சுகந்தி சுப்ரமணியத்தின் 'மீண்டெழுதலின் இரகசியம்' தொகுப்பை நாலைந்து வருடங்களுக்கு முன் வாசித்திருந்தேன். இன்றைய தமிழகப்பெண் கவிஞைகளுக்கு முன்னோடியாக இருந்த அக்கவிதைகளை சமகாலத்தில் அவ்வளவாய்ப் பேசப்படவில்லையேயென்ற எண்ணமே வாசித்த காலத்தில் தோன்றியது. (சுகந்தி சுப்ரமணியத்தின் மறைவிற்கான அஞ்சலியாய் சில கவிதைகளை அவரின் தொகுப்பிலிருந்து எடுத்துப்போடலாமென்றால் இத்தொகுப்பு என் வசமில்லை; நண்பர்களிடம் வாசிக்க இரவல் கொடுத்தது, திருப்பி வாங்க மறந்துவிட்டேன். )
ஜெயமோகன் ஒரு அஞ்சலிப்பதிவை எழுதியுள்ளார். அவரது பதிவை இப்போது வாசித்த பின்னரே சுகந்திக்கு உளவியல் சிக்கல்கள் இருந்ததென்பதையும், அவர் சுப்பிரபாரதி மணியனின் துணைவியார் என்பதையும் அறிகின்றேன். இவற்றை அறியாமல் சுகந்தியின் கவிதைகளை வாசித்தபோதும், இனி இன்னொரு முறை வாசிக்கும்போதும் வேறு வேறு விதமான வாசிப்பு அனுபவம் கிடைக்கலாம்.
பொடிச்சியின் பதிவில் சுகந்தி சுப்பிரமணியத்தின் சில கவிதைகளை வாசிக்கலாம்.
2 comments:
டிசே சுகந்தியின் தனிப்பட்ட வாழ்வின் கதையெல்லாம் எதற்குப் பகிரங்கமாக ஜெயமோகன் எழுதியிருக்கின்றார்? :(
அவரின் கவிதைகளில் சில எனக்குப் பிடித்திருந்தன / பிடிக்கின்றன. மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது.
பகிரங்கமாக ஜெமோ எழுதியிருப்பதால் அல்ல... பலருக்கு இவ்விஷயங்கள் முன்பே தெரியும்தானே (இந்த அளவிற்கு விரிவாக இல்லாவிட்டாலும்).
Post a Comment