Monday, February 09, 2009

Grammyயில் பாடிய‌ முத‌ல் த‌மிழ்ப்பெண்

மாதங்கி 'மாயா' அருள்பிரகாசம்




மியா (M.I.A) Paper Planes என்ற‌ பாட‌ல் கிராமியில், Record of the Year விருதுக்காய் பரிந்துரைக்க‌ப்ப‌ட்டாலும், அஃதொரு பெரிய‌ வ‌கை விருதாகையாலும், மியாவின் தீவிர‌ அர‌சிய‌ல் நிலைப்பாட்டாலும் அவ‌ருக்கு விருது கிடைப்ப‌த‌ற்கான‌ வாய்ப்பு மிக‌ அரிதே என்று ந‌ம்பியிருந்தேன். விருது கிடைத்த‌ல்/கிடைக்காதிருத்த‌ல் என்ற‌ நிலைப்பாட்டுக்கு அப்பால், கிராமிக்கு ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌ முத‌ல் த‌மிழ‌ர் என்ற‌ பெருமை மியாவுக்குரிய‌து. Rap மிக‌ப்பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ JayZ, Kanye West, T.I, Lil Lil Wayne போன்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ஒரு த‌னிப்பெண்ணாய் சேர்ந்து பாடிய‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

Slumdog Millionaire ப‌ட‌த்தின் இசையை விய‌ந்தெழுதும் த‌மிழ‌க‌ப் ப‌த்திரிகைக‌ள் ஏ.ஆர்.ர‌ஹ்மானைப் பாராட்டிய‌வ‌ளவுக்கு, அப்ப‌ட‌த்தில் ப‌ங்காற்றிய‌ மியா ப‌ற்றிச் சிறு குறிப்புக்கூட‌ எழுத‌வில்லை என்ப‌து ஒரு இருட்ட‌டிப்பு என‌வே எடுத்துக்கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து. Slumdog Millionaire, Sound Trackல் மூன்று பாட‌ல்க‌ளில் மியாவின் ப‌ங்க‌ளிப்பு இருப்ப‌துட‌ன், ப‌ட‌த்தில் முத‌லில் வ‌ரும் 'ஓ சாயா' பாட‌லில் ஏ.ஆர்.ஆரோடு மியா சேர்ந்து பாடியிருக்கின்றார் என்ப‌தும், அப்பாட‌ல் ஒஸ்காருக்கு பாட‌லுக்கான‌ விருதுக்கு ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தும் க‌வ‌ன‌த்திற்குரிய‌து. கோல்ட‌ன் குளோப்ஸ் விருதைப் பெற்ற‌ ஏ.ஆர்.ர‌ஹ்மான் கூட‌, ஏற்புரையில் மியாவுக்கு ந‌ன்றி கூறியிருப்ப‌தை நினைவிற் கொள்ள‌வேண்டும். சாரு போன்ற‌ 'க‌ல‌க‌க்கார‌ர்க‌ள்' கூட‌, த‌ங்க‌ள் க‌ட்டுரையில் மியா ப‌ற்றி எந்த‌க் குறிப்பையும் எழுத‌வில்லை. எமினெமின் பாட‌ல்க‌ளை விட‌ வலிமையான‌ அர‌சிய‌ல் பேசும் மியாவின் பாட‌ல்க‌ளை மிஸ்ர‌ர் பெருமாளுக்கோ அல்ல‌து ஜ‌ன‌நாத‌னுக்கோ எந்த‌ப் ப‌தின்ம‌க்காரியும் அறிமுக‌ப்ப‌டுத்த‌வில்லை என்ப‌து 'த‌மிழ்ச்சூழ‌லில்' க‌வ‌லைக்குரிய‌ விட‌யந்தான்.


Paper Planes by M.I.A

மேற்குல‌கில் ஏ.ஆர்.ஆரை விட‌ மியாவையே நிறைய‌ப்பேர் அறிந்திருக்கின்றார்க‌ள் என்ப‌தும், மேலைத்தேய‌/கீழைத்தேய‌ இசைக்க‌ல‌ப்பில் ஒரு புதுவித‌ இசைப்பாதையில் ப‌ய‌ணிக்க‌, மியாவின் பாட‌ல்க‌ள் ஒரு பாதைய‌மைத்துக்கொடுப்ப‌தை ‍-முக்கிய‌மாய் இருவேறு க‌லாசார‌த்தில் உழ‌ன்றுகொண்டிருக்கும் எம்மைப்போன்ற‌வ‌ர்க‌ளுக்கு‍- மியாவின் பாட‌ல்க‌ள் மிக‌ நெருக்க‌மாக‌ இருப்ப‌தைச் சுட்டிக்காட்ட‌ வேண்டியுள்ள‌து.



M.I.A குறித்து ஏற்க‌ன‌வே ப‌திவிலிட்ட‌வை:

I’M ARMED AND I’M EQUAL

மாயா அருள்பிரகாசம் (M.I.A)

5 comments:

Anonymous said...

டிசே அய்யா
/Slumdog Millionaire ப‌ட‌த்தின் இசையை விய‌ந்தெழுதும் த‌மிழ‌க‌ப் ப‌த்திரிகைக‌ள் ஏ.ஆர்.ர‌ஹ்மானைப் பாராட்டிய‌வ‌ளவுக்கு, அப்ப‌ட‌த்தில் ப‌ங்காற்றிய‌ மியா ப‌ற்றிச் சிறு குறிப்புக்கூட‌ எழுத‌வில்லை என்ப‌து ஒரு இருட்ட‌டிப்பு என‌வே எடுத்துக்கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து./

தமிழகப்பத்திரிகைகள் எதற்கு? நெட்டுல கூட விமர்னம் பண்ணற பேர்வழிங்க சிலரை காணலையா? இலக்கியமும் இசையும் நமக்கு மத்தவுங்கா அறிவுஜீவி பட்டம் சூத்துக்கொள்ளத்தானேய்யா?

Anonymous said...

படத்தை பார்த்ததும் எனக்கும் இப்படி தான் தெரிந்தது. மாயாவை இந்தியர்கள் இருட்டடிப்பு செய்ததில் ஆச்சரியம் இல்லை தான். ஆனால் வலையுலக நண்பர்களும் செய்வது ஏனோ........

பனிமலர்.

King... said...

நானும் மாயாவைப்பற்றி எந்த கட்டுரையிலும் படிக்கவில்லை தகவல் சேகிரித்து எழுதுகிற கலகக்காரர் கூட இதை எழுதவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை...

இளங்கோ-டிசே said...

ந‌ன்றி ந‌ண்ப‌ர்க‌ளே.
.....
/தகவல் சேகரித்து எழுதுகிற கலகக்காரர் கூட இதை எழுதவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை... /

இங்கே ப‌ல‌ வானொலிக‌ளிலும்,கிள‌ப்புக‌ளிலும் 'ச‌க்கை போட்ட‌' பாட‌லான‌ Bird Flu பாட‌ல் முற்றுமுழுதாக‌த் த‌மிழ‌க‌த்தில் எடுக்க‌ப்ப‌ட்ட‌து. அது ம‌ட்டுமின்றி விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளின் கானாப் பாட‌ல் கூறுக‌ளையும், அம்ம‌க்க‌ளையும் உள்ள‌ட‌க்கிய‌ இப்பாட‌ல் 'விளிம்புக‌ள்' குறித்துச் ச‌தா க‌தைப்ப‌வ‌ர்க‌ளுக்கு க‌ண்ணில் ப‌டாத‌த‌ற்கு ம‌ப்பா அல்ல‌து ச‌ந்திர‌ கிர‌க‌ண‌மா என்று நானும் யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.

Anonymous said...

You are expecting too much from those who know too little. Charu is a charlatan and others are no different. How many of them really know or care to know what is happening in other cultures and
in other parts of the world or know enough to critically evaluate and write convincingly.Today you can google and become an instant
expert in any damn thing.