட பக்கங்கள் குறித்தும், தனக்குள் கேட்கும் பல குரல்கள் பற்றியும்தான் எமினெம் அதிகம் பாடுகின்றார். அதுவும் Relapseல், அவ்வப்போது சில நிமிடங்களே வரும் உரையாடல்களினால் எமினெம் தன்னைத்தானே நக்கலடிக்கும் பகுதிகள் கவனிக்கத்தக்கவை. தன்னையே எள்ளல் செய்யமுடியும் ஒருவனால், பிறரை எந்தத் தாட்சண்யமுமில்லாது நக்கலடிக்க முடியும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
Jessica Simpsons, Amy Whinehouse, Britney Spears, Hilary Duff, Jessica Alba போன்ற அநேக celebraties நக்கலடிக்கப்படுகின்றார்கள்.
வழமை போலவே ஓரினச் சேர்க்கையாளர்களையும் Lindsy Lohanஐ முன்வைத்து நக்கலடிக்கவும் செய்கின்றார். தானொரு விளிம்புநிலை மனிதன் என்பதை (white america) உட்பட பல்வேறு பாடல்களில் உணர்த்தச் செய்கின்ற எமினெம் தொடர்ச்சியாக விளிம்புநிலை மனிதர்களாக இருக்கும் ஒரினச்சேர்க்கையாளர்களை அதிகம் நக்கலடிப்பதை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் விளங்கவில்லை.
ஆனால் எனக்கு We made you பாடலை விட Beautiful என்ற பாடலே அதிகம் பிடித்திருந்தது. தனிமையையும்,அதன் நிமித்தம் எழுகின்ற மன அழுத்தத்தையும் அதிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையையும் கூறுகின்ற அழகான ஒரு பாடல்
(Warning: Some Scenes & Language are inappropriate for Children)
Lately I’ve been hard to reach
I’ve been too long on my own
Everyone has a private world
Where they can be alone
Are you calling me, are you trying to get through
Are you reaching out for me, and I’m reaching out for you
Black Eyed Peasன், Boom Boom Pow பாடல்தான் அதிகம் புகழ் பெற்றது. சென்ற வாரத்தில் ரொறொண்டோவில் நடந்த Much Music விருது விழாவில் கூட Black Eyed Peas இப்பாடலைத்தான் பாடியிருந்தார்கள். அணணாவின் மகன் கீர்த்தியும் (9 வயது) தங்கள் பாடசாலை இசை வகுப்பில், இந்தப்பாடலைத்தான் தங்கள் ஆசிரியர் போட்டு, தங்களைப் பாடவும் ஆடவும் செய்வார் என்றான். அவனின் நேயர் விரும்பத்தின்பேரில் இறுவட்டு வாங்கிய ஆரம்பநாட்களில் அந்தப் பாடலை மட்டும் அதிகம் திருப்பி திருப்பி இசைத்து, வீட்டில் எமதெல்லோரின் வாயிலும் பூம் பூம் என்ற வார்த்தை மிதந்து கொண்டிருந்தது. ஆனால்
எனக்கு வீடியோவாய்ப் பார்க்கும்போது இந்த இறுவட்டிலிருந்த இன்னொரு பாடல்தான் அதிகம் பிடித்துக்கொண்டது.
ஓர் இரவை இந்தப் பாடலை விட வெறெப்படிப் பெரிதாகக் கொண்டாடிவிட முடியும்? பின்னிரவுகளை வீதிகளிலும், கிளப்புகளிலும் கழித்தவர்க்கு இந்தப் பாடல் நிச்சயம் நெருக்கம் கொள்ளவே செய்யும்.
I've gotta feeling
தொடர்ச்சியாக சில மாதங்களாய் ஈழத்திலும் இங்கும் ஏற்பட்ட நிகழ்வுகளால் வந்த ஒருவித மன அழுத்தத்தால் இசை கேட்பதே விரும்பமில்லாது போய்க்கொண்டேயிருந்தது. எனினும் எதையாவது கேட்காவிட்டால் அழுத்தம் கழுத்தை நெரித்துவிடுமோ என்ற பயத்தில், பாடல் வரிகள் விளங்காது ஆனால் இசை ஓடிக்கொண்டிருக்கும் எதையாவது கேட்கவேண்டும் என்று தேடியபோது...லத்தீன் பாடல்களையும், அரேபியப் பாடல்களையும் கேட்கத்தொடங்கியிருந்தேன். இந்தக் காலகட்டத்தில் லத்தீன் பாடல்களைவிட அரேபிய பாடல்களில் உள்ளொளிந்து தெரிந்த விபரிக்கமுடியாத சோகமும் தாபமும் என்னோடு அதிகம் நெருக்கம் கொண்டன. தொடர்ச்சியாக சில நாட்கள் இணையதிலிருக்கும் வானொலிகளால் அரேபியப் பாடல்களைக் கேட்க முடிந்திருந்தது (முக்கியமாய் Live365 ). அப்படிக் கேட்கத்தொடங்கியபோது ஒரு சில பாடகர்களின் குரல்கள அந்தமாதிரிப் பிடித்துப்போனது. சாரு ஏற்கனவே அறிமுகப்படுத்திய நான்சி அஜ்ரத்தைப் போல, மெஸிசா என்றொரு பாடகியின் குரல் உண்மையில் மயக்கவே செய்தது. அதன்பின்னர் மெஸிசாவுடன் எனக்குப் பிடித்த இன்னொரு பாடகரான Akon அவருடன் சேர்ந்து பாடியிருந்தமையை அறிந்தபோது ....இன்னும் வியப்பாயிருந்தது.
இவர்கள் இருவரும் பாடிய இந்தப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்...குரல்கள் மனதை உருக்கிறதா இல்லையா
Yalli Nassini
இதைவிட மெலிஸா தனியே பாடிய இந்தப் பாடலையும்...இந்த இணைப்பை நண்பரொருவருக்கு செக்ஸியான குரல் கேட்டுப் பாருங்களென அனுப்பியபோது, 'மெலிஸாவின் குரலை மட்டுந்தானா செக்ஸி?' என்கிறாய் என்று கேட்டிருந்தார் அவர். இப்போது யோசித்தால் ம்... 'குரல் மட்டுமில்லை' என்றுதான் சொல்லதான் மனம் அவாவுகிறது.
Kam Sana
Sunday, July 05, 2009
Friday, July 03, 2009
இன்னும் எலும்புகள் - சுகுமாரன்
எனது கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்.
மரணத்தால் விறைத்திருக்கிறது என் வீடு
நான் உனக்குத் தரும் சொற்களில்
மிருகங்களின் கோரைப் பற்கள் முளைத்திருக்கலாம்
உன்னுடன் பகிர்ந்து கொள்ளும் சிகரெட்டில்
விஷத்தின் துகள்கள் இருக்கலாம்
உன்னுடைய தட்டில் பரிமாறும் உணவில்
சகோதரர்களின் மாமிசம் கலந்திருக்கலாம்
உனக்குத் தயாரிக்கும் தேநீரில்
கண்ணீரின் உப்பு கரைந்திருக்கலாம்
இந்த நாட்கள்
காக்கிநிறப் பேய்களால் நிர்வகிக்கப்படுகின்றன
இன்று
பூககளும் பறவைகளும் குழந்தைகளின் புன்னகைகளும்
பெண்களும் எரிந்து போயினர்
உறுப்புக்கள் வெட்டப்பட்டவர்களின் குரல்கள்
வெளிகளில் தடுமாறுகின்றன
பிணங்களின் நடுவில் நொறுங்கும்
புத்தனின் மண்டையோட்டிலிருந்து கழுகுகள் அலறுகின்றன
கடவுள் மொழி இனம் என்று
துருப்பிடித்த தகரத்தால்
உன் தொண்டையை அறுப்பது சுலபம் - இன்று
மனிதனாக இருப்பது குற்றம்
பூமி எலும்புக் கூடுகளின் தாழ்வாரம்
(எலும்புகள் இன்னும் குவிகின்றன)
காற்று வெடிமருந்துப் புகைகளின் கிடங்கு
(புகைகள் இன்னும் அடர்கின்றன)
மணலில் பதியும் ஒவ்வொரு சுவடிலும்
ரத்தமும் சீழும் படிகின்றன
சிலந்திகள் பின்னிய வலையில்
சரித்திரத்தின் ஆந்தைக்கண்கள் வெறுமையாய் உறையும்
துயரங்கள் விடிவின்றி நீளும்
கறை - நம் எல்லோர் கைகளிலும்
எனது கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்
இன்று
மனிதனாக இருப்பதே குற்றம்.
ஜூலை-83
நன்றி: கோடைகாலக் குறிப்புகள் (அகரம் பதிப்பகம்)

Subscribe to:
Posts (Atom)