Thursday, February 12, 2009

கதையல்ல உண்மை நிகழ்வு…

செய்தி எனக்கு நேரடியாகக் கிட்டியது. நம்பகத்தன்மை… இதுவரைக்கும் சிறிலங்கா அரசின் செய்திகள் சொல்லப்பட்டபோது இருந்ததைவிட பலமடங்கு அதிகம்.

ஒரு குடும்பம். வன்னியில் தற்போதைய தொடர் இடப்பெயர்வில் சென்று பாதுகாப்பு (கொலை) வலயத்தில் சிக்கியவர்கள். அப்பா, அம்மாவுடன் ஒரே யொரு இளம் பெண் மட்டும் கடும்பத்தில் எஞ்சியிருந்த நிலை.

சிறிலங்காவின் செல் தாக்குதலில் இளம் பெண் காயப்பட்டார். அவரை அவசர சிகிச்சைக்காக வெளியே வவுனியாவிற்குக் கொண்டு போகவேண்டிய நிலை. அவருடன் யாரும் வண்டியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மகளின் உயிர் பிழைக்க தாயாரும் தந்தையும் தனியே அவரை செஞ்சிலுவைச்சங்க வண்டியில் அனுப்பினர்.

பல நாட்களின் பின்னான தொடர்ந்த முயற்சியில் வவுனியாவில் இருந்து கிடைத்த தொடர்பில் தூரத்து உறவினர்கள் அந்தப் பெண்ணைப் பார்வையிட மருத்துவ மனைக்கு சாப்பாடு கொண்டு சென்றனர்.

அந்தப் பெண் பிள்ளை இவர்களுடன் கதைக்கவுமில்லை. சுரணையற்றவர்போல் மலங்க மலங்க வெறித்து பாரத்தபடி எதுவும் பேசாமல் மிரண்டுபோய் இருக்கிறார்.

அவர் சிறிலங்கா ராணுவத்தினரின் தொடர் பாலியல் வல்லுறவுக்கு ஆளான நிலையில் மனம் பேதலித்து இவ்வாறு இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இவை மருத்துவ பரிசோதனை மூலம் நிரூபிக்கப்படினும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா?

இதற்கு யார் பொறுப்பு? செஞ்சிலுவைச் சங்கமா? இலங்கை அரசா?

இதைப்போன்ற இனவெறி, கொலைவெறி பாலியல் வெறிகளைத் தீர்த்துக்கொள்ளவா பாதுகாப்பு என்ற பெயரில் சிறிலங்கா மேலும் மூன்றாண்டுகள் முகாமில் வைக்க திட்டமிடுகிறது. ஒரு நாட்டின் குடிமக்களே அந்த நாட்டில் அகதி முகாமில் இருப்பது வேறு எங்காவது காணமுடியுமா?

on 12 Feb 2009

நன்றி-தகவல்:

3 comments:

Anonymous said...

~~ டி.சே தமிழன் இது பொய்யான சம்பவம். வன்னியில் இருந்து சாப்பாடு இல்லாமா காய்ஞ்சு கறுத்து போய் வரும் பெண்களை வல்லுறவு கொள்வதற்கு இராணுவத்திற்கு என்ன கேடு வந்தது. எவ்வளவு அழகான பெண்கள் கொழும்பு, மலையகம் மற்றும் இன்ன பிற பகுதிகளில் வசிக்கவில்லையா? இது புலிகள் மீது அனுதாபப்படுபவர்களின் கட்டுக்கதை.

இதற்கு யார் பொறுப்பு எனக் கேட்கின்றீர்களே..! வேறு யார் புலிகள் தான். புலிகள் போராட்டத்தை நிறுத்தினால் இவை எல்லாம் தானாகவே நின்று விடும். மக்கள் எல்லாம் அமைதியாக ஆவழவே விரும்புகிறார்கள்.~~

இப்பிடி யாராவது ஒருவர் அரசியல் ரீதியாகச் 'சரியாக' பின்னூட்டம் போட முடியும். என்ன செய்ய போகிறீர்களோ தெரியவில்லை. உங்களுக்கு இரத்த அழுத்தமோ மன அழுத்தமோ இருப்பின் இப்பதிவையே அழித்துவிடுங்கள் தயவுசெய்து.

இளங்கோ-டிசே said...

அநாம‌தேய ந‌ண்ப‌ருக்கு,
இர‌த்த‌ அழுத்த‌ம், ம‌ன‌ அழுத்த‌ம் என‌க்குண்டுதான். மூன்று நாட்க‌ளுக்கு முன், எங்க‌ள் ப‌க்க‌த்துவீட்டுக்கார‌ர் ஒருவ‌ர், எறிக‌ணை வீச்சில் கொல்ல‌ப்ப‌ட்ட‌போது ம‌ன‌ அழுத்த‌ம் ஏற்ப‌ட்ட‌துதான். இங்கே அவ‌ர்க‌ளின் உற‌வின‌ர் வீட்டுக்குத் துக்க‌ம் விசாரிக்க‌ச் சென்ற‌போது, இற‌ந்த‌ அவ‌ரின் ப‌ட‌த்தைப் பார்த்துக்கொண்டிருந்த‌போது ப‌ழைய‌ நினைவுக‌ள் பீறிட்டெழுந்து எல்லா அழுத்த‌மும் என் மேல் பார‌மாய் விழுந்த‌தும் உண்மைதான். ஊரில் இருந்த‌பொழுதுக‌ளில், ரியூச‌னுக்காய் தூர‌ இட‌ங்க‌ளுக்குப் போய்க்கொண்டிருந்த‌ கால‌ங்க‌ளில், சைக்கிள் ஓட‌த்தெரிந்தும் த‌னியே சொந்த‌மாய் சைக்கிள் வாங்க‌ வ‌ச‌தியில்லாத‌ கார‌ண‌த்தால் ந‌ட‌ந்தே போய்வ‌ந்த‌ கால‌த்தில், என்னை வ‌குப்புக்க‌ளுக்காய் அவ்வ‌ப்போது ஏற்றியிற‌க்கிய‌வ‌ர் இனி உயிரோடு இல்லையென்ற‌றிகின்ற‌போது வ‌ந்த‌து கோப‌மா அல்ல‌து ஆற்றாமையா நான‌றியேன்.

ஆனால் என‌க்கு உங்க‌ளைப் போன்ற‌ கோமாளிக‌ளைக் காணும்போது எவ்வித‌ அழுத்த‌மும் வ‌ருவ‌தில்லை. ந‌ம் கால‌த்தைய‌ கோமாளிக‌ள் ம‌னிதாபிமானிக‌ளை விட‌ நிறைய‌வே இருக்கின்றார்க‌ள்; ஆக‌வே நீங்க‌ளொரு விதிவில‌க்கும‌ல்ல‌. இல‌ங்கை இராணுவ‌ம் மீது நீங்க‌ள் கொள்ளும் ந‌ம்பிக்கை என்னைப் புல்ல‌ரிக்க‌வே செய்கின்ற‌து, ராஜ‌ப‌க்ச‌ ச‌கோத‌ர‌ர்க‌ள் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளைத் தேடிக்கொண்டிருக்கின்றார்க‌ள், ல‌ச‌ந்த‌ விக்ர‌ம‌சிங்க‌ போன்ற‌வ‌ர்க‌ளின் இட‌ங்க‌ளை இட்டு நிர‌ப்புவ‌த‌ற்காய். எத்த‌னையோ விட‌ய‌ங்க‌ள் சொல்வ‌த‌ற்கு இருக்கிற‌து. சும்மா காய்ச்ச‌லில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு வ‌ருமுன் த‌டுப்பூசி போட்டுக்கொள்ளுங்க‌ள் என்றாவ‌து அறிவுரை சொல்ல‌லாம்; ஆனால் புலிக்காய்ச்ச‌லில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு என்ன‌ க‌ஷாய‌த்தை நாம் கொடுப்ப‌து?

அண்மையில், கொல்ல‌ப்ப‌ட்ட‌ பெண் புலிக‌ள் மீது இல‌ங்கை இராணுவ‌ம் என்ன‌ செய்த‌து என்ப‌தை நீங்க‌ள் பார்த்திருக்க‌க்கூடும் (நீங்க‌ள் சொல்லும் எல்லா அழுத்த‌மும் என்னில் ஏறுமென்ற‌ அச்ச‌த்தால் அந்த‌ காணொளியை நான் பார்க்க‌வில்லை). அதும‌ட்டுமின்றி நான‌றிந்து இந்திய‌ இராணுவ‌ கால‌த்தில் இந்திய‌ இராணுவ‌ம் வ‌ய‌து போன‌ ஆச்சிமார்க‌ளில் கூட‌த் த‌ன‌து 'வீர‌த்தை'க் காட்டியபோது அங்கேயிருந்த‌வ‌ன் என்ற‌வ‌கையில் இராணுவ‌த்தின் எல்லா வீர‌ங்க‌ளும் நான‌றிவேன். என‌வே உங்க‌ள் உளுத்துப்போன‌ வாத‌ங்க‌ளை எங்கேயேனும் உங்க‌ளைப் போல‌க் காய்ச்ச‌லில் இருப்ப‌வ‌ர்க‌ளோடு வைத்துக்கொள்க‌.

கொழும்பு போன்ற‌ -எது ந‌ட‌ந்தாலும் உட‌னே வெளியுல‌கிற்குத் தெரிகின்ற‌ ஓரிட‌த்தில் இருப்ப‌வ‌ர்க்கே- என்ன‌ வித‌மான‌ சோத‌னைக‌ள் வீதிக‌ளில் ந‌ட‌ந்துகொண்டிருக்கின்ற‌ன‌ என்ப‌தையாவ‌து தாங்க‌ள் அறிவீரா? பேருந்துக‌ளில் போகும்போது திடீர்ச்சோத‌னை என்று ப‌ஸ்க‌ளிலிருந்து எல்லோரையும் இற‌க்கிவிட்டு ப‌ஸ்சுக்குள்ளேயே பெண்க‌ளை ம‌ட்டும் இராணுவ‌ம் சோத‌னை செய்வ‌தைப் ப‌ற்றி நேர‌டியாக‌ப் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சொல்ல‌க்கேட்டிருக்கின்றேன். அன்ப‌ரே உங்க‌ளோடு ம‌ட்டும் உல‌க‌ம் முடிவ‌தில்லை என்ப‌த‌றிக‌. ந‌ன்றி.

Anonymous said...

விருப்ப‌முடைய‌வ‌ர்க‌ள் நாகார்ஜூன‌னின் தள‌த்திலுள்ள‌ இந்த‌க்க‌ட்டுரையையும் இத‌னோடு சேர்த்து வாசிக்க‌லாம்:
ஈழம், இனி தடுப்புமுகாம்-அகதிமுகாம் வடிவத்தில்?